14-07-2019, 09:12 AM
இறுதியில் ஒரு உடன்பாட்டிற்கு வந்தோம் நான் பயிற்சிக்கு போவது ஆனால் வேலைவாய்ப்பு வந்தால் அதை ஏற்று கொள்வதில்லை என்று.. அடுத்த ஒரு மாதம் தினமும் பயிற்சிக்கு போவது என்ற நிலையில் வேறு எந்த நினைவும் வரவில்லை. பயிற்சி முடித்து பயிற்சி எடுதுக்கொண்டவர்களுக்கு இடையே ஒரு போட்டி வைக்கப்பட்டு சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் முதல் மதிப்பெண் பெற்றேன். அந்த இறுதி நாள் நிகழ்ச்சிக்கு வந்திருந்த இப்போ நான் வேலை செய்யும் வங்கியின் பொது மேலாளர் என் திறமையை பாராட்டி அடுத்து அவர்கள் வங்கியில் ஆட்கள் தேவைப்படும் போது என்னையும் தவறாமல் விண்ணப்பிக்க சொன்னார். அவ்வளவு பெரிய பதவியில் இருப்பவர் சொல்லும் போது என்னால் ஏதும் சொல்ல முடியவில்லை. அவர் சொன்னது போலவே அந்த மாத இறுதியில் அந்த வங்கியின் விளம்பரம் வெளி வர நான் ஹரிக்கு சொல்லாமல் விண்ணப்பித்தேன்.
எழுத்து தேர்வு அன்று அப்பாவிடமும் அம்மாவிடமும் மட்டும் சொல்லிக்கொண்டு கிளம்பினேன். தேர்வு நினைத்ததை விட கடினமாகத்தான் இருந்தது. ஆனால் நிச்சயம் அந்த அதிகாரியின் உதவி மறைமுகமாக எனக்கு இருந்திருக்க வேண்டும் அதனால் தான் அடுத்த கட்ட நேர்காணல்கள் முடித்து இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது ஆனால் ஒரு பெரிய இடியாக நான் முதல் வெய்டிங் லிஸ்ட் ஆக சேர்க்கபட்டிருந்தேன். சரி இது வரை வந்ததே பெரிய விஷயம் இனி வேலை கிடைக்க போவதில்லை என்ற தைரியத்தில் நான் அந்த வங்கி தேர்வில் கலந்து கொண்டதை ஹரியிடம் சொல்லுவது என்று முடிவு செய்து அவனிடம் எல்லாவற்றையும் சொன்னேன். இங்கேயும் ஒரு எதிர்பாரா திருப்பம் ஏற்ப்பட்டது என்னவென்றால் ஹரி கத்துவான் என்று நான் நினைத்திருக்க அந்த வங்கியின் பெயரை சொன்னதும் அவன் கவலை படாதே எப்படியும் இந்த வேலையை வாங்கி விடலாம் என்று சொல்ல நான் அவனை அச்சரியத்துடன் எப்படி என்று கேட்டேன். அவன் மேலே ஒன்றும் சொல்லாமல் என் விவரங்கள் மட்டும் வாங்கிக்கொண்டான்.
அடுத்த சில நாட்கள் நானும் ஹரியும் சந்திப்பது பேசுவது என்று இருக்க ஒரு நாள் அவன் என்னை அழைத்து ஜாஸ்மின் என்ன ட்ரீட் என்றான் நான் எதுக்கு ட்ரீட் என்று கேட்க அவன் ட்ரீட் குடு சொல்லறேன் என்றான். நானும் சரி மாலை நாம் சந்திக்கும் நேரம் அதே இடம் என்று சொல்ல இருவரும் மாலையில் சந்தித்தோம். ஹரி என் கையை குலுக்கி நாளைக்கு உன் வீட்டிற்கு அப்பாயின்ட்மென்ட் லெட்டர் வரும் என்றதும் என்னால் நம்பவும் முடியவில்லை நம்பாமலும் இருக்க முடியவில்லை. சாலை என்றும் பார்க்காமல் அவனை கட்டி பிடித்து கன்னத்தில் முத்தம் குடுத்து தேங்க்ஸ்டா என்றேன். அங்கிருந்த படியே வீட்டிற்கு கால் பண்ணி அப்பாவிடமும் அம்மாவிடமும் சொல்லி மகிழ்ந்தேன். அப்பா எப்படி தெரிந்தது என்று கேட்க தைரியமாக ஹரி என்ற என் நண்பன் சொன்னான் என்று சொல்ல அப்பா அவனை பற்றி விசாரிக்க நான் கொஞ்சமாக சொல்லி வைத்தேன். அம்மாவிடம் மட்டும் எல்லாவற்றையும் சொல்லி காரணம் ஹரி என்று முடிக்க அம்மா பார்த்தியா அம்மா ஒரு முடிவு செய்தால் அது உனக்கு நன்மையில் தான் முடியும் என்றாள்