Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
[Image: screenshot-www.indiatoday.in-2019.07.13-09_52_33.png]
அதனையடுத்து, தோனி 7 ஆவது வீரராக களமிறக்கப்பட்டது குறித்து விமர்சனங்கள் எழுந்தது. முன்னாள் வீரர்கள் சச்சின், கங்குலி, கவாஸ்கர் உள்ளிட்ட வீரர்கள் தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா ஆகியோருக்கு பின் களமிறக்கப்பட்டது குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில், தோனி 7 ஆவது வீரராக களமிறக்கப்பட்டது குறித்து ரவிசாஸ்திரி விளக்கம் அளித்துள்ளார். , “அது முற்றிலும் அணியாக எடுத்த முடிவு. அதில் எல்லோருடைய பங்கும் உண்டு. அது ஒரு எளிமையான முடிவுதான். தோனி தொடக்கத்திலே களமிறங்கி ஆட்டமிழக்க வேண்டும் என விரும்புவீர்களா? அது ஒட்டுமொத்த வெற்றியை நோக்கிய பயணத்தை தடுத்துவிடும்.
[Image: ewovjgezrp-1536158374.jpg]
அனுபவம் வாய்ந்த ஆட்டம் கடைசியில் தேவைப்பட்டது. அவர் எல்லா காலங்களிலும் சிறந்த பினிஷராக இருந்துள்ளார். தோனியை கடைசி கட்டத்தில் பயன்படுத்தாமல் இருப்பதுதான் தவறு. அதில் ஒட்டுமொத்த அணியும் தெளிவாக இருந்தது.
உங்களின் தலையை நிமிர்ந்தி கொண்டு நடந்து வாருங்கள் வீரர்களே. அந்த 30 நிமிட கோசமான விளையாட்டிற்காக கடந்த சில வருடங்களாக நாம் ஒரு சிறந்த அணியாக விளையாடவில்லை என்று ஆகிவிடாது. ஒரேயொரு போட்டி, ஒரு தொடர் மட்டுமே ஒரு அணியின் திறனை தீர்மானித்துவிடாது. நீங்கள் ஏற்கனவே நிறைய மரியாதையை சம்பாதித்துவிட்டீர்கள்” என இந்தியன் எக்ஸ்பிரசுக்கு அளித்த பேட்டியில் ரவிசாஸ்திரி கூறியுள்ளார்
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 15-07-2019, 09:38 AM



Users browsing this thread: 83 Guest(s)