14-07-2019, 10:31 AM
சந்திராவுக்கு கால் செய்து மகனைப் பார்த்துவிட்டதாக கூறினார்... சந்திரா மகனிடம் பேச வேண்டும் என்று கூற "சின்னு அம்மாகிட்ட ரெண்டு வார்த்தை பேசுப்பா... அஞ்சு நாளா அழுதுகிட்டே இருக்கா" என்ற அருணகிரியின் கண்களும் கூட கலங்கிப் போனது...
மொபைலை வாங்கி அம்மாவிடம் பேசினான் சத்யன் " மம்மி,, நான் நல்லாருக்கேன்... நீ கவலைப்படாத மம்மி" என்று கூறும் போதே சத்யனின் குரலிலும் கண்ணீரால் தடுமாற்றம்.... "நான் உங்களை விட்டுட்டு அவ்வளவு சீக்கிரமா போக மாட்டேன்ம்மா.... தூங்கனுமேன்னு ரெண்டு டேப்லட் அதிகமா போட்டேன்... அது இப்படியாகிடுச்சு" என்று கண்ணீர் மறைத்து சிரிப்புடன் சமாதானம் செய்தனுக்கு பதிலாக தாயின் அழுகுரலே கேட்டது...
"டாடி,, ரொம்ப அழுவுறாங்க... நீங்களே பேசுங்க" என்று அப்பாவிடம் மொபைலைக் கொடுத்துவிட்டான்....
அருணகிரி மனைவிக்கு ஆறுதலும் தேறுதலும் கூறிவிட்டு போனை வைத்தார்.....
மறுநாள் கல்லூரி நிர்வாகத்திடம் பேசிய போது, சத்யன் விளையாட்டாக செய்தாலும் அவனுக்குள் ஏதோ இருக்கு... தகுந்த முறையில் மெடிக்கல் கவுன்சிலிங் செய்து கொஞ்ச நாட்களுக்கு பெற்றவர்களுடன் வைத்திருந்து பிறகு மீண்டும் வந்து படிப்பினைத் தொடர சொன்னார்கள்....
சத்யனிடம் கேட்டபோது "ஆமாம் டாடி... எனக்கும் உங்க ரெண்டு பேர் கூடவும் கொஞ்ச நாளைக்கு இருக்கனும் போல இருக்கு.... கொஞ்சநாள் கழிச்சு வந்து என்னோட ஸ்டடியை கன்டினியூ பண்ணிக்கிறேன்" என்றான்....
படிப்பே போனாலும் கூட மகனை தன்னுடனேயே அழைத்துச் செல்லும் முடிவில் தான் அருணகிரியும் இருந்தார்...
மருத்துவமனையிலிருந்து டிச்சார்ஜ் ஆகி சத்யன் இருக்கும் வீட்டுக்கு வந்த போது அந்த முதியவர்கள் சத்யனின் நடத்தையாலும் போலீஸ் விசாரணையாலும் ரொம்பவே பயந்து போயிருந்தார்கள்... உடனே வீட்டைக் காலி செய்யச் சொன்னவர்களிடம் மூன்று நாட்களில் இந்தியா செல்லவிருப்பதாகக் கூறி அனுமதி வாங்கி மகனுடன் தங்கினார் அருணகிரி....
ஒரு மஞ்சள் மாலையில் புல்வெளியில் நடந்தபடி "என்ன பிரச்சனைன்னு டாடிக்கிட்ட சொல்றதானால் சொல் சத்யா,, என்னால எதாவது செய்ய முடியுமான்னு பார்க்கிறேன்" என்று மெதுவாக ஆரம்பித்தார் அருணகிரி...
மவுனமாக நடந்தவன் ஓரிடத்தில் அமர்ந்து தைலை கவிழ்ந்திருக்க.. மகனின் அருகில் அமர்ந்து தோளை அணைத்து "இங்க வந்து யாரையாவது லவ் பண்ணியா சத்யா" என்று அன்பாக கேட்டார்...
சற்றுநேரம் வரை மவுனமாக இருந்தவனின் தலை தானாக அசைந்து ஆமாம் என்று கூற...
"யார் சத்யா? இந்த நாட்டுப் பெண்ணா? கூட படிக்கிறவளா?" என்று கேட்டதும் மீண்டும் மவுனம்....
பிறகு "இல்லப்பா தமிழ் பொண்ணு... தமிழ்நாட்டைச் சேர்ந்தவள்...." என்றவன் சிமி என்ற பெயரை தவிர்த்து அவள் கவிதை எழுவாள் என்பதையும் சொல்லாமல் தவிர்த்து "ஆன்லைன் மூலமா மீட் பண்ணேன் டாடி... ரொம்ப நல்லவ... முதல்ல ப்ரெண்டாத்தான் பழகினேன்... ஆனா போகப் போக எனக்கு லவ் ஆகிடுச்சு" என்று மெல்லிய குரலில் தலை நிமிராமல் கூறினான்...
"தமிழ்நாட்டுப் பெண்ணா? ம் சரி... நீ அந்த பொண்ணுக்கிட்ட லவ்வை சொன்னியா? அல்லது அவளும் உன்னை லவ் பண்ணாளா?" கவனமாக கேட்டார் அருணகிரி
இம்முறை சத்யனிடம் மிக நீண்ட மவுனம் பிறகு நிமிர்ந்து நீலவானைப் பார்த்து "சொன்னேன்ப்பா.... மொத்தமா ஒருநாள் சொன்னேன்... ஆனா அவ" என்று நிறுத்தினான்
"ஆனா அவ?.... என்ன சொன்னா சத்யா?" மகனை ஊக்கினார்....
"அவளுக்கு,, அவளுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொல்றாப்பா...." என்று சத்யன் கண்களிலும் கண்ணீர் குரலிலும் கண்ணீர்....
அதிர்ந்து போனார் அருணகிரி "என்னடா சொல்ற? கல்யாணம் ஆன பொண்ணையா நீ காதலிச்ச?" என்று கேட்டவரின் குரலிலோ ஒரு மாதிரியான அருவருப்பு
கண்ணீருடன் நிமிர்ந்து தகப்பனின் முகம் பார்த்தவன் "ஆமாம்ப்பா... அப்படித்தான் அவ சொன்னா" என்று கூறிவிட்டு முகத்தை இரு கையாலும் மூடிக்கொண்டு "அதான்ப்பா என்னால தாங்க முடியலை... செத்துடனும் போல இருந்தது டாடி.... நான் அவளை ரொம்ப விரும்பினேன் டாடி" என்று குமுறலாய் கூறிய மகனை அதிர்ச்சியுடன் பார்த்தார் அருணகிரி..

first 5 lakhs viewed thread tamil