ஷிவானியுடன் ஒரு பயணம் - Author: shivanioo7 - Incomplete
#4
அருண் எனக்கு முன்பே ஆபிஸ் வந்திருந்தார். என்ன கண்டு அவர் முகம் மேலும் கோபத்தில் சிவந்தது. என் அருகில் வந்து அமர்ந்துகொண்டார்.

நிதானமாக ஒரு மூச்சை இழுத்துவிட்டார்.

உன் மனசுல நீ என்னதான் நினச்சுட்டு இருக்க ஷிவானி(மேடம் காணாமல் போயிருந்தது )

இப்போது என் கோபம் நிமிர்ந்தது!இதை நான் கேக்கணும் அருண்?
காலையில் என்னை பார்த்தீங்க ஆனா நான் ஹாய் சொல்லியும் கண்டுக்காம உள்ளார போயிட்டீங்க
வெளியில் யாருடனும் நான் பேசியதில்லை ஆனால் நீங்கள் என்னையே அவமானப்படுத்தீட்டிங்க

இனிமேல் நீங்க ஆபிஸ்லயும் என்கிட்டே பேச வேண்டாம்.

ஷிவானி நீ புரிஞ்சுக்காம பேசாத, ஆபிஸ்ல வொர்க் பண்ற நீ எதுக்காக இப்படி கேவலமா பேப்பர் போடுற வேலைய பாக்குற?

எது கேவலம் அருண், பிச்சை எடுக்குறதும் பொய் சொல்லுரதும்தான் கேவலம். நான் உழைச்சு சமபாதிக்குறேன்.

இந்த ஆபிஸ்ல வர்ற சம்பளம் இங்க நான் போட வேண்டிய உடைகள் செலவுக்குதான் சரியா இருக்கும்.

எனக்கென்ன அம்மா அப்பாவா இருக்காங்க சேர்த்து வெச்சு கல்யாணம் பண்ணி வெக்குறதுக்கு. ஏதோ இப்படி கொஞ்சம் சேர்த்து கௌரவமான குடும்பத்துக்கு மருமகலா போகணும்னு நினைக்குறேன். அது உங்களுக்கு கேவலமா தெரியுது.

ஞாயமா வரதட்சினை வாங்குற கேவலமான ஆண்களை விட நான் ஒன்னும் கேவலம் இல்லை அருண். கெட் லாஸ்ட் இனி என் கூட நீங்க பேச வேண்டாம். உங்களோட ப்ரெண்ட்ஷிப்க்கு ஒரு குட் பை

மூச்சிரைக்க பேசி விட்டு ரெஸ்ட் ரூம் சென்று முகம் கழுவி வந்தேன்.

அருண் தீவிரமான யோசனைக்கு பிறகு என்னிடம் வந்து சாரி ஷிவானி...மன்னிச்சுக்கோ ப்ளீஸ் என்று சொல்லி விட்டு மார்கெட்டிங் செய்ய கிளம்பினார
Reply


Messages In This Thread
RE: ஷிவானியுடன் ஒரு பயணம் - Author: shivanioo7 - Incomplete - by kadhalan kadhali - 14-07-2019, 09:44 AM



Users browsing this thread: 2 Guest(s)