Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
Thozhar Venkatesan Review: வலிகள் நிறைந்த வாழ்வை கலகலப்பாக அணுகும் 'தோழர் வெங்கடேசன்'..! விமர்சனம்

சென்னை: அரசு பேருந்து மோதியதால் இரண்டு கைகளையும் இழக்கும் நாயகன், இழப்பீட்டுக்காக படும்பாடுதான் தோழர் வெங்கடேசன் படத்தின் ஒன்லைன்.
யாரிடமும் கைக்கட்டி வேலை பார்க்க விருப்பமில்லாத அரிசங்கர், காஞ்சிபுரத்தில் உள்ள தனது வீட்டிலேயே சின்னதாக ஒரு சோடா கம்பெனி நடத்தி வருகிறார். தாய் - தகப்பனை இழந்த அரிசங்கருக்கு அவரது ஒண்ணுவிட்ட சித்தப்பா தான் ஒரே ஆதரவு. சொற்ப வருமானத்தில் வாழ்க்கை நடத்தும் அரிக்கு, பெண் கொடுக்க யாரும் தயாராக இல்லை.

[Image: thozhar587-1563003718.jpg]

இந்நிலையில் இட்லி கடை நடத்தி வரும் சார்மிளா திடீரென இறந்து போக, அனாதையாகும் அவரது மகள் மோனிகாவுக்கு ஆதரவு தருகிறார் அரி. மோனிகாவும், அரியும் வாழ்வை சந்தோஷமாக நடத்தத் தொடங்கும் நேரத்தில் நிகழ்கிறது அந்த கோர விபத்து. ஒட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து, அரிசங்கர் மீது மோதி அவரது இரண்டு கைகளையும் பறித்துச் செல்கிறது.
இரண்டு கைகளையும் இழந்த அரிக்கு ஆதரவாக தோள் கொடுக்கிறார் மோனிகா. ஒரு வழக்கறிஞர் மூலம் இழப்பீடு கேட்டு நீதிமன்றத்துக்கு செல்கிறார் அரி. சுமார் மூன்று ஆண்டுகள் விசாரணைக்கு பிறகு ரூ.20 லட்சம் இழப்பீடு தர உத்தரவிடுகிறது கோர்ட். ஆனால் அதனை தர மனமில்லாத போக்குவரத்து கழகம் அரியை அலையவிடுகிறது. இறுதியில் இழப்பீட்டு பதிலாக ஒரு பேருந்தை ஜப்தி செய்ய ஆணையிடுகிறது கோர்ட். அந்த அரசுப் பேருந்தை வைத்துக்கொண்டு அரியும், மோனிகாவும் என்னென்ன பாடுபடுகிறார்கள் என்பதை காமெடி, செண்டிமெண்ட் கலந்து சொல்கிறது 'தோழர் வெங்கடேசன்'.

[Image: thozhar87-1563003725.jpg]
தோழர் வெங்கடேசன் சொல்லும் கதை தமிழ் சினிமாவில் இதுவரை வராத புதிய கான்செப்ட். 'இழப்பீட்டுக்காக அரசு பேருந்து ஜப்தி' என நாம் கடந்துபோகும் ஒன்றைவரி செய்திக்கு பின், இத்தனை வலிகள் நிறைந்த வாழ்க்கை இருக்கிறதா? என புருவம் உயர்த்த வைக்கிறார் இயக்குனர் மகாசிவன். ஒரு சோகமான கதையை, காமெடியாக சொல்லிய விதத்தில் கவனம் ஈர்க்கிறார் இயக்குனர்.

[Image: thozhar8-1563003732.jpg]

முதல்பாதியில், நண்பர்களுடன் சேர்த்து சரக்கடித்து, ஊர் சுற்றிக்கொண்டே சொந்த பிசினசிலும் கண்ணும் கருத்துமாக இருக்கும் நாயகன், கைகளை இழந்து இரண்டாம் பாதியில் பேருந்தை பாதுகாக்கப் படும்பாடு மனதை நெகிழ வைக்கிறது. சதா சண்டைப்போடும் பக்கத்து வீட்டுக்காரர், மோனிகாவை கரக்ட் செய்ய துடிக்கும் கவுன்சிலர் என பாத்திரப்படைப்புகளும் கச்சிதம். அரசுத்துறைகள் எவ்வளவு அலட்சியமாக செயல்படுகின்றன என்பதை உண்மையாக பதிவு செய்திருக்கும் விதமும் பாராட்டுக்குறியது.

[Image: thozhar58-1563003740.jpg]
முதல் படத்திலேயே வித்தியாசமான கதை களத்துடன் வந்து கவனம் ஈர்க்கிறார் அரிசங்கர். 'என்னா ஓய் நீ' என காஞ்சிபுரத்து ஸ்லாங்கில் பேசி, நடந்து கொண்டு அந்த ஊர் பையனாகவே மாறியிருக்கிறார். வாழ்க்கையை நினைத்து ஏங்கி அழுவது, பேருந்தை பாதுகாக்க போராடுவது என நடிப்பிலும் ஸ்கோர் செய்கிறார். தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல நடிகன் அறிமுகமாகி இருக்கிறார்.
அமைதியாகவே நடித்து செமையாக ஸ்கோர் செய்கிறார் மோனிகா சின்னகோட்லா. பாந்தமான பக்கத்து வீட்டு போல இருக்கும் மோனிகா, நாயகி கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார். மற்ற நடிகர்களும் யதார்த்த மனிதர்களாக வந்து போகிறார்கள்.


[Image: thozhar12-1563003748.jpg]
இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என எல்லாமே படத்தோடு ஒன்றியிருக்கிறது. ஆனால் க்ளைமாக்ஸ் தான் கொஞ்சம் உறுத்தல். படத்தை எப்படி முடிப்பது என தெரியாமல், ஏற்கனவே நிகழ்ந்த அரசியல் சம்பவங்களோடு (தர்மபுரி பஸ் எரிப்பு) தொடர்புப்படுத்தி முடித்திருப்பது தான் மைனஸ்.
இருந்தாலும் 'தோழர் வெங்கடேசன்' வரவேற்கத்தக்க புதிய முயற்சி.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 14-07-2019, 09:18 AM



Users browsing this thread: 12 Guest(s)