15-07-2019, 09:28 AM
Episode 21 Highlights: வெளியேறினார் வனிதா- கதறி அழுதார் ரேஷ்மா..!
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் வனிதா
ஹைலைட்ஸ்
இந்த வாரத்திற்கான எலிமினேட் செய்யப்படும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்புடன் இன்று தொடங்கிய நிகழ்ச்சியில், நேற்று மோகன் வைத்தியா சேவ் பட்டத்தை தொடர்ந்து, இன்று மதுமிதா, மற்றும் சரவணன் போன்றோர் காப்பாற்றப்பட்டன
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. மொத்தம் 16 போட்டியாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். முதல் வாரத்தில் எலிமினேஷன் இல்லாத நிலையில், 2ஆவது வாரத்தில் முதலில் வீட்டுக்குள் வந்த ஃபாத்திமா பாபு முதலாவதாக வெளியேற்றப்பட்டார். அதை தொடர்ந்து இந்தவாரத்தில் நடிகை வனிதா விஜயகுமார் வெளியேற்றப்பட்டுள்ளார்.
முன்னதாக, இன்றைய நிகழ்ச்சியில் தொடக்கத்தில் பேசிய கமல்ஹாசன், நேற்று தர்ஷன் மற்றும் மீரா மிதூன் இடையே நடைபெற்ற உரையாடல் குறித்து விசாரித்தார். அதில், தர்ஷன் மீது காதலை வெளிப்படுத்தியதாகவும், ஆனால் அதை தர்ஷன் மறுத்துவிட்டதாகவும் கூறினார்.
இதுதொடர்பாக இருவருக்குமிடையில் விவாதம் ஏற்பட்டது. பிறகு, கமல் இருவரிடமும் பேசி சமாதானம் செய்து வைத்தார். எனினும், தொடர்ந்து அவர்களுக்குள் விவாதம் எழுந்து கொண்டே இருந்தது.
அதை தொடர்ந்து அனைவரும் எதிர்பார்த்த தருணம் வந்தது. இந்த வாரத்தில் யார் எலிமினேட் செய்யப்படுவார் என்பதை கமல்ஹாசன் அறிவித்தார். அதன்படி, பிக்பாஸ் வீட்டிலிருந்து வனிதா விஜயகுமார் வெளியேற்றப்படுவதாக அறிவித்தார்.
இது அனைத்து பிக்பாஸ் போட்டியாளர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. குறிப்பாக, ரேஷ்மா மிகவும் கதறினார். வழக்கம் போல மோகன் வைத்தியாவும் அழுதார். கடைசியில் வனிதாவை எதிர்த்துப் பேசிய சாக்ஷியும் அவருடைய வெளியேற்றத்துக்கு வருத்தம் தெரிவித்தார்.
பிக்பாஸ் வீட்டிலேயே வனிதா தான் தைரியாக பேசி வந்தார். அவரை வெளியேற்றுவதற்கான காரணம் என்ன? அப்போது நடித்துக் கொண்டே இந்த வீட்டுக்குள் இருப்பவர்களுக்கு தான் மரியாதையா என சாக்ஷி மிகவும் வருத்தமாக பேசினார்.
வெளியே வந்த வனிதா கமலை சந்தித்தார். அப்போது பேசிய அவர் அனைத்து போட்டியாளர்களும் வெற்றியை நோக்கமாக கொண்டு மட்டும் இல்லாமல், நேர்மையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டா. அதை தொடர்ந்து கமல் அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கினார்.
அதன்படி, வெளியேற்றப்பட்ட வனிதா பார்வையாளர்களுடன் அமர்ந்து, அவர் குறித்து பிக்பாஸ் போட்டியாளர்கள் கூறும் கருத்துக்களை கேட்கலாம் என்கிற வாய்ப்பு வழங்கப்பட்டது. வனிதா இருப்பதை தெரியாமல் பேசிய போட்டியாளர்கள் வனிதா குறித்து சச்சரவான, சந்தோஷம் நிறைந்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
அப்போது சேரன், லோஸ்லியா, அபிராமி, தர்ஷன், கவின் போன்றோர் வனிதாவிடம் இருக்கும் குறைகளை தெரிவித்தனர். அதை தொடர்ந்து பேசிய சாக்ஷி, ரேஷ்மா, ஷெரின் போன்றோர் அவர் மீதான் நிறைகளை தெரிவித்தனர். குறிப்பாக ”வனிதா தன்னுடைய மகள்களுக்காக யாருடைய ஆதரவுமின்றி தனியே போராடும் பெண்” என்று ரேஷ்மா சொன்ன போது பார்வையாளர்கள் மத்தியில் அமர்ந்திருந்த வனிதா அதற்கு கண் கலங்கினார்.
பிறகு, வனிதாவை மேடைக்கு அழைத்த கமல் அவரிடம் குறைகளை திருத்திக்கொள்ளுமாறு கூறினார். அப்போது பேசிய வனிதா, தனியாக வாழ்க்கையை வாழும் பெண்களுடன் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். வலிமையாக இருக்க வேண்டும். குழந்தைகளை முன்னிறுத்தி வாழ்க்கையை வாழ கற்றுக்கொள்ளுங்கள் என்று கண்கலங்க பேசினார்
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்தில் வனிதா விஜயகுமார் வெளியேற்றப்பட்டது, அவருடைய நண்பர்கள் உள்ளிட்ட மற்ற போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும், அவர் எலிமினேட் ஆனதற்கு வருத்தம் ஏற்பட்டது போல எங்கும் காட்டிக்கொள்ளவில்லை.
