Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
வனிதா வெளியேற இதுதான் காரணமா?-

சென்னை: பிக் பாஸ்க்கும் வனிதாவுக்கும் இடையேயான ஒப்பந்த உடன்படிக்கை என்ன என்பது தெரியவந்துள்ளது.
ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டார் வனிதா. பிக் பாஸ் வீட்டில் கடந்த மூன்று வாரமாக அவரது குரல் தான் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தது. அதுவே அவரது வெளியேற்றத்துக்கு காரணமாகிவிட்டது.
எல்லாப் பிரச்சினையிலும் வாண்டடாக உள்ளே நுழைந்து பஞ்சாயத்து செய்த வனிதாவின் நடவடிக்கைகள் பார்வையாளர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. சக போட்டியாளர்களுக்கும் அவர் மீது கோபம் இருந்தது உண்மையே.
கெட்ட இமேஜ்:
அதனால் தான் தர்ஷன் வனிதாவை எதிர்த்து நின்றபோது, உள்ளேயும், வெளியேயும் கைத்தட்டல்கள் காதை கிழித்தன. முதல் நாளில் இருந்தே வனிதா மீது ஒரு வகையான கெட்ட இமேஜ்தான் இருந்தது. அந்த இமேஜ் அப்படியே வளர்ந்து, மூன்றாவது வாரத்தில் உச்சிக்கு சென்றது.
[Image: vanitha22-1563164193.jpg]
 

வனிதா எவிக்சன்:
இந்த நிலையில் தான் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டவர்களில் வனிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியிருக்கிறார். ஆனால் அவர் வெளியேறிய பிறகு, அவர் மீது மக்களுக்கு பரிவும், பரிதாபமும் ஏற்பட வேண்டும் எனும் நோக்கில் நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. வனிதா வெளியேற என்ன காரணம் என ஹவுஸ்மேட்சிடம் கமல் கேட்டபோது, லாஸ்லியா மற்றும் தர்ஷனை தவிர மற்ற அனைவரும் வனிதாவை பற்றி பாசிடிவ் விஷயங்களையே பகிர்ந்தனர்.
[Image: vanitha2-1563164186.jpg]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 16-07-2019, 11:32 AM



Users browsing this thread: 3 Guest(s)