மான்சி கதைகள் by sathiyan
கலங்கரை விளக்கமாக கண்கள் இருந்தும் இதயப் படகு இலக்குத் தெரியாமல் போய்க்கொண்டிருந்தது.... நீரடித்து கண்ணீரை கழுவினாள்...

பெற்றோர் பார்த்து வைத்திருக்கும் பெண்ணைப் பற்றி தெரிந்ததும் என்னை மறந்துவிடுவானா சத்யன்? மறந்தால் நல்லதுதான்... நினைக்கும் போதே நெஞ்சு வரை கசந்தது... சத்யனின் காதல் வார்த்தைகள் மறக்க மாட்டான் என்றது....

மறந்தாலும் துன்பம் நினைந்தாலும் துன்பம்... என் நிலை யாருக்குமே வரக்கூடாது முருகா....

“ குழந்தையாய் உனைக் கண்டு...

“ குமரியாய் நான் நின்று..

“ நீதான் என் வாழ்வென நானுணர....

“ கண்ணா,,

“ நீரிலும் நீயே!

“ நெருப்பிலும் நீயே!

“ மண்ணிலும் நீயே!

“ விண்ணிலும் நீயே!

“ நான் காணும்,

“ எல்லாம் நீ!

“ எதிலும் நீ!

“ துணையாக மட்டும் வராது....

“ இதுதான் என் விதியா?
அடுத்த இரண்டு நாட்கள் கழித்து அருணகிரி தன் மனைவியுடன் சத்யன் ரீத்து திருமணம் பற்றிய ஆலோசனையில் ஈடுபட்டார்....

"அந்தப் பொண்ணு மான்சி சொல்றதும் சரிதான் சந்திரா... ரொம்ப நாள் கழிச்சு திருமணம் செய்ய முடிவு பண்ணினால் ஒரு ஒப்பந்தம் மாதிரி நிச்சயதார்த்தம் நடத்தி விடுவது நல்லது... இரு வீட்டாருக்கும் ஒரு உறுதி மொழி மாதிரி அது..." என்று அருணகிரி கூறவும்...

"ஆமாங்க... பெரியவங்க நமக்கெல்லாம் தோணாத விஷயம் அந்த பொண்ணுக்குத் தோணிருக்கு.... ரொம்ப அறிவான பெண்ணா இருக்கா.... ம்ஹம் நமக்குதான் கொடுத்து வைக்காம போயிட்டது...." வருத்தமாக கூறிய மனைவியின் தோளில் ஆறுதலாக தட்டிக் கொடுத்து

"அது ஆண்டவன் எழுதியது சந்திரா... மாத்த முடியாது... நம்ம சின்னுவுக்கு ரீத்து தான்னு முடிவாகியிருக்கு.. அதை மாத்த முடியுமா? அதுமட்டுமில்லை இன்னொருத்தன் மனைவியானப் பிறகு இனிமேல் மான்சியைப் பத்தி நாம பேசுறது தவறு..... இதுவும் நல்லதுக்கேன்னு விட்டுட்டு மற்ற வேலைகளைப் பார்க்கலாம்" என்றார்...

"ம்ம்,, சரி சத்யனுக்கு இந்த கல்யாண விஷயமா விபரம் சொல்லனும்... அவன் ஓகே சொன்னதும் நாம ஒரு நல்ல நாளில் பத்ரி அண்ணா வீட்டுக்கு போய் முறையா பேசி முடிவு பண்ணிட்டு குறிப்பிட்ட சில சொந்தக்காரங்களை வச்சு நிச்சயதார்த்தம் நடத்திடலாம்... அப்புறம் சின்னு வந்ததுமே கல்யாணத்தை முடிச்சிடலாம்" என்று சரியாகத்தான் எல்லாவற்றையும் யோசித்து கூறினாள் சந்திரா...

"நாளைக்கு நல்லநாள் காலைல பதினோரு மணிக்குள்ள பையனுக்கு விஷயத்தைச் சொல்லலாம்னு ஜோசியர் சொல்லிருக்கார் சந்திரா... நாளைக்கு காலைல பூஜை முடிச்சிட்டு சின்னுவுக்கு போன் பண்ணிலாம்" என்று சந்தோஷமாக கூறவும் சந்திராவும் அந்த சந்தோஷத்தில் பங்கெடுத்துக் கொண்டாள்.....

அன்று இரவு உணவு முடிந்து இருவரும் தோட்டத்தில் சற்றுநேரம் நடந்து விட்டு படுப்பதற்காக தங்களது படுக்கையறைக்குச் சென்றனர்... மகனின் திருமண பேச்சு அவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருந்தது.....

