Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
குறும்படம்:
வேறு யாருக்கும் இதுவரை செய்யப்படாத வகையில், ஹவுஸ்மேட்ஸ் தன்னை பற்றி சொல்லும் விஷயங்களை பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்து வனிதாவும் கேட்டார். பிறகு தன்னை பற்றிய நியாயத்தை எடுத்துக்கூற அவருக்கு நீண்ட நேரம் வாய்ப்பு வழங்கப்பட்டது. இறுதியாக திரையிடப்பட்ட குறும்படத்திலும், வனிதா மீது பரிவு ஏற்படும் வகையிலான காட்சிகளே காண்பிக்கப்பட்டன.

[Image: vanitha223-1563164200.jpg]
 

டிஆர்பிக்கு உதவினார்:
கடந்த மூன்று வாரமாக பிக் பாஸ் டிஆர்பி எகிற வனிதா தான் காரணம் என்பது ஊர் அறிந்த விஷயம். அதுவும் ஆள்கடத்தல் வழக்கு தொடர்பாக வனிதாவிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, ஒட்டுமொத்த மீடியாக்களின் கவனமும் பிக் பாஸ் மீது தான் இருந்தது. இதுவே அந்த வார டிஆர்பிக்கு கேரண்டியானது.
[Image: bigg-boss1211-1563158455.jpg]
 

இது தானா அது?
ஹவுஸ்மேட்சிடம் சண்டை போடும் போதெல்லாம் வனிதா ஒரு விஷயத்தை கூறுவார். அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொருவரும் ஒரு விதமான காண்ட்ராக்டில் கையெழுத்திட்டிருப்பதாக அவர் கூறுவார். இப்போது வனிதாவுக்கும் பிக் பாஸ்க்கும் இடையேயான காண்ட்ராக்ட் என்ன என்பது தெளிவாக தெரிந்துவிட்டது. தான் சண்டைக்கோழியாக வீட்டில் திரிந்தாலும், வீட்டைவிட்டு வெளியே செல்லும் போது தனது இமேஜை காப்பாற்ற வேண்டும் என்பதே அது. அதன்படியே பிக் பாஸ் ஸ்கிரிப்ட் எழுதப்பட்டிருக்கிறது என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 16-07-2019, 11:33 AM



Users browsing this thread: 4 Guest(s)