ஷிவானியுடன் ஒரு பயணம் - Author: shivanioo7 - Incomplete
#9
நான் கண்கள் திறந்த போது ஆஸ்பத்திரியில் இருந்தேன். என் அருகே தினேஷ் இருந்தான்.

எல்லோரும் கேட்கும் அதே கேள்வியை நானும் என் கண்களால் தினேஷிடம் கேட்டேன்.

நான் எங்கே இருக்கேன்?எனக்கு என்ன ஆச்சு?

நத்திங் சீரியஸ் ஷிவானி, யு ஆர் ஆல் ரைட்

எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஞாபகம் திரும்பியது

இப்போதும் கண்களால் கேள்வி எழுப்பினேன்??

அருண் வீட்டுல இருந்து ஆபிஸ் க்கு கால் வந்தது , டாட் பன்க்சன் பிஸி ஸோ நான் வந்தேன்.

நான் கேவி கேவி அழ ஆரம்பித்தேன்

ஹேய் ஷிவானி வொய் ஆர் யு க்ரையிங் , ஒஹ் மை காட்

சார் ப்ளீஸ் என்னை எதுவும் கேக்காதீங்க

ஓகே ஓகே பட் உன்னை எப்படி இங்க விட்டுட்டு போறது...

ஹ்ம்ம் ஒன்னு பண்ணுறேன் நீ வளர்ந்த ஆசிரமத்துல கொண்டு விடுறேன். டூ டேஸ் ரெஸ்ட் எடுத்துட்டு ஆபிஸ்க்கு வா ஓகே

எனக்கே இப்போது என்னை நினைத்து கேவலமாக இருந்தது

தினேஷ் சொன்ன பிறகுதான் நான் வெட்கி தலை குனிந்தேன்.

என் சம்பளத்தில் ஒரு முறை ஆசிரமம் சென்று எல்லோருக்கும் இனிப்பு வழங்கியதோடு அவர்களை எல்லாம் மறந்து போனேன் .

அருண் அருண் என்று பைத்தியம் பிடித்து அலைந்தேன் . சம்பாதிப்பு , இருப்பு எல்லாமே அவனுக்கு வாரி இழைத்தேன். வளர்ந்த இடத்தை மறந்ததற்கு கர்த்தர் கொடுத்த தண்டனைதான் இது.

படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தேன். இல்லை சார் நான் அங்கே போக முடியாது. ஏன்னா நான் அங்க போகுறதில்லை.

ஒஹ்! இட்ஸ் ஓகே இப்போ நான் ஒரு ஐடியா சொல்லட்டுமா?

சொல்லுங்க...

இங்க இருந்து 73 kms ல நான் புதுசா தோட்டம் வாங்கி இருக்கேன். டாட்க்கு தெரியும் பட் அவர் அங்க வர மாட்டார். அவருக்கு தெரிஞ்ச யாரும் அங்க இருக்க மாட்டாங்க.

நீ 10 days லீவ் போட்டுட்டு என்கொட அங்க வா... பயப்படாத அங்க செல்வி அம்மா இருப்பாங்க. உன்னை நல்லா பார்த்துக்குவாங்க. நான் தங்கச்சிய அனுப்ப வேண்டிய முறை முடிச்சுட்டு 2 days ல வந்துருவேன். அப்புறம் நாம தெளிவா பேசி முடிவு பண்ணலாம். என்ன யோசிக்குற ஷிவானி

இல்ல சார் நீங்க எதுக்காக எனக்கு உதவி பண்ணனும்?

ஹ்ம்ம் அதுவா???

ஒரு அழகான பெண்ணோட உயிர் பத்திரமா இருக்கணும்னு ஆசை படுறேன்.

செண்ட்டிமெண்ட்டா நினச்சு கற்பனை பண்ணிக்காத. நான் பாரின் கல்ச்சர்ல வளர்ந்தவன். எனக்கு செண்டிமெண்ட்ஸ் பிடிக்காது. உனக்கு உதவனும்னு தோணுது..தட்ஸ் இட்

இனி யாசனை செய்து பலனில்லை எனக்கும் ஒரு இட மாறுதல் தேவை என்பதை புரிந்து தினேஷுடன் தோட்டம் செல்ல தயாரானேன்
Reply


Messages In This Thread
RE: ஷிவானியுடன் ஒரு பயணம் - Author: shivanioo7 - Incomplete - by kadhalan kadhali - 14-07-2019, 09:46 AM



Users browsing this thread: 1 Guest(s)