இருவரும் மகனைப் பற்றியும் அவனது எதிர்காலத்தைப் பற்றியும் பேசிவிட்டு உறங்கும் போது இரவு பதினோரு மணியாகியிருக்க... சரியாக பணிரெண்டு இருபதுக்கு அருணகிரியின் மொபைல் அலறி அவர்களின் உறக்கத்தை கலைத்தது...

இந்த நேரத்தில் யார் என்ற குழப்பத்தோடு தனது மொபைலை எடுத்து நம்பரை பார்த்தார்... கலிபோர்னியாவில் இருந்து அழைத்திருந்தார்கள்... ஆனால் சத்யனின் நம்பரில்லை என்றதும் இதயம் படபடவென்று அடித்துக் கொள்ள மொபைலை ஆன்செய்து யார்? என்று ஆங்கிலத்தில் கேட்டார்...

எதிர்முணையிலிருந்து அவருக்கான பதிலும் ஆங்கிலத்திலேயே சொல்லப்பட்டது.... பேசியது சத்யன் படிக்கும் கல்லூரி நிர்வாகம்.... சொல்லப்பட்ட தகவல் அவர் உயிரை துடிக்கச் செய்யும் தகவலாக இருந்தது....

அதாவது அன்று காலை கல்லூரிக்கு வந்த சத்யன் வந்த ஒரு மணிநேரத்தில் மயங்கி விழுந்துவிட்டதாகவும்.... அவனை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றதில் அளவுக்கதிகமாக தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றிருப்பதாகவும் தகவல் சொல்லப்பட்டது....

"சத்யா....." என்று அலறியபடி நெஞ்சில் கைவைத்துக் கொண்டு படுக்கையில் அமர்ந்தவரை எதிர்முணையில் இருந்த நபர் உயிருக்கு ஆபத்தில்லை... நீங்கள் வந்தால் நல்லது" என்று கூறிவிட்டு லைனை கட் செய்தார்....

இவரின் அதிர்ச்சி கண்டு திகைத்த சந்திரா அவரை உலுக்கி "என்னாச்சுங்க? சத்யான்னு சொன்னீங்களே? சின்னுவுக்கு என்னாச்சுங்க?" என்று சத்தமாக கேட்க...

நிதானத்துக்கு வந்த அருணகிரி மனைவியைக் கட்டிக் கொண்டு கதறிவிட்டார்.... மகனைப் பற்றிய தகவல் கொடுத்த அதிர்சியிலிருந்து அவரால் மீள முடியவில்லை.... அடுத்ததைப் பற்றி யோசிக்க முடியாமல் அதிர்ச்சியுடன் அழுதவரைப் பார்த்து ஒன்றும் புரியாமல் சந்திராவும் அழுதாள்....

அழுகையினூடே மனைவிக்கு விஷயத்தைச் செல்லிவிட்டு ஹாலுக்கு அழைத்து வந்தார்.... அடுத்த அரை மணிநேரத்தில் அந்த பங்களாவில் இருக்கும் அத்தனை ஜீவன்களும் விழித்துக் கொண்டு சத்யனுக்காக கண்ணீரில் கரைந்தனர்....

வீட்டுக் காரியத்தரசி கம்பெணி மேனேஜருக்கும் அருணகிரியின் உதவியாளருக்கும் போன் மூலமாக தகவல் சொல்ல அவர்களும் உடனடியாக வந்து சேர்ந்தனர்.....

மீண்டும் கலிபோர்னியா கல்லூரிக்கு கால் செய்து விசாரித்தார் மேனேஜர்... சத்யன் ஆபத்தின்றி காப்பாற்றப்பட்டுவிட்டதாகவும்... ஆனால் மீண்டும் இது போன்ற சம்பவம் நடக்காமல் இருக்க உடனடியாக அவனது நெருங்கிய உறவினர் யாராவது வரவேண்டும் என்றனர்....



என்ன செய்வது என்று ஆலோசிக்கப்பட்டது... அருணகிரிக்கு அமேரிக்காவுக்கு மல்டிபில் என்ட்ரி விசா இருப்பதால் உடனடியாக கலிபோர்னியா செல்ல அனுமதி கிடைக்கும் என்றார் உதவியாளர்.....

அது சம்மந்தமான அதிகாரிகளைப் பிடித்து காரியத்தை சாதித்தனர் மேனேஜரும் உதவியாளரும்...

