14-07-2019, 09:12 AM
நான் உள்ளே சென்று முகம் கழுவி உடை மாற்றி ஜபம் செய்த பிறகு அப்பா என்னை அவர் அருகே அழைத்தார். நான் அருகே சென்றதும் அப்பா என்னிடம் அன்றைய தினசரியை காண்பித்து அதில் வந்திருந்த ஒரு விளம்பரத்தில் பெண்களுக்கு ப்ரேத்யேக பயிற்சி உடனடி வேலை வாய்ப்பு என்று போட்டிருக்க அப்பா என்னிடம் இதற்கு நீ விண்ணப்பம் அனுப்பு என்றார். இது வரை அவர் சொல்லி நான் எதையும் தட்டினதே கிடையாது ஆனால் அப்பாவிடம் எதுக்கு நான் வேலைக்கு போகணும் அக்கா வீட்டில் தானே இருந்தா என்று கேட்க அப்பா அக்கா வேறு நீ வேறு உன்னால் வீட்டில் சும்மா இருக்க முடியாது அதனால்தான் சொல்லுகிறேன் என்றதும் எனக்கு ஒரு வேளை இன்று நான் வெளியே சென்று வந்த பலனாக இருக்குமோ என்று யோசித்தேன். ஆனால் மனதில் சரி சும்மா இருப்பதை போய் தான் வருவோமே என்ற எண்ணம் வர அடுத்த நாள் விண்ணப்பிக்க முடிவு செய்தேன். ஹரிக்கு கால் செய்து அடுத்த நாள் என்னுடன் அந்த நிறுவனத்திற்கு வர முடியுமா என்று கேட்க அவன் பயங்கரமா சண்டை போட ஆரம்பித்தான். நான் எதுக்குடா வேண்டாம் என்று சொல்லறே வேலைக்கு போவதால் கையில் கொஞ்சம் பணம் கிடைக்கும் இல்ல என்று சொல்லி பார்க்க அவன் பிடிவாதமாக கூடாது என்பதில் நின்றான். நான் அவன் சொல்லுவதை சட்டை செய்யாமல் அடுத்த நாள் அந்த நிறுவனத்திற்கு சென்று என் விண்ணப்பத்தை சமர்ப்பித்தேன். அடுத்த திங்கட்கிழமையில் இருந்து பயிற்சி ஆரம்பம் என்று தெரிந்து வந்தேன். சனிகிழமை வரை ஹரி என்னிடம் பேசவே இல்லை நானாக அவனுக்கு சனிகிழமை மாலை அழைத்து அவனிடம் சமாதானமாக பேசி திங்கட்கிழமை முதல் பயிற்சி ஆரம்பம் என்பதை சொல்ல அவன் கோபத்தின் உச்சத்தில் நீ மட்டும் திங்கட்கிழமை போ அப்புறம் என்ன நடக்குது பார் என்று எச்சரிக்க எனக்கு ரோஷம் வந்தது அவனிடம் நான் போகத்தான் செய்வேன் உன்னால் என்ன செய்ய முடியுமோ செய் என்று சவால் விட்டு முடித்தேன் இரவு அண்ணா வந்ததும் அவனிடம் திங்கட்கிழமை என்னுடன் அந்த நிறுவனத்திