ஷிவானியுடன் ஒரு பயணம் - Author: shivanioo7 - Incomplete
#11
இரவெல்லாம் யோசித்து யோசித்து விடியல் காலையில் உறங்கியும் போனேன், காலை 10
மணி அளவில் கண் திறந்து ஜடம் போல காலை கடன்கள் முடிந்து ரூமிலேயே அடைந்து
கிடந்தேன்.

இரண்டு நாட்கள் முடிந்து தினேஷ் வருவதற்கு முன் மறுபடியும் அருண் பற்றி
யோசிக்க ஆரம்பித்தேன்

நான் முதலில் அருணிடம் காதலை சொல்லவில்லை என்பது உரைத்தது!

கற்பு போனதால் காதலிக்க தொடங்கியது விளங்கியது.

அன்று நான் எப்படி தவறு செய்ய துணிந்தேன்?
இன்னும் அது ஒன்றுதான் எனக்கு விளங்கவில்லை.

அடிக்கடி அருண் என்னிடம் சொன்னதுண்டு...."நீ அன்னைக்கு வரம்பு மீறி
நடந்ததால்தான் நானும் உன்னை தொட வேண்டியதாய் போச்சு..
"நான் பணம் கொடுக்க யோசித்தால் அவன் சலித்துக்கொள்ளும் நேரங்களில் இந்த
அஸ்த்திரத்தை பயன்படுத்துவான்.

நானும் என்மேல்தான் தவறு என்று அவனுக்கு எல்லாமே செய்து வந்தேன்.


பிரிந்த அன்று கூட கோவிலுக்கு போகலாம் என்றான்!! பிரசாதமாவது சாப்பிடு
என்றானே!!!

மை காட் இப்போது மின்ன்ல போல எனக்கு ஞாபகம் வந்தது!!!

அடப்பாவி முதல் தடவை என்னை மயக்கியது அந்த ப்ரசாதம்தான் , அன்னைக்கு நைட்
குடிச்ச பாலுல கூட திருநீறு வாசம் வந்துச்சு...ச்சே இதை எப்படி மறந்து போனேன்!

நான் மறக்கல என்னை நினைக்காம தடுத்து, என்னை மூளை சலவை செஞ்சு யூஸ்
பண்ணிருக்கான். சீ ...இப்போது அவன் முகத்தை நினைத்தாலே குமட்டியது.

அவன் ஒரு திருடன், போர்ஜெரி , இது தெரியாம நான் மாட்டிக்கிட்டேன்.

ஐயோ.. ஐயோ..என்ன திருந்தினாலும் போன கற்பு திரும்பி வருமா.

நான் வாழறதே வேஸ்ட். எனக்கு சாகனும் எனக்கு சாகனும்.

சட்டென்று தினேஷின் முகம் கண் முன்பு வந்தது...இங்க வெச்சு எனக்கு எதாவது ஆனா
அது தினேஷ் பியுட்ச்சர் பாதிக்கும்.

நான் ஊருக்கு போனதும் என் வாழ்க்கையை முடிச்சுக்குறேன்.

தீர்மானத்துடன் எழுந்து போய் முகம் கழுவி பிரெஸ் ஆனேன்

வெளியில் கார் வரும் சத்தமும் அதை தொடர்ந்து படிகளில் தினேஷ் காலடி சத்தமும்
கேட்டது.

தினேஷிடம் நடந்ததை சொல்லலாமா வேண்டாமா என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

நான் நல்ல பெண் என்பதால்தான் தினேஷ் எனக்கு உதவி செய்கிறான்.

நான் கற்ப்பை இழந்த பெண் என்று தெரிந்தால்?

அவன் எனக்கு உதவுவானா? இல்லை என்னுடனும் படுக்க வா என்று அழைப்பானா?
Reply


Messages In This Thread
RE: ஷிவானியுடன் ஒரு பயணம் - Author: shivanioo7 - Incomplete - by kadhalan kadhali - 14-07-2019, 09:46 AM



Users browsing this thread: 3 Guest(s)