கம்பெணி விஷயமாகவும் சத்யனின் படிப்பு சம்மந்தமாகவும் அருணகிரி இதற்கு முன்பு கலிபோர்னியா சென்றிருப்பதால் மறுநாளே அவருக்கு அனுமதி கிடைத்தது... சிங்கப்பூர் சென்று அங்கிருந்து லண்டன் சென்று அங்கிருந்து கலிபோர்னியா செல்ல ஏற்பாடானது...

அழுதது அழுதபடி கிடந்த மனைவிக்கு ஆறுதல் கூறிவிட்டு மொத்த பொறுப்புகளையும் மேனேஜரிடம் ஒப்படைத்துவிட்டு தனது மகனைக் காண புறபிபட்டார் அருணகிரி....

ஐந்தாம் நாள் காலை பதினோரு மணிக்கு சத்யன் படிக்கும் கல்லூரிக்கு சென்றடைந்தவரை அங்கிருந்தவர்களில் இருவர் சத்யன் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்

வெள்ளை உடுப்பில் விரக்தியாக கிடந்தவனைக் கண்டதும் கண்ணீர் ஆறாகப் பெருக.... "சின்னு.... என்னடா இப்படிப் பண்ணிட்ட?" என்று அழுதபடி ஓடிவந்து அணைத்துக் கொண்டார் அருணகிரி...

அப்பா வருகிறார் என்று அவனுக்கு தகவல் சொல்லியிருந்தபடியால் அதிர்ச்சியின்றி அப்பாவின் தோளில் சாய்ந்தான்.....

"என்ன சின்னு இது? நீ எதுக்கும் அஞ்சாதவனாச்சேடா?" இன்னமும் நம்பமுடியாமல் கேட்டார் அருணகிரி...

சுற்றிலும் இருந்த மருத்துவ உபகரணங்களின் செயல்பாடுகள் சத்யனின் ஆரோக்கியம் இன்னும் முழுதாக மீண்டு விடவில்லை என்று கூற... அவற்றையெல்லாம் மிரட்சியுடன் பார்த்தார் அருணகிரி....

"பச்,, பயப்படாதீங்க டாடி.... கொஞ்ச நாளா சரியாத் தூங்கலை... சரி மாத்திரை போட்டுக்கிட்டாவது நல்லா தூங்கலாம்னு நினைச்சி நான் குடியிருக்கும் வீட்டு ஓனர் தாத்தா கிட்ட ஒரு ஸ்லீப்பிங் டேப்லட் வாங்கிப் போட்டேன்... அப்பவும் தூக்கம் வரலை... சரி தாத்தா மாத்திரை வைக்கும் இடத்தைத் தெரிஞ்சு எடுத்துட்டு வந்து ஒரு அஞ்சாறு மாத்திரையை மொத்தமா போட்டேன்... சூசைட் பண்ணிக்கனும்னு எல்லாம் நினைச்சு போடலை டாடி.... நல்லா விடாம ஒரு வாரமாவது தூங்கனும்னு நினைச்சிப் போட்டேன்... அது பார்த்தா இப்படியாகிடுச்சு... காலேஜ் நிர்வாகமும் கலவரம் பண்ணிடுச்சு" என்று மெல்லிய குரலில் நிதானமாக கூறினான் சத்யன்....

மகன் ஒன்றுமில்லை என்று கூறினாலும் அவனது வார்த்தைகளில் இருந்த வலியை அருணகிரியால் உணர முடிந்தது... "சரிப்பா நீ ரெஸ்ட் எடு அப்புறமா பேசலாம்" என்று மகனின் தலைமுடியை கோதிவிட்டார்...


சிறு குழந்தையாக அப்பாவின் கையை எடுத்து தனது கன்னத்துக்கடியில் வைத்துக் கொண்டு படுத்துக் கொண்ட மகனைப் பார்த்து இதயம் இரண்டாக பிளப்பது போல் இருந்தது...
 
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:20 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:21 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:22 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:23 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:24 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:25 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:26 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:53 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:54 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:56 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:03 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:04 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:30 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:31 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:41 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:43 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:45 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:47 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:49 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:51 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:53 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:19 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:22 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:23 AM
RE: mansi stories by sathiyan - by Renjith - 14-02-2019, 12:18 PM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:26 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:27 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:28 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:29 AM
RE: மான்சி கதைகள் by sathiyan - by johnypowas - 14-07-2019, 10:29 AM



Users browsing this thread: 11 Guest(s)