மான்சி கதைகள் by sathiyan
ஹாய் சத்யன்,,

இனி நீங்கள் புரிந்து நடந்து கொண்டால் நான் ஏன் குட்பை சொல்லப் போகிறேன்?

புரிந்து கொள்ளுங்கள்,, இது அத்தனையும் நீர்மேலிட்ட கோலமென்று புரிந்து கொள்ளுங்கள்...

காகிதத்தில் கப்பல் செய்து மழை நீரில் விடலாம்... கடல்நீரில் விடமுடியாது சத்யன்... ஒரே அலையில் உருத்தெரியாமல் போய்விடும்..

இனி என் பர்ஸ்னல் பற்றி பேசாத நல்ல ரசிகனாக ஒரு தோழனாக நீங்கள் உடன் வருவதாக உத்திரவாதம் கொடுத்தால் மட்டுமே நமது நட்பு நீடிக்கும்... இல்லையென்றால் எனது குட்பை நிரந்தரமாக்கப்படும் சத்யன்...

நான் சொந்த வேலையாக சில நாட்கள் வெளியூர் செல்லவிருப்பதால் அலுவலகத்திற்கு வரமாட்டேன்... அதனால் ஆன்லைனிலும் வரமாட்டேன்... இந்த இடைவெளி உங்களின் மனமாற்றத்திற்கு உதவுமென்று நினைக்கிறேன்...

மீண்டும் உங்களை ஒருத் தோழனாக சந்திக்க ஆசைப்படும் தோழி....... சிமி!!!”

மடலை தன் காதலனுக்கு அனுப்பிவிட்டு மூன்றுநாள் விடுமுறை கேட்டு எம்டிக்கு ஒரு மெயில் எழுதி அனுப்பிவிட்டு வீடு நோக்கிக் கிளம்பினாள்...

துயர் வந்து தோளில் சுமையாக தூக்கம் தொலைக்கப் போகும் இரவுகளுக்காக ஏக்கம் சுமந்த விழிகளுடன் ரயிலில் பயணமானாள்...

" உள்ளும் புறமும்...

" நீயிருந்து விளையாட...

" என் உணர்வுகள் விழித்ததால்.....

" உயிர் கூட வியர்த்து...

" விழி நீராய் வழிந்து போகிறதே...

" அன்பனே!!!
வீட்டுக்கு வந்தாள்.. அவளுக்கான பணிகள் காத்திருந்தன... அத்தனையும் முடித்துவிட்டு கூடத்துக்கு வந்தாள்... கலா ஏதோவொரு புத்தகத்தில் மூழ்கியிருக்க அருகே சென்று தரையில் அமர்ந்தாள்....

"அவங்கக்கிட்ட இருந்து ஏதாவது பதில் வந்ததா சித்தி?" என்று கேட்டாள்..

குழப்பமாக நிமிர்ந்த கலா "என்ன பதில் வரனும்? அவங்க மகன் வரவும் தான் மத்ததை பேசனும்னு சொல்லிருக்காங்க" என்று கலா கூறவும்...

"அது சரி சித்தி,, ஆனா அவர் வர ஒரு வருஷம் ஆகும்னு சொன்னாங்களே.... அதுவரைக்கும் ஏதாவது உறுதி செய்துக்கலாமே சித்தி" மான்சி குடும்பப் பொருப்பு மிக்கவளாக தன் காதலனுக்கே கல்யாணம் பேச முயன்றாள்...

புருவம் சுழித்து யோசித்த கலா "நீ சொல்றதும் சரிதான் மான்சி,, ஆனா அவங்க அப்படி சொன்னப் பிறகு நாம மறுபடியும் பேச முடியுமா?"

"பேசினா என்ன சித்தி? நீங்க அவங்க நம்பர் குடுங்க நான் பேசுறேன்" என்று மான்சி கூறியதும் திகைத்த கலா "நீ பேசப் போறியா?" என்று கேட்க....

"ஆமா சித்தி.... நீங்க பேசுறதை விட தேவியோட மகளா நான் பேசினால் சரியாயிருக்கும்னு எனக்குத் தோனுது" என்று தீர்மானமாக கூறினாள்...

சற்றுநேரம் யோசித்த கலா "ம் ம் நீ சொல்றதும் சரி தான்" என்றுவிட்டு அருணகிரியின் நம்பரைச் சொன்னாள்....

நம்பரை மனதுக்குள் குறித்துக்கொண்டு தொலைப்பேசியில் அழுத்திவிட்டு அவர்கள் எடுக்கக் காத்திருந்தாள்....

எதிர்பக்கம் எடுக்கப்பட்டு "சொல்லும்மா" என்று ஒரு ஆணின் கம்பீரக் குரல் கேட்க...

"அருணகிரி அங்கிள் தானே பேசுறது?" என்று உறுதி செய்துகொண்டாள்...

"ஆமாம்... நீங்க யாரு?"

வெகுவாக கஷ்ட்டப்பட்டு குரலை நிதானமாக்கி "அங்கிள் நான் தேவியோட மகள் சிமி என்ற மான்சி பேசுறேன்... நீங்களும் ஆன்ட்டியும் நல்லாருக்கீங்களா?" 



தேவியைத் தெரியாதா? அவர்களின் உயிர் அடையாளமாயிற்றே? "அடடே மான்சியா பேசுறது? சொல்லும்மா... என்ன விஷயம்?" என்று உற்சாகமான குரலில் அருணகிரி பேசும் போதே "யாரு மான்சியா பேசுறா?" என்று ஆர்வமான பெண் குரல் ஒன்று அவரிடமிருந்து தொலைப்பேசியைப் பறித்து "சிமி, நான் சந்திரா ஆன்ட்டிம்மா,, நீ எப்படிடா இருக்க?" என்று தழுதழுத்தக் குரலில் கேட்டாள்...

பக்கத்தில் கலா இருக்கிறாள் என்பது ஞாபகம் வர... உருண்டு விழ முயன்ற கண்ணீரை உள்ளுக்குள் இழுத்துக் கொண்டு குரலில் சந்தோஷத்துடன் "ரொம்ப நல்லா இருக்கேன் ஆன்ட்டி.... உங்களைப் பத்தி அப்பா நிறைய சொல்லிருக்காங்க.... இப்போ மறுபடியும் நம்ம ரெண்டு பேமலியும் சந்திச்சதில் ரொம்ப சந்தோஷம் ஆன்ட்டி" என்றாள்....

"ம் எனக்கும் சந்தோஷம் தான்மா.... ஆனா நான் நினைச்சது நடக்கலையே?" வருத்தமான குரலில் சந்திரா பேச...

"புரியுது ஆன்ட்டி,, ஆனா ஆண்டவன் கணக்கு வேறயா இருக்கே? எனக்கு திருமணம் ஆனா என்ன ஆன்ட்டி? என் தங்கை ரீத்து தான் உங்க பையனுக்கும் உங்க குடும்பத்துக்கும் பொருத்தமா இருப்பா.... அழகு அறிவு படிப்பு என எல்லாத்திலயும் ரீத்து என்னை விட ரொம்பவே பெஸ்ட்... அவ உங்க வீட்டு மருமகளா வர்றதில் எனக்கு சந்தோஷம் தான் ஆன்ட்டி" என மான்சி சரளமாக பேசிக்கொண்டே போனாள்...

"சரிம்மா,, நீ சொன்னா சரிதான்... உன் சித்தி மறுபடியும் போன் பண்ணி அவங்க மகளைத் தர்றதா சொல்ற வரைக்கும் எங்களுக்கு அப்படியொரு யோசனையே வரலை.... அப்புறம் தான் பத்ரி அண்ணாவோட எந்த மகளா இருந்தாலும் நம்ம வீட்டு மருமகள் ஆக்கிக்கனும்னு தோணுச்சு... அதன்பிறகு தான் சம்மதம் சொன்னோம்...." சந்திரா பத்ரியின் மீது வைத்திருக்கும் மரியாதை அவள் வார்த்தைகளில் மிளிர்ந்தது...

"ம் நீங்க அப்படி நினைச்சதுக்கு தாங்க்ஸ் ஆன்ட்டி... ஆனா உங்க மகன் வர ஒரு வருஷம் ஆகும்னு சொன்னாங்க... அதுக்குள்ள நாம ஏதாவது தட்டு மாத்தி உறுதி செய்துக்கிட்டா நல்லதுன்னு தோணுது ஆன்ட்டி.... பேசி முடிச்சிட்டு ரொம்ப நாள் தள்ளிப் போறதை விட நிச்சயதார்த்தம் செய்துகிட்டு தள்ளிப் போனா பரவாயில்லை.. நமக்கும் ஒரு உறுதி கிடைக்குமே" தெளிவாக மான்சி கூறவும்....

"நீ சொல்றதும் புரியுதும்மா... ஆனா நாங்க இன்னும் இது விஷயமா எங்க பையன் சத்யன் கிட்ட பேசலை... அவன் படிப்பு பாதிக்கக் கூடாதுன்னு நினைச்சோம்... இப்ப நீ சொல்றது பார்த்தா ஒரு உறுதி செய்துக்கிறது நல்லதுன்னு தான் தோணுது... ஒரு நல்ல நாள் பார்த்து சத்யன் கிட்ட பேசிட்டு உங்களுக்கு தகவல் சொல்றோம் மான்சி... பிறகு சம்பிரதாயத்துக்குப் பெண் பார்த்துட்டு உடனே நிச்சயத் தாம்பூழம் மாத்திடலாம்" சந்திராவின் ஒவ்வொரு வார்த்தையிலும் மகிழ்ச்சி குடிகொண்டிருந்தது....

நெஞ்சு நீராவிக்குள் இருப்பது போல் வெந்து தணிய... "ம் சரி அப்படியே செய்ங்க ஆன்ட்டி" என்றாள் மான்சி...

"சரிம்மா,, உன் வீட்டுக்காரர் என்ன வேலை செய்றார்? குழந்தைங்க இருக்கா?" என சந்திரா கேட்க...

புயல் தாக்கிப் பொட்டலான பூமி போல் இதயம் வரண்டு போக மீண்டும் கண்ணீரை கடைவிழிகுக்குள்ளேயே தேக்கினாள் "அவர் எங்க மேரேஜ் முடிஞ்சதுமே வேலை விஷயமா வெளிநாடு போய்ட்டார் ஆன்ட்டி... நான் அப்பா வீட்டுலயே தான் இருக்கேன்... குழந்தைகள் எதுவும் இல்லை" இதைச் சொல்வதற்குள் உள்ளங்கைகள் கூட வியர்த்துப் போனது....

பிறகு சம்பிரதாயமான சில விசாரிப்புகளுக்குப் பிறகு தொலைப்பேசியை கலாவிடம் கொடுத்துவிட்டு தோட்டத்துக்குப் போனாள் மான்சி...
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:20 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:21 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:22 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:23 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:24 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:25 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:26 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:53 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:54 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:56 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:03 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:04 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:30 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:31 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:41 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:43 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:45 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:47 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:49 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:51 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:53 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:19 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:22 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:23 AM
RE: mansi stories by sathiyan - by Renjith - 14-02-2019, 12:18 PM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:26 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:27 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:28 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:29 AM
RE: மான்சி கதைகள் by sathiyan - by johnypowas - 14-07-2019, 10:26 AM



Users browsing this thread: 2 Guest(s)