ஷிவானியுடன் ஒரு பயணம் - Author: shivanioo7 - Incomplete
#10
தினேஷின் லேப் டாப் மூலம் ஆபிஸ்க்கு மெயில் அனுப்பினேன். முதலாளியிடம் போனில் பேச முயற்சித்தேன் ஆனால் பயனளிக்கவில்லை. தினேஷ் தந்தையிடம் கூறி விடுவதாக வாக்கு கொடுத்தான்.

என் அறையை பூட்டி சாவியை அடுத்து உள்ள கடையில் கொடுத்து மாலதிக்கு தகவல் தெரிவிக்க சொல்லிவிட்டு கிளம்பினேன். தேவையான உடைகள் காரின் டிக்கியில் அடைபட்டது.

காரின் முன்புரக்கதவை திறந்து அமர்ந்து கண்களை இறுக மூடிக்கொண்டேன்.

சிறிது நேரத்தில் என் பற்கள், கண்கள் கூசத்தொடங்கியது. என்னால் தாங்க இயலாத கட்டத்தில் என் முகபாவனைகளை கண்டு தினேஷ் காரை நிறுத்தினான்.

என் கண்கள் திறக்க இயலாமல் தினேஷை கைகளால் தேடினேன். கண்ணீர் வழிந்து ஓடியது.

ஹேய் ஷிவானி, வாட் ஹெப்பெண்ட், சொல்லு ஷிவானி என்ன பண்ணுது..

தினேஷ் என் கண்ணு, பல்லு கூசுது தாங்க இயலல.

தினேஷ் இப்போது காரை இயக்கத்தொடன்கினான். நேரே ஒரு மனநல மருத்துவரிடம் என்னை அழைத்து சென்றான்.

மருத்துவர் கேட்ட எந்த கேள்விக்கும் நான் பதில் சொல்ல வில்லை.

இங்க பாரும்மா நீங்க பேசினாதான் நான் ட்ரீட்மென்ட் பண்ண முடியும். ப்ளீஸ் உங்க மனசை அழுதும் விஷயம் என்ன? சொல்லுங்க ஷிவானி.

நோ....என்னை எதுவும் கேக்காதீங்க டாக்டர் எனக்கு நல்லா தூங்கனும் அதுக்கு மாத்திரை குடுங்க போதும். ப்ளீஸ் டாக்ட்டர்.

நான் அழுவதை கண்டதும் டாக்டர் தினேஷை அழைத்து தனியாக சிறிது நேரம் பேசினார். பிறகு சில மாத்திரைகளை எழுதி கொடுத்தார். நாங்கள் மீண்டும் பயணம் துடங்கினோம்.

ஒரு மரத்து நிழலில் காரை நிறுத்தி கொஞ்சம் ஸ்நேக்ஸ் , கூல் ட்ரிங்க்ஸ் பருகினோம். மாத்திரை ஒரு செட் எடுத்து விழுங்கினேன்.

காரில் அமர்ந்து உறங்கியும் போனேன். தினேஷின் விரல்கள் என் தலையை நீவியதோ என் நெற்றியில் முத்தமிட்டதையோ நான் அறியவில்லை.

கண் முழித்த போது ஒரு தோப்பின் வழியே கார் சென்று கொண்டிருந்தது. தினேஷை திரும்பி பார்த்தேன்.

தினேஷின் தாடி ஒரே நாளில் கொஞ்சம்மாக வளர்ந்திருந்தது. இவன் ஏன் எனக்கு உதவி பண்ணுறானு தெரியலையே என்று மனது ஒரு புறம் அடித்துக்கொண்டது.

மறுபடியும் அருணின் துரோகம் ஞாபகம் வர, தோய்ந்து சாய்ந்தேன்.

பாவி... எதற்க்காக என்னிடம் பழகினாய் என்று தெரிவதற்கு முன்பே சென்று விட்டாயே... மனம் கதறுவது கண்ணீராய் வெளி வந்தது.

தினேஷ் காரை நிறுத்தினான்.

ஷிவானி நீ இப்படி அழுதுட்டே வந்தா செல்வி அம்மா என்னை தப்பா நினைப்பாங்க. ப்ளீஸ் அழாம வா...

ஹ்ம்ம்...என்றாலும் அழுதேன்....

ஷட் அப் ..நானும் பார்த்துட்டே இருக்கேன் ஒரு ப்ரெண்ட் காக இப்படியா அழுகுறது...ஒரு லவ்வராவே இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர் ஷிவானி...

நோ தினேஷ் உங்களுக்கு நான் ஏன் அழறேன்னு புரியாது...அதை இப்போ சொல்லுற நிலைமைல நான் இல்ல. நீங்க 2 days கழிச்சு வந்ததும் விவரமா சொல்லுறேன். இப்ப அழாம வர்றேன்...

நாங்கள் தோட்டம் சென்றதும் தினேஷ் என் மொபைல் வாங்கி அதில் இருந்த சிம்மை கலட்டி வேறு ஒரு சிம்மை மாத்தி என்னிடம் கொடுத்தான்.

நான் அவனை பார்த்து விரக்தியாய் சிரித்தேன்...

செல்வி அம்மாவிடம் அறிமுகம் செய்தான். என்ன சொன்னான் என்று தெரியவில்லை அந்த அம்மாவின் கண்கள் விரிந்து என்னை பார்த்தார்.

எங்களுக்கான ரூமில் செட்டில் ஆனதும் தினேஷ் என்னருகில் வந்து அமர்ந்தான்.

ஷிவானி ஒரு முக்கியமான விஷயம்

சொல்லுங்க சார்...

இன்னும் என்ன சாரு மோரு...தினேஷ் ன்னு கூப்பிடு..

ம்...சொல்லுங்க தினேஷ்

செல்வி அம்மாகிட்ட எதையும் சொல்லாத நான் வேற மாதிரி சமாளிச்சுருக்கேன்.

ஓகே

என்னனு கேக்க மாட்டியா?

ப்ளீஸ் சார் சாரி தினேஷ் 2 days கழிச்சு பேசலாம். நீங்க கிளம்புங்க காலைல தங்கச்சி கூட இருக்கணும்.

நைட்டெல்லாம் கார் ஓட்டவேண்டும் என்றாலும் அவன் ப்ரெஷ் ஆகவே இருந்தான். ஓகே ஸ்வீட்டி பை டேக் கேர்...

தினேஷ் சென்றதும், கட்டிலில் படுத்து அருண் விஷயத்தில் எங்கே தப்பு நடந்ததென்று யோசிக்க ஆரம்பித்தேன்
Reply


Messages In This Thread
RE: ஷிவானியுடன் ஒரு பயணம் - Author: shivanioo7 - Incomplete - by kadhalan kadhali - 14-07-2019, 09:46 AM



Users browsing this thread: 1 Guest(s)