மான்சி கதைகள் by sathiyan
விடியலைத் தேடும் மான்சி - அத்தியாயம் - 10

அச்சம் தவிர்,, இது காதலுக்குப் பொருந்துமா? அதுவும் மறுக்கப்பட்ட காதலுக்கு? ஒவ்வொரு நிமிடமும் நினைவுகளின் சுழற்சியில் உயிர் போய் விடுமோ என்று தவிக்கும் போது அச்சம் தவிர்க்க முடியுமா?

அப்படித்தான் இருந்தாள் சிமி என்ற மான்சி.... சத்யனின் வரிகள் வார்த்தைகளாக மாறி செவிப்பறையில் மோதி கிழிந்து நெஞ்சுக்குள் குடியேறியது....

யாரை நேசிக்கிறோமோ அவனுடைய நேசத்தை மறுக்கும் நிலை? இது, இப்படி யாருக்காவது நிகழுமா? நிஜக் காதலில் பொய்யுரைக்கலாம்... காதலே பொய்யென்று உரைக்கும் சூழல் யாருக்காவது நேருமா? எனக்கு மட்டும் ஏன்? நான் செய்த வினையா? பாவமா?...

கண்ணீர் உப்பு கன்னத்தில் படிய டாய்லெட்க்கு சென்று முகம் கழுவினாள்.... கண்ணாடியில் தன்னைப் பார்த்தவளுக்கு அவன் தான் தெரிந்தான் "பொய், பொய் சொல்றடி நீ" என்றான்...

சுடிதாருக்குள் கிடந்த சங்கிலியை வெளியே எடுத்து கண்ணாடியின் முன் நீட்டிக் காட்டி "நான் சொன்னது பொய்யில்லையே? இதோ என்னவனின் அடையாளம் என் கழுத்தில்" சன்னமான குரலில் பேசினாள்

"ம்ம் உன் புருஷன் கலிபோர்னியாவில் தானே இருக்கான்?" கண்ணாடியில் கேலியாக சிரித்தான் சத்யன்..... அவன் நிழலாக நின்று பேச இவள் நிஜத்தில் சிலிர்த்துப் போனாள்...

உண்மை தெரியாமலேயே உரிமையுடன் பேசுகிறவன்..... உண்மை தெரிந்து விட்டால்? நடுக்கம் ஓடியது நரம்புகளில்.... அப்புறம் சித்தி? ரீத்து? அப்பா? அதன்பின் சிதறிப்போகும் குடும்பம்? கையில் பிடித்திருந்த செயினை அவசரமாய் சுடிதாருக்குள் திணித்துக் கொண்டாள்....

இனி தினமும் போராட்டமாகத் தான் பொழுது விடியும் என்பது புலனானது... நெஞ்சை திடப்படுத்திக்கொண்டு நிமிர முயன்றாள்.... நிமிர்ந்தால் நிலை தடுமாற வைத்தது சத்யனின் காதல் வார்த்தைகள்....

ஒன்று விடாமல் உள்ளுக்குள் சேகரித்து வைத்தாள்.... அதிலும் அவனின் புகைப்படத்தைப் பார்த்ததும் ஒவ்வொரு வார்த்தைகளும் அவனே நேரில் நின்று பேசுவது போல்தான் எண்ண முடிந்தது...

எதையெதையோ எண்ணமிட்டவளுக்கு ஒரு விஷயம் புரியவில்லை..... ரீத்துவை சத்யனுக்கு பேசியிருப்பதாக சித்தி சொன்னாள்... ஆனால் சத்யனின் வார்த்தைகளில் தனக்குத் திருமணம் என்பதன் சாயலே தெரியவில்லையே? அவனது திருமண பேச்சு வார்த்தை இன்னும் அவனுக்குத் தெரியப்படுத்தப்படவில்லையோ? அதைச் சொல்லிவிட்டாலாவது கொஞ்சம் வேகம் குறையுமோ? ம்ஹூம் வேகம் குறைந்து விலகுபவன் போல் தெரியவில்லையே? ஆனாலும் திருமண செய்தி சொல்லப்பட்டால் தீவிரம் குறைய வாய்ப்புண்டு.... காத்திருப்போம்.. காலம் பதில் சொல்லும் வரை.... 



கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள்... அலுவலக வேலைகளில் தனது அலைப்புறுதலை மறைக்க முயன்றாள்.... மூடி வைக்க இது ஒன்றும் ஊசி முனை அல்லவே? காற்று,, பெரும் காட்டையே காட்டுத்தீயாக மாற்றக் கூடிய காதல்க் காற்று.... மூடி வைத்தாலும் மூச்சு முட்டி குமுறிக் குமுறி வெளியே வந்தது.....

அவனது நேசத்தின் அளவு புரிந்ததும் நெஞ்சத்தில் காதல் பூக்கள் ஏராளமாகப் பூத்து நிமிடத்துக்கு நிமிடம் நெரிசல் அதிகமானது...... நெரிசலில் சிக்கி காதல் பூக்கள் நசுங்கி விடாமல் காப்பாற்றவும் வழியின்றி கண்ணீருடன் பார்த்திருந்தாள்.

அடம் பிடிக்கும் அறிவுக்கு ஆயிரம் சமாதானம் சொல்லலாம்.... அழும் ஆழ் மனதுக்கு அந்த ஆண்டவனால் கூட சமாதானம் கூற முடியாது.... அமைதியற்ற மனதை அழவிட்டு விட்டு அமைதியாக கண்மூடி அமர்ந்தாள்.

நேரங்கள் நீர் துளியென மறைய வீட்டுக்குக் கிளம்ப வேண்டிய நேரமும் வந்தது.... தனது பொருட்களை சேகரித்தவளை கம்பியூட்டரின் வெற்றுத் திரையில் தெரிந்த அவளின் காதலன் அழைத்தான்...

திகைத்தவள் திரையில் தெரிந்தது நிஜமில்லை அவனின் நினைவு தான் என்று புரிய "சித்ரவதையா இருக்கே அம்மா" என்றபடி சோர்ந்து அமர்ந்தாள்....

திரை திறந்து அவளது பிளாக் சென்றாள்.... கவிதை ஏதாவது போடலாம் என்று கீபோர்டில் தட்டினாள்.... வழக்கமாக வரும் அம்மா கவிதைகள் வரவில்லை....


" மறப்பதற்கு மனமிருந்தால்...

" மார்க்கம் உண்டு!

" மயக்கம் கொண்டு நீயிருந்தால்...

" மறந்து செல்லவேண்டியது நான் தான்!


இது தேவையா? என்று அவள் சிந்திக்கும் முன் கவிதை பதிவாகியிருந்தது.... அய்யோ இது அம்மாவைப் பற்றியது இல்லையே... படித்துவிடுவானோ என்று எண்ணும் போது அவனது பதில் அங்கே பதிவாகியிருந்தது.....


" மயக்கமா????

" உன் மனதைக் கேளடி...

" தயக்கமின்றி அது கூறும்..

" இது மயக்கமல்ல...

" என் மனதின் ஏக்கமென்று!

அவனது பதில் கண்டு துடித்து நிமிர்ந்தாள்.... ஏக்கம் தான்.... ஆனால் உனது ஏக்கம் தீர்க்கும் பாக்கியம் எனக்கில்லையே அன்பே.......

துளிர்த்து விழுந்த நீரை துப்பட்டாவில் துடைத்துவிட்டு தனது மெயிலைத் திறந்தாள்....

சத்யனிடமிருந்து ஏராளமான மெயில்கள்.... அத்தனையிலும் ஒரே மாதிரியான வார்த்தைகள் "குட்பை சொல்லாத சிமி,, ரொம்ப வலிக்கிதுடி.... இனி முடிஞ்சவரைக்கும் உன்னை கஷ்ட்டப்படுத்தாமல் பேச முயற்சிக்கிறேன்... ஆனா இந்த குட்பை மட்டும் வேணாம் சிமி... நீ சொல்லிட்டுப் போன அந்த நிமிஷத்தில் இருந்து அழுவுறேன்டி... தாங்கமுடியலை சிமி.... குட்பை வாபஸ் வாங்கிடு சிமிம்மா... ப்ளீஸ் கண்ணம்மா"

அப்பப்பா எப்படிப்பட்ட வரிகள்? முதன்முறையாக மான்சிக்கு மரண பயத்தை ஏற்படுத்திய வரிகள்... செத்துவிடலாமா என்று யோசிக்க வைத்த வரிகள்.... 'உன்னை விட்டு என்னால் மட்டும் விலகியிருக்க முடியுமாடா கண்ணா?.....’ இதயம் பேசியது..... அழவேண்டும் துணையேதுமின்றி தனியாக அமர்ந்து அழவேண்டும்....
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:20 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:21 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:22 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:23 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:24 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:25 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:26 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:53 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:54 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:56 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:03 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:04 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:30 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:31 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:41 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:43 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:45 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:47 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:49 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:51 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:53 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:19 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:22 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:23 AM
RE: mansi stories by sathiyan - by Renjith - 14-02-2019, 12:18 PM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:26 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:27 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:28 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:29 AM
RE: மான்சி கதைகள் by sathiyan - by johnypowas - 14-07-2019, 10:26 AM



Users browsing this thread: 6 Guest(s)