16-07-2019, 06:39 PM
சபாஷ் நாயுடு' டிராப், 'தலைவன் இருக்கின்றான் ரீ-ஸ்டார்ட்
'பாபநாசம்' படத்திற்குப் பிறகு கமல்ஹாசன் நடித்து வெளிவந்த 'தூங்காவனம், விஸ்வரூபம் 2' ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாக அமையவில்லை. அதற்குப் பிறகு கமல்ஹாசன் ஆரம்பித்த 'சபாஷ் நாயுடு' படமும் அமெரிக்காவில் ஒரு கட்டப் படப்பிடிப்புடன் அப்படியே நின்று போனது. 'இந்தியன் 2' நிலைமை என்னவென்றே புரியாமல் இருக்கிறது.
'தலைவன் இருக்கின்றான்' என்ற படத்தை 2010ம் ஆண்டிலேயே ஆரம்பிக்கப் போவதாக அறிவித்தார்கள். அதன்பின் அந்தப் படத்தின் நிலை என்ன ஆனதென்றே தெரியாமல் இருந்தது. அவ்வப்போது ஏதாவது ஒரு தகவல் வெளியாகும், ஆனால் ஒன்றும் நடக்காது. 2017ம் ஆண்டில் மீண்டும் படத்தை ஆரம்பிக்கப் போவதாக அறிவித்தார்கள். கடந்த இரண்டு வருடங்களாக எதுவும் நடக்கவில்லை.
இந்நிலையில் நேற்று திடீரென 'தலைவன் இருக்கின்றான்' படத்திற்கு இசையமைக்கப் போவதாக ஏஆர் ரஹ்மான் டுவிட்டரில் அறிவித்தார். அதற்கு பதிலளித்து கமல்ஹாசனும் தன்னுடைய நன்றியைத் தெரிவித்தார்.
லைகா நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்ட படங்கள்தான் 'சபாஷ் நாயுடு, இந்தியன் 2'. இப்போது அந்தப் படங்களை அப்படியே விட்டுவிட்டு கமல்ஹாசன் 'தலைவன் இருக்கின்றான்' படத்தை ஆரம்பிக்க உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
'சபாஷ் நாயுடு' படம் கண்டிப்பாக டிராப் என்கிறார்கள். 'இந்தியன் 2' சஸ்பென்ஸ் மட்டும் தொடர்கிறது. ஆகஸ்ட்டில் தொடங்கும் என கூறப்படுகிறது. கமல்ஹாசன் நடிக்கும் படங்களைப் பொறுத்தவரையில் அவர்தான் 'பிக் பாஸ்'. அவர் என்ன சொல்கிறாரோ அதுதான் நடக்கும்

first 5 lakhs viewed thread tamil