16-07-2019, 10:46 AM
9.
நான் அமைதியாக ஹரீசையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவன், வீடியோவை பார்த்து விட்டு இன்னமும் கோபத்தில் இருந்தான்.
சொல்லுடா! இப்ப சொல்லுறீயா இல்லையா? உன் மேல எவ்ளோ பாசம் வெச்சிருந்தா தெரியுமா? கூட பொறந்த தம்பிக்கும் மேல நினைச்சிருந்தாடா உன்னை! ஆனா நீ…
எப்டிடா, இப்படி ஒரு துரோகத்தை, அவளுக்கு செய்ய மனசு வந்தது? அவ, ரொம்ப நல்லவடா! வாழ்கைல, பாசத்துக்காக எவ்ளோ ஏங்குனா தெரியுமா? எனக்கு நீங்க இருக்கீங்க, மதனுக்கு யாரும் இல்லையேன்னு எத்தனை தடவை ஃபீல் பண்ணியிருக்கா தெரியுமா?
அவளுக்கு எதிராவே இவ்ளோ பெரிய துரோகத்தை பண்ணியிருக்கியே? ச்சே!
ஹாலோ, கொஞ்சம் நிறுத்துறீங்களா? என்னைக் கேக்க உங்களுக்கு என்ன தகுதியிருக்கு?
எ.. என்ன சொல்ற?
ம்ம்ம்! வீடியோல நான் பேசுனதை மட்டுந்தான் பாத்தீங்களா? உங்க அப்பா மாதிரின்னு ஃபீல் பண்ணிட்டு இருந்தீங்களே, அந்தாளு இல்லை? அந்தாளு பேசுனதை கவனிக்கலை?
ஹரீசின் முகத்தில் அதிர்ச்சி! இப்பதான் உறைக்குதா இவனுக்கு?
அப்படிப்பட்ட ஆளு பண்ண துரோகத்தை கேக்கத் துப்பில்லை! நான் பண்ண துரோகம்தான் உங்க கண்ணுக்கு தெரிஞ்சிதா?
நான், அவ மேல் என்னிக்கும் பாசத்தை காமிச்சது கிடையாது. அவதான் என் மேல பாசத்தை காமிச்சிருக்கா. ஆனா, உங்க விஷயம் எப்படி? அப்பா மாதிரி, அம்மா மாதிரின்னு உருகுனீங்களே, அவிங்க பண்ண துரோகத்துக்கு என்ன பதில்?
ஹரீஸ் அமைதியாகவே இருந்தான்.
அந்தாளு மேல, உங்க மனைவி கம்ப்ளெயிண்ட் சொல்லவேயில்லையா? எத்தனையோ தடவை சொல்லியிருப்பாங்களே? அப்பல்லாம், நீங்க என்ன கிழிச்சிங்க? இப்ப கோபப்படுறதுக்கு?
ஹரீசின் முகம் பேயறைந்தது போல் ஆயிற்று. உண்மைதானே! அவள் உள்ளுக்குள் எவ்வளவு சித்ரவதை அனுபவித்திருப்பாள்.
புருஷன், பொண்டாட்டியை நம்ப மாட்டாரு. மாமனாரு, தப்பா பாப்பாரு. மாமியாரு, சீர் கொண்டு வரலைன்னு அசிங்கமா பேசுவாங்க. இதெல்லாம் துரோகம் இல்லை, நான் செஞ்சதுதான் துரோகம், இல்லை?
----
அவ என்னை நம்புனதை விட, உங்க மேலதான் முழு நம்பிக்கையும் வெச்சிருந்திருப்பா? நீங்க நம்புனீங்களா? அப்புறம் என்ன தகுதி இருக்கு, என்னைக் கேள்வி கேட்க! ம்ம்?
ஹரீஸ் அதிர்ந்து, அப்படியே அமர்ந்தான். அவன் கண் கூட கலங்கிவிட்டது.
எனக்கும் அவனைப் பார்க்க பாவமாகத்தான் இருந்தது. இருந்தும் சொன்னேன். இப்பியும், இந்த வீடியோவைப் பாக்காட்டி, நம்பியிருப்பீங்களா என் பேச்சை? நீங்கல்லாம் கட்டின பொண்டாட்டி பேச்சையே நம்பாத ஆளு! என் பேச்சுக்கெல்லாம் என்ன முக்கியம் கொடுத்திருப்பீங்க?
இப்படியுமா ஒரு மனுஷன் கண்மூடித்தனமான முட்டாளா இருப்பாங்க?
ப்ளீஸ் மதன். நான் பண்ணது எல்லாம் தப்புதான். அதுக்கு என்ன தண்டனை வேணா நான் ஏத்துக்குறேன். ஆனா, அவளை ஒரு தடவை நான் பாக்கனும். அ… அவ உ… உயிரோட இருக்கால்ல?
நடந்த சம்பவங்களின் அதிர்ச்சியும், அவள் சூசைட் செய்து கொண்டாள் என்ற செய்தியும் அவனை பயங்கரமாகத் தாக்கியிருந்தது. அவன் குரல் நடுங்கியது!
எதுக்கு? இருந்தா கொன்னுடலாம்னா?
போதும் மதன்! என்னை என்ன வேணா பண்ணிக்கோ. அப்படி அவளுக்கு ஏதாவது ஆகியிருந்தா நான் மட்டும் உயிரோடவா இருக்கப் போறேன். உன் கையாலேயே என்னைக் கொன்னாக் கூட நான் தடுக்க மாட்டேன். அவ, நல்லாயிருக்கான்னு தெரிஞ்சா மட்டும் போதும். பாவம் அவ! எந்தளவு சித்ரவதை அனுபவிச்சாளோ? அந்தாளு பண்ணதை விட, நான் நம்பலைன்னு தெரிஞ்சதுக்குதான் துடிச்சிருப்பா. நானே காரணமாயிட்டேனே! எவ்ளோ நல்லவ தெரியுமா? ப்ச்…
ஹரீஸ் ஏறக்குறைய தனக்குத் தானே உளற ஆரம்பித்தான்.
என் அக்கா சொன்னது உண்மைதான். ஹரீஸ் உண்மையாலுமே, நல்லவனே. அவளது முழு அன்பிற்கும் தகுதியானவனே. தெரிந்து எந்தத் தப்பும் செய்யவில்லை.
ஹரீஸை நெருங்கி, தோளில் கையை வைத்தேன்.
அவ, நல்லாத்தான் இருக்கா. டோண்ட் வொர்ரி!
டக்கென்று நிமிர்ந்தான். ஈசிட்?! தாங்க்ஸ் மதன், தாங்க்ஸ்! தாங்க் யூ சோ மச்!
திடீரென்று உணர்ந்தார் போல் கேட்டான். நீ… நீதான் சித்தப்பா கூட சேந்து ஏதோ ப்ளான்லாம் பண்ணீல்ல? இப்ப எப்புடி? என்ன ஆச்சு? அவ நல்லாதானே இருக்கா? நீ உண்மையைத்தானே சொல்ற?
நடந்த விஷயங்களின் தாக்கம் அவனை யோசிக்க விட வில்லை என்பதும் கூட, அவன் எந்தளவிற்கு என் அக்காவிற்காக யோசிக்கிறான் என்ற முக்கியத்துவம் அதில் தெரிந்தது.
நான் புன்னகைத்தேன். நடந்த எல்லாவற்றையும் சொன்னேன்.
நான் சொல்லச் சொல்ல, அவன் முகத்தில் ஏகப்பட்ட உணர்வுகள். பெரும்பாலும் வேதனை, இரக்கம், தன் மேலேயே கோபம், என் மேல் நன்றியுணர்வு இப்படி பல…
அதிலும் அவள் தற்கொலைக்கு முயற்சி செய்தாள், சரியான சமயத்தில் நான் தடுத்தேன் என்பதும், அவன் மேலேயே அவனுக்கு கோபமும், என் மேல் மிகப் பெரிய நன்றியுணர்வும் வந்தது. என் கையை, இறுகப் பற்றிக் கொண்டான்.
எல்லாம் சொல்லி முடித்த பின், கொஞ்ச நேரம் அமைதியாகவே இருந்தான். பின் என்னை நிமிர்ந்து பார்த்தவன்,
ரொம்ப தாங்க்ஸ் மதன். என் வாழ்க்கையையே நீ மீட்டு கொடுத்திருக்க. உனக்கு நான் ரொம்ப கடமைப் பட்டிருக்கேன். ரொம்ப தாங்க்ஸ்! அவன் குரல் மிகவும் நெகிழந்து இருந்து.
எனக்கே, ரொம்ப ஃபீல் ஆனது. ஆனால், மனதுக்கு சந்தோஷமாகவும் இருந்தது.
இட்ஸ் ஓகே மாமா! விடுங்க.
தெரிஞ்சா, நீங்க எவ்ளோ ஃபீல் பண்ணுவீங்கன்னு சொன்னா, அவ சொன்னது கரெக்ட்டாதான் இருக்கு!
ஹரீஸ் விரக்தியாய் சிரித்தான். அவ, எப்பவுமே கரெக்ட்டாதான் சொல்லுவா. சரியாத்தான் பண்ணுவா! நாந்தான், புரிஞ்சிக்கலை. யோசிக்க, யோசிக்க, அவ, எந்தளவு எனக்கு அறிவை கொண்டு வர போராடியிருக்கான்னு, புரியுது! நாந்தான் முட்டாளாவே இருந்திருக்கேன்.
சரி விடுங்க! இப்டியே ஏன் பேசிட்டிருக்கீங்க?
அவ, இப்ப எப்டி இருக்கா மதன்? நல்லாயிருக்கால்ல? எங்க இருக்கா?
அவ, வீட்லதான் இருக்கா. நீங்க வர்றது அவளுக்கு தெரியாது. ஒரு சர்ப்ரைசா இருக்கட்டும்னு. இன்னிக்கு வெட்டிங் டே இல்லியா, காலையிலியே ஃபோன் ஸ்விட் ஆஃப் பண்ணி வெக்கச் சொன்னதுல, மூஞ்சி உம்முனு இருந்துது. உங்களைப் பாத்துட்டா, ப்ரைட் ஆகிடும்!
இப்பொழுது, ஹரீசின் முகம் கொஞ்சம் மாறியது.
எ… என்னை மன்னிச்சிடுவால்ல? அவ, ரொம்ப கஷ்டப்பட்டிருக்காளே, நானே காரணமாயிட்டேனே?
ஹரீசைப் பார்க்க பார்க்க, தெரியாமல் தவறு செய்து விட்டு, வருந்தும் குழந்தையைப் போல் இருந்தது. எனக்கே, பாவமாய் இருந்தது. அதே சமயம், உண்மையையும் சொல்ல நினைத்தேன்.
நீங்களே அவகிட்ட பேசுங்க! ஆனா, ஒண்ணு மட்டும் நிச்சயம். நீங்க சொன்ன மாதிரி, நீங்களே நம்பலைங்கிறதுதான், அவளை ரொம்பவே பாதிச்சது.
அதே சமயம், உங்களை பயங்கரமா லவ் பண்ரா! ஒரு முறை, நான் செத்துடுவேன், ஆனா, இந்தத் துரோகிங்கிட்ட அவரை தனியா விட்டுட்டு போறதை நினைச்சாதான்னு புலம்புனா!
நீங்க மன்னிக்க முடியாத தப்பு பண்ணதா எனக்கு தோனலை. அவளாலியும், உங்க மேல ரொம்ப நேரம் கோபமா இருக்க முடியாது. நீங்க புரிஞ்சுகிட்டீங்கன்னாலே, அவ ரொம்ப சந்தோஷமாகிடுவா.
என்னதான் அவ, என்னுடைய அன்புக்காக என்னென்னாலோமோ செஞ்சிருந்தாலும், இன்னிக்கு, நான் அவ மேல, எவ்ளோ அன்பு செலுத்துனாலும், அவ மனசு என்னமோ உங்களைத்தான் தேடுது.
போங்க, போய் பேசுங்க, முதல்ல கோவப்படுவா. அப்புறம், சமாதானமாகிடுவா!
போலாமா?
ம்.. போலாம் மதன். தாங்க்ஸ்!
அப்புறம் வீட்டிற்குச் சென்றோம்.
ஹரீஸை வெளியேயே இருக்க வைத்து விட்டு, நான் மட்டும் அவள் அறைக்குள் சென்றேன். அவள் கொஞ்சம் சோகமாய் இருந்தாள்.
ஹாய்! ஹாப்பி வெட்டிங் டே!
தாங்க்ஸ்டா!
என்ன ரொம்ப சோகமா இருக்க?
இருக்காதா, அவரு ஃபோன் பண்ணுவாருடா! நீ, காலைலியே ஸ்விட்ச் ஆஃப் பண்ண சொல்லிட்டு, ஃபோனையும் புடுங்கிட்டு போயிட்ட. எனக்கு அவர்கிட்ட பேசனும்டா!
பேசலாம், பேசலாம். அவரும் கொஞ்சம் தவிக்கட்டும். நீ சொன்னப்ப எல்லாம் கேட்டிருந்தா, இன்னிக்கு இந்த நிலைமை இல்லீல்ல. கொஞ்சம் அவரும் தவிக்கட்டும்.
ப்ச்… இப்ப நீ ஃபோனைத் தரப் போறியா இல்லியா?
மாட்டேன்!
டேய், ப்ளீஸ் டா!
சும்மா அந்தாளுக்காக ஓவரா…
ஏய், நீ ஃபோனைக் கொடுக்காம கூட இரு. ஆனா, அதுக்காக, அவரை மரியாதையில்லாம, அதுவும் என் முன்னாடியே பேசுற வேலையெல்லாம் என்கிட்ட வெச்சுக்காத!
அவள் கோபத்தில் பட படத்தாள்!
எனக்கும் கஷ்டமா இருந்தது. ரொம்ப விளையாடுறோமோ?
பார்றா, அவரைச் சொன்னா வர்ற கோபத்தை?
ஆமா, நீ என் மேல எவ்ளோ பாசமா வேணா இருக்கலாம். என்னை எவ்ளோ வேணா திட்டலாம். ஆனா, அவரைத் திட்டறதுக்கு உனக்கு அனுமதி கிடையாது. எனக்கு ஃபோனே வேணாம்…
நான் சிரித்துக் கொண்டே சொன்னேன், நான் ஃபோன்லாம் கொடுக்க மாட்டேன். ஆனா, அதுக்குப் பதிலா ஆளையேக் கூட்டிட்டு வந்திருக்கேன். நேர்லியே பேசிக்கோ!
எ… என்னடா சொல்ற!
ஹாரீஸ், உள்ள வாங்க! நான் கிளம்பறேன்!