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் வனிதா
ஹைலைட்ஸ்
- பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் வனிதா விஜயகுமார்.
- அவருக்கு ஹவுஸ்மேட்ஸ் ப்ரியா விடை கொடுத்து வெளியே அனுப்பி வைத்தனர்.
இந்த வாரத்திற்கான எலிமினேட் செய்யப்படும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்புடன் இன்று தொடங்கிய நிகழ்ச்சியில், நேற்று மோகன் வைத்தியா சேவ் பட்டத்தை தொடர்ந்து, இன்று மதுமிதா, மற்றும் சரவணன் போன்றோர் காப்பாற்றப்பட்டன
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. மொத்தம் 16 போட்டியாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். முதல் வாரத்தில் எலிமினேஷன் இல்லாத நிலையில், 2ஆவது வாரத்தில் முதலில் வீட்டுக்குள் வந்த ஃபாத்திமா பாபு முதலாவதாக வெளியேற்றப்பட்டார். அதை தொடர்ந்து இந்தவாரத்தில் நடிகை வனிதா விஜயகுமார் வெளியேற்றப்பட்டுள்ளார்.
முன்னதாக, இன்றைய நிகழ்ச்சியில் தொடக்கத்தில் பேசிய கமல்ஹாசன், நேற்று தர்ஷன் மற்றும் மீரா மிதூன் இடையே நடைபெற்ற உரையாடல் குறித்து விசாரித்தார். அதில், தர்ஷன் மீது காதலை வெளிப்படுத்தியதாகவும், ஆனால் அதை தர்ஷன் மறுத்துவிட்டதாகவும் கூறினார்.
இதுதொடர்பாக இருவருக்குமிடையில் விவாதம் ஏற்பட்டது. பிறகு, கமல் இருவரிடமும் பேசி சமாதானம் செய்து வைத்தார். எனினும், தொடர்ந்து அவர்களுக்குள் விவாதம் எழுந்து கொண்டே இருந்தது.
அதை தொடர்ந்து அனைவரும் எதிர்பார்த்த தருணம் வந்தது. இந்த வாரத்தில் யார் எலிமினேட் செய்யப்படுவார் என்பதை கமல்ஹாசன் அறிவித்தார். அதன்படி, பிக்பாஸ் வீட்டிலிருந்து வனிதா விஜயகுமார் வெளியேற்றப்படுவதாக அறிவித்தார்.
இது அனைத்து பிக்பாஸ் போட்டியாளர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. குறிப்பாக, ரேஷ்மா மிகவும் கதறினார். வழக்கம் போல மோகன் வைத்தியாவும் அழுதார். கடைசியில் வனிதாவை எதிர்த்துப் பேசிய சாக்ஷியும் அவருடைய வெளியேற்றத்துக்கு வருத்தம் தெரிவித்தார்.
பிக்பாஸ் வீட்டிலேயே வனிதா தான் தைரியாக பேசி வந்தார். அவரை வெளியேற்றுவதற்கான காரணம் என்ன? அப்போது நடித்துக் கொண்டே இந்த வீட்டுக்குள் இருப்பவர்களுக்கு தான் மரியாதையா என சாக்ஷி மிகவும் வருத்தமாக பேசினார்.
வெளியே வந்த வனிதா கமலை சந்தித்தார். அப்போது பேசிய அவர் அனைத்து போட்டியாளர்களும் வெற்றியை நோக்கமாக கொண்டு மட்டும் இல்லாமல், நேர்மையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டா. அதை தொடர்ந்து கமல் அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கினார்.
அதன்படி, வெளியேற்றப்பட்ட வனிதா பார்வையாளர்களுடன் அமர்ந்து, அவர் குறித்து பிக்பாஸ் போட்டியாளர்கள் கூறும் கருத்துக்களை கேட்கலாம் என்கிற வாய்ப்பு வழங்கப்பட்டது. வனிதா இருப்பதை தெரியாமல் பேசிய போட்டியாளர்கள் வனிதா குறித்து சச்சரவான, சந்தோஷம் நிறைந்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
அப்போது சேரன், லோஸ்லியா, அபிராமி, தர்ஷன், கவின் போன்றோர் வனிதாவிடம் இருக்கும் குறைகளை தெரிவித்தனர். அதை தொடர்ந்து பேசிய சாக்ஷி, ரேஷ்மா, ஷெரின் போன்றோர் அவர் மீதான் நிறைகளை தெரிவித்தனர். குறிப்பாக ”வனிதா தன்னுடைய மகள்களுக்காக யாருடைய ஆதரவுமின்றி தனியே போராடும் பெண்” என்று ரேஷ்மா சொன்ன போது பார்வையாளர்கள் மத்தியில் அமர்ந்திருந்த வனிதா அதற்கு கண் கலங்கினார்.
பிறகு, வனிதாவை மேடைக்கு அழைத்த கமல் அவரிடம் குறைகளை திருத்திக்கொள்ளுமாறு கூறினார். அப்போது பேசிய வனிதா, தனியாக வாழ்க்கையை வாழும் பெண்களுடன் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். வலிமையாக இருக்க வேண்டும். குழந்தைகளை முன்னிறுத்தி வாழ்க்கையை வாழ கற்றுக்கொள்ளுங்கள் என்று கண்கலங்க பேசினார்
first 5 lakhs viewed thread tamil