Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
பெரிய நடிகர்கள் எல்லாம் பயந்துகிட்டு இருக்கும் போது சூர்யாவாவது பேசறாரேனு பெருமைப்படுங்க!.. சீமான்
சென்னை: புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா பேசுவதில் என்ன தவறு இருக்கிறது என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 40வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு சூர்யா பேசினார். அப்போது அவர் பேசுகையில் மூன்று வயதிலேயே 3 மொழிகள் திணிக்கப்படுகிறது. முதல் தலைமுறை மாணவர்கள் எப்படி இதனை சமாளிக்கப் போகிறார்கள்.
எல்லோரும் அமைதியாக இருந்தால் இது நிச்சயம் திணிக்கப்படும். எனவே புதிய கல்வி கொள்கை மீதான ஆலோசனைகளை மாற்றங்களை ஆசிரியர், பெற்றோர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து உரக்கச் சொல்லுங்கள் என்றார்.


[Image: seeman1223-1563243868.jpg]


கண்டிப்பு
சூர்யாவின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவரது கருத்தை எச் ராஜா, தமிழிசை, அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ஜெயக்குமார் ஆகியோர் கண்டித்தனர்.

[Image: surya-agaram-foundation656-1563243943.jpg]
 
சூர்யா பேச்சு
இந்த நிலையில் இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில் புதிய கல்விக் கொள்கையில் சூர்யா பேசியதில் அரசியல் பார்க்கக் கூடாது. இது அடிப்படை உரிமையாகும். நான் பல ஆண்டுகளாக பேசுவதைத்தான் சூர்யா பேசியுள்ளார்.

[Image: seeman233-1563243885.jpg]
 
தைரியம்
அவர் பேசியதில் மகிழ்ச்சியும் பெருமையும்தான் அடைய வேண்டும். சினிமா துறை சார்ந்த பெரிய நடிகர்கள் எல்லாரும் பயந்து கொண்டு இருக்கும் போது சூர்யா தன் மனதில் பட்டதை தைரியமாக கூறியுள்ளார்.


[Image: seeman-1563243892.jpg]

சமச்சீர் கல்வி
கல்வி என்பது மானுட உரிமை. அதை நியாயமாக கொடுக்க வேண்டியது அரசின் கடமையாகும். சூர்யா கேட்கும் கேள்விகளில் எத்தனை நியாயம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கருணாநிதி ஆட்சியில் சமச்சீர் கல்வி கொண்டு வந்தார்கள். ஆனால் சமச்சீர் கல்வி முறை என்பது இல்லை.

[Image: seeman11-1563243876.jpg]
 
ஏற்க முடியாது
கிராமப்புற பள்ளியில் படிக்கும் மாணவர்களும் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களும் ஒரே தகுதி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பது வாய்ப்பில்லை. இது எவ்வாறு சமவாய்ப்பாக அமையும். இதைத்தான் சூர்யா சொல்கிறார். எனவே புதிய கல்விக் கொள்கை என்பதை ஏற்கவே முடியாது என்றார் சீமான்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 16-07-2019, 11:04 AM



Users browsing this thread: 104 Guest(s)