16-07-2019, 06:02 PM
தபால் துறை தேர்வு: தமிழில் எழுதலாம்
புதுடில்லி: கடந்த ஞாயிற்றுக்கிழமை( ஜூலை 14) நடந்த தபால்துறை தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். மேலும், இனி வரும் நாட்களில், தமிழ் உட்பட அனைத்து பிராந்திய மொழிகளிலும் தபால் துறை தேர்வு நடத்தப்படும் எனக்கூறியுள்ளார்.
தபால் துறை போட்டி தேர்வுகள், தமிழ் உட்பட, அந்தந்த மாநில மொழிகளில் நடத்தப்பட்டு வந்தன. இனிமேல், ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் மட்டுமே நடத்தப்படும் என அறிவித்தது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந்நிலையில், ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தபால் தேர்வு நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த ஐகோர்ட், தேர்வை நடத்த அனுமதி வழங்கியது. ஆனால், தேர்வு முடிவை வெளியிட தடை விதித்தது. இதன்படி, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை14) தேர்வு நடந்தது
இந்நிலையில், தபால்துறையின் முடிவை கண்டித்து ராஜ்யசபாவில் அதிமுக எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். அவை ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்ந்து, ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அளித்த பதிலில், கடந்த 14ம் தேதி நடந்த தபால்துறை தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், இனிமேல், தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளில் தேர்வு நடத்தப்படும் எனக் கூறியுள்ளார்

first 5 lakhs viewed thread tamil