ஷிவானியுடன் ஒரு பயணம் - Author: shivanioo7 - Incomplete
#8
ஹாய் ஷிவானி வேர் இஸ் அருண்?

வொய் ஆர் யு ஸ்டான்டிங் ஹியர்?

அது அது வந்து அருண் கு ஒரு அர்ஜெண்ட் கால் வந்துச்சு சார் அதான் போயிட்டார்.

ஓகே ஓகே ஐ வில் டிராப் யு கம் ஆன்

வேண்டாம் என்று சொல்லும் நிலைமையில் நானும் இல்லை ஸோ தான்க் யு சார் என்று காரின் பின்புற கதவை திறந்தேன்.

ஹேய் ஷிவானி யு இன்சல்ட்டிங் மீ

அந்த அருண் கூட பைக் ல பின்னாடி உக்காந்து போகுற, பட் என்னை உன் டிரைவர் ஆக்க பாக்குற.

நோ சார் நோ ..நான் சமாளித்து முன் புறம் ஏறி அமர்ந்தேன்.

காரின் ஏசி அதிகமாகி இருந்தது என்னால் குளிர் தாங்க முடியவில்லை.

தினேஷ் ப்ரேக் அடித்து காரை நிறுத்தினான் அவன் சீட்டின் பின்புறம் இருந்த கோட் எடுத்து என் மேல் போர்த்தி விட்டான்.அவன் கை என் மேல் உரசியது

எனக்கு அது இதமாகவும் , கொஞ்சம் போதை ஏற்று மணமும் சேர்ந்து என் உணர்வுகளை தூண்டுவது உணர்ந்தேன்

இப்போது தினேஷ் பேச ஆரம்பித்தான்

அப்புறம் ஷிவானி தனியா இருக்கிறது போர் அடிக்குதுன்னு கவலை படாத எனி டைம் நீ எனக்கு கால் பண்ணலாம்.

இவன் என்னை உளறுறான் என்று நினைத்து கொண்டே, பட் நான் தனியா இல்ல சார் ரூம் ல என் ப்ரெண்ட் மாலதி இருக்கா அப்புறம் ஆபிஸ்ல அருண் ஸோ நான் ஜாலியா தான் சார் இருக்கேன்.

அவனை வேண்டாம் என்ற சொன்ன மனது சந்தோஷத்தில் துள்ளியது

ஷிவானி உனக்கு விஷயம் தெரியுமா தெரியாதா?

என்ன சார்?

மிஸ்டர் அருண் நாளைக்கு டெல்லி போறார்

ஹ்ம்ம்....மார்க்கெட்டிங் வொர்க்கா சார் ?

நோ ஷிவானி அவனுக்கு ப்ரோமோஷன் வித் டிரான்ஸ்பர்

வாட் நான் இப்போது அதிர்ந்தேன், முன்பு குளிர்ந்த உடம்பு இப்போது சூடாகியது. என் கண்களில் கண்ணீர் எட்டி பார்த்தது. நான் இறங்க வேண்டிய இடமும் வந்தது.

ஆனால் தினேஷ் என்னை இறங்க விடாமல் என் கையை அழுத்தி பிடித்தார். ஷிவானி ரொம்ப நாளா உன்கிட்ட ஒன்னு சொல்லனும்னு நினைக்குறேன்

சொல்லுங்க சார், என் குரல் உடைந்தது

இன்னைக்கு வேண்டாம் அப்புறம் பேசிக்கலாம். டேக் ரெஸ்ட்

தான்க் யு சார் , சம்பிரதாயத்துக்கு கூட அழைக்காமல் ரூம் சென்று கதவை அடைத்து அழ ஆரம்பித்தேன். கார் சென்று வெகு நேரமாகியும் என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை.

அருண்கு கால் செய்தால் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது.

காலையில் ஒரு நல்ல சுடிதாரை எடுத்து அணிந்துகொண்டு அருண் வீட்டை அடைந்தேன்.

காலிங் பெல் அழுத்தியதும் ஒரு முதியவர் கதவை திறந்தார்.

வாங்கம்மா யாரு வேணும் உங்களுக்கு?

அருண் இருக்காரா?

விடியக்காலைல கிளம்பிட்டானே...

நீங்க யாரு....

நான் அவரோட ஆபிஸ்ல வேலை செய்யுறேன் சார்...

ஒரு நிமிஷம்மா , சாரதா... சாரதா ...உன் புருஷனை தேடிகிட்டு யாரோ வந்துருக்காங்க பாருமா...

வரங்க மாமா....கையில் மூன்று மாத குழந்தையுடன் ஒரு இளம் பெண்....

பூமி நழுவுவது போல் உணர்ந்தேன், இருந்தும் ஒரு நம்பிக்கை அங்கே சுவரில் துழாவினேன்

அங்கே அந்த பெண்ணின் அருகில் போட்டோவில் சிரித்துகொண்டு இருந்தது என் அருண்.

அங்கேயே மயங்கி சரிந்தேன்.
Reply


Messages In This Thread
RE: ஷிவானியுடன் ஒரு பயணம் - Author: shivanioo7 - Incomplete - by kadhalan kadhali - 14-07-2019, 09:45 AM



Users browsing this thread: 1 Guest(s)