14-07-2019, 09:13 AM
அதற்கு உடனடியாக பதில் சொல்ல வேண்டும் என்று இல்லை வேணு சார் ஹரி கிட்டே பைக் கிடையாது அதனால் அவர் எனக்கு டிரைவராக இருக்க முடியாது நான் பஸ்சில் தான் போகணும் வரட்டுமா என்று சொல்லிவிட்டு ஜாஸ்மின் கிளம்பினாள். பஸ் ஸ்டாப் வந்ததும் ஹரிக்கு போன் செய்து வேணு அடித்த கம்மென்ட் பற்றி சொல்லி அவளுக்கு அது பிடிக்கவில்லை என்பதை அவனுக்கு தெரிய படுத்தினாள். ஹரி வரட்டுமா என்று கேட்க அவள் வேண்டாம் நான் பஸ் எடுத்து போய்விடுவேன் என்று சொல்லும் போதே அவள் போக வேண்டிய பஸ் வர ஏறி ஜன்னல் ஓரமாக இருந்த இருக்கையில் அமர்ந்தாள். பஸ்ஸில் கூட வேணு ஹரியை டிரைவர் என்று சொன்னதே அவளுக்கு நினைவுக்கு வர அதன் தொடர்ச்சியாக இது வரை ஹரி ஏன் பைக் வாங்கவில்லை அவன் அப்பா வாங்கி தரமுடியாதுன்னு சொல்லி இருப்பாரோ என்று மூளையை குழப்பிக்கொண்டே இருந்தாள். வீட்டிற்கு சென்று உணவு எடுத்த கையோடு அசதியில் உடனே தூங்கியும் போனாள் அவளுடைய அம்மா இது வரை ஜாஸ்மின் இப்படி அசந்து தூங்கியதை பார்த்தது இல்லை அவள் அருகே அமர்ந்து அவள் தலைமுடியை கோதிவிட்டு அவள் கால்களை லேசாக அழுத்தி விட்டாள். இப்படியாக ஒரு வாரம் முடிவதற்குள் ஜாஸ்மின் வேலைக்கு போவதை விரும்ப ஆரம்பித்தாள். சில நாட்கள் ஹரி காலையில் அவள் கூட வந்தான் சில நாட்கள் மாலையில் வந்தான். சனிகிழமை மதியம் மூன்று மணிக்கு தாமரை ஜாஸ்மின் இன்னைக்கு அரை நாள் தான் கிளம்பு என்றதும் ஜாஸ்மினுக்கு உடனே வீட்டிற்கு போக விருப்பம் இல்லை ஆகவே ஹரிக்கு போன் செய்தாள் ஹரி அவன் நண்பனுடன் ஒரு முக்கிய வேலையாக இருப்பதாக சொன்னதால் அவள் கவனம் தாமரை பக்கம் திரும்பியது. அவளிடம் வீட்டிற்கா போகிறாய் என்று கேட்க அவள் இல்லபா இன்னைக்கு MBA காண்டாக்ட் கிளாஸ் இருக்கு என்று சொல்ல ஜாஸ்மின் அதை பற்றி பேசிக்கொண்டே நடந்தாள். தாமரை ஆட்டோ எடுத்து போனதும் ஜாஸ்மின் பஸ்சிற்காக காத்திருந்தாள். அப்போ அவள் அருகே ஒரு கார் நிற்க ஜாஸ்மின் வேறு யாருக்காகவோ நிற்கிறது என்று ஒதுங்கி நின்றாள். ஆனால் காரின் கதவை திறந்து வேணு என்ன ஜாஸ்மின் பஸ் வரலியா வாங்க இன்னைக்கு நான் உங்க டிரைவராக இருக்கிறேன் என்று சொல்ல ஜாஸ்மினுக்கு இந்த ஆள் முன் ஜன்மத்தில் டிரைவர் வேலை பார்த்திருப்பாரோ என்ற சந்தேகம் வந்தது.