ஷிவானியுடன் ஒரு பயணம் - Author: shivanioo7 - Incomplete
#3
காலை நான்கு மணிக்கெல்லாம் கண் மிழித்து ஆக வேண்டிய வேலைகள் செய்தேன். என் சைக்கிளை எடுத்துக்கொண்டு பக்கத்தில் புக் சென்டர் சென்று இன்றைய நாளிதழ்களை வாங்கி அடுக்கிகோண்டேன்.

என்ன யோசிக்குறீங்க வாசகர்களே.....நீங்க யூகிச்சது சரிதான். நான் தினமும் நான்கு தெருவுக்கு நாளிதழ்கள் சப்ளை செய்வேன். என் கல்யாணத்துக்கு காசு சேர்க்க வேண்டுமே.

நான் சைக்கிளில் செல்லும் பொது எதிர்ப்படும் யாருடனும் பேச மாட்டேன், யாரையும் பார்க்க மாட்டேன் . அதுவே எனக்கு ஒரு நல்ல பெயரை வாங்கி தந்தது.

ஒரு வீட்டில் பேப்பர் போட்டு விட்டு திரும்பிய போது யாரோ என்னை உற்று நோக்கியதுபோல தோன்றியது. அங்கே அருண் நின்று இருந்தார்.

நான் குட் மார்னிங் சொல்லி கையை ஆட்டினேன் ஆனால் அருண் வேகமாக உள்ளே சென்று விட்டார்.

எனக்கு கோபம் தலைக்கு மேல் ஏறியது. ஆபிஸ்க்கு வரட்டும் ரெண்டில் ஒன்று கேட்ப்போம். கோபத்தில் காலை உணவைக்கூட சாப்பிடாமல் ஆபிஸ்க்கு அரைமணி நேரம் முன்னதாகவே வந்து சேர்ந்தேன்.
Reply


Messages In This Thread
RE: ஷிவானியுடன் ஒரு பயணம் - Author: shivanioo7 - Incomplete - by kadhalan kadhali - 14-07-2019, 09:44 AM



Users browsing this thread: 1 Guest(s)