ஷிவானியுடன் ஒரு பயணம் - Author: shivanioo7 - Incomplete
#13
தினேஷின் கைகளை என் முதுகில் தடவியது ஆறுதலாக இருந்தாலும் பட்டென்று விலகினேன். தினேஷின் முகம் சுருங்கி விட்டது. ஆனாலும் பேச்சை மாற்றும் விதமாக

ஷிவானி கொஞ்சம் வெளில காலாற நடந்துட்டு வரலாம் வா

சூழ்நிலையை சமாளித்தவாறு நானும் கிளம்பினேன்.

ஷிவானி உன்னை பற்றி சில விஷயங்கள் நீ தெளிவா சொல்லணும்...?

என்ன தெரியனும்?

அருணை நீ உயிர்க்கு உயிராக காதலித்தாயா?

அப்படின்னு இல்லை ஆனா வாழ்க்கையில் எனக்கு கிடைத்த பிடிமானமா நினைத்தேன்!

ஹ்ம்ம் நீங்க ரெண்டு பெரும் யார் கண்ணுக்கும் படாம எப்படி காதலிச்சிங்க ?

ஏன் தினேஷ் இப்படி ஒரு கேள்வி?

பதில் சொல்லு ஷிவானி ப்ளீஸ்

நாங்க ரெண்டு பேரும் நல்ல பிரெண்ட்ஸ், அது காதல்ன்னு நான்தான் தப்பா நினச்சுட்டேன்.

ஹ்ம்ம் புரியுது ஷிவானி...நீ இப்பவும் அருணை காதலிக்கிறாயா?

நோ தினேஷ் (நான் கத்தினேன் ) தெரியாம செஞ்ச காரியத்துக்கு என்ன பரிகாரம்ன்னு தேடிக்கிட்டு இருக்கேன்.

நான் உன்கிட்ட ஒன்னு கேக்கணும் ஷிவானி? நீ மறுக்காம தருவியா?

யோசிச்சு பதில் சொன்னா போதும்

என்னனு சொல்லுங்க தினேஷ்

ஐ லவ் யு ஷிவானி

வாட் ??

இப்போ இல்ல ரெண்டு வருஷமா உன்னை லவ் பண்றேன். அதான் வெளிநாட்டுல இருக்குற பொண்ணுகளை என்னால ஏத்துக்க முடியல. என்னதான் நான் பாரின் கல்ச்சர்ல
இருந்தாலும் என் மனைவி ஹோம்லியாதான் இருக்கணும். அந்த வகைல உன்னைத்தவிர யாரையும் எனக்கு பிடிக்கல.

தினேஷ் நீங்க என்னை கட்டாய படுத்துறீங்க

நோ ஷிவானி ,அருணை நீ காதலிக்கல

அப்புறம் என்ன ப்ராப்ளம். நான் உன்னை தப்பா யூஸ் பண்ணிக்க விரும்ப.இட்ஸ் ஓகே ஸ்ட்ரைட்டா கேக்குறேன் "என்னை கல்யாணம் பண்ணிக்கோ "

நோ தினேஷ் உணக்ளுக்கு என்மீது பரிதாபம் அதை காதல்னு தப்பா நினைக்குறீங்க.

ஷட் அப் ..அப்படியே குண்டு கட்டா தூக்கிட்டு போயி தாலி கட்ட எனக்கும் தெரியும்....

தினேஷ் நான் வாழத்தகுதி இல்லாதவனு முடிவு பண்ணிட்டேன் அப்படி இருக்கும் போது
உங்க மனைவியா வாழ எனக்கு தகுதி எப்படி இருக்கும்..

நீ என்ன பைத்தியமா அருணை காதலிச்ச அவ்ளோதான். இப்போ அவனுக்கு கல்யாணம் ஆனது தெரிஞ்சுருச்சு, ஸோ நீயும் எல்லாமே மறந்து வாழனுமே தவிர இப்படி சாகுறேன்னு புலம்புற.

நீயெல்லாம் திருந்த மாட்டடி இதெல்லாம் ஜீன்ல வர்றது....மாத்த முடியாது..


என்ன தினேஷ் என்னை பத்தி உணகளுக்கு என்ன தெரியும்..?

எல்லாம் தெரியும், உன்னை பத்தி மட்டுமல்ல உங்க அம்மாவ பத்தியும் தெரியும் ?

வாட்?

ரெண்டு நாளா உன்னை பத்தி விசாரிசுக்கிட்டுதான் வந்துருக்கேன். உன்னை வளர்த்த மதர் சொன்ன விஷயம்தான் இது.

உங்க அம்மாவ காதல்ன்னு ஒருத்தன் ஏமாத்தி இருக்கான். ஒரு கட்டத்துல ஏமாத்தினவன் இறந்துட்டான். உண்மைய வெளிய சொல்லவும், சமூகத்துல வாழவும் பயந்து
உன்னை பெத்து ஆசிரமத்துல விட்டுட்டு தற்கொலை பண்ணிகிட்டாங்க.

நீயும் உங்க அம்மா மாதிரியே பேசுற..அதன் சொன்னேன். சாரி தப்பா இருந்தா மன்னிச்சுடு.

பேச வார்த்தை இல்லாமல் கல் போல் சிலையாகி நின்றேன்.

பின் எப்படி வீடு வந்தோம் என்று தெரியவில்லை..

அடுத்த நாளும் நானும் தினேஷும் பேசிக்கொள்ளவில்லை.

சாகும் எண்ணத்தை கை விட்டேன்.

தினேஷிடம் மெல்ல மெல்ல நடந்ததை கூறினேன்.
தினேஷின் அதிர்ச்சி எனக்கு வலித்தது.

இப்போவாவது புரிஞ்சுக்கோங்க தினேஷ் நான் எப்படி இன்னொரு கல்யாணம் செய்துக்க முடியும்.

அப்போ நான் கருப்பா இருக்கேன்னு நீ மறுக்கலையா?

தினேஷின் கேள்வி எனக்கு புரியவில்லை...யார் கருப்பு

நான்தான் ஷிவானி அதான் என்னை பிடிக்கலன்னு நினச்சேன்.

நீங்க என்ன லூசா தினேஷ் நீங்க கருப்புன்னு யார் சொன்னா?

மாநிறம் அவ்ளோதான் ஆனா நல்ல லட்சணமா இருக்கீங்க!

அப்புறம் ஏன் மறுக்குற ஷிவானி?

தினேஷ் ப்ளீஸ் அண்டெர்ஸ்டாடாணட் மை சிச்சுவேஷன்

ஓகே ஓகே ரிலாக்ஸ்

அதன் பின் வந்த நாட்களில் தினேஷ் என்னிடம் நல்ல தோழமையுடன் பழகினான்.

பத்தாவது நாள் தினேஷ் என்னை அழைத்து சென்ற இடம் அவர்களின் குல தெய்வ கோவில்

அங்கே நிறைய பேர் சூழ்ந்து இருந்தார்கள்

தினேஷின் அம்மா என்னிடம் , இந்த புடவைய கட்டி இந்த நகைகள் போட்டுட்டு வாம்மா என்று என்னுடன் சில பெண்களை அனுப்பி வைத்தார்கள்

அவர்கள் எப்போது பாசமாக பேசியதால் அன்று எனக்கு ஒன்றும் வித்தியாசமாக தெரியவில்லை.

புடவை ஓகே பட் இந்த நகை ? ஏதோ உறுத்தியது.. குழப்பத்தோடு நான் ரெடி ஆகி வந்த போது பூஜை தொடங்கி இருந்தது. கண்களை மூடி தெழா ஆரம்பித்தேன், அப்போது
என் கழுத்தில் எதுவோ ஊர்வது போல தோன்ற,

தினேஷின் கையால் தாலியை வாங்கி இருந்தேன். அங்கு உள்ளவர்கள் என் மீது அர்ச்சனை தூவ எனக்கு ஒன்றும் புரியாமல் பேந்த பேந்த விழித்தேன்.

தினேஷின் அம்மா என் காதில் "உங்களுக்குள்ள நடந்தது பத்தி தினு சொன்னான் "நீ எங்களை பார்க்க பயந்ததால இப்படி கல்யாணம் நடதிட்டோம். இனி நீ சந்தோஷமா
இருக்கணும்.

எதையும் யூகிக்க முடியாமல் தினேஷை பார்த்தால் அவன் மந்தகாசமாக சிரித்தான்....

இதை நான் ஏற்க போவதில்லை என்று பாவம் அவனுக்கு தெரியவில்லை!!!!
Reply


Messages In This Thread
RE: ஷிவானியுடன் ஒரு பயணம் - Author: shivanioo7 - Incomplete - by kadhalan kadhali - 14-07-2019, 09:47 AM



Users browsing this thread: 1 Guest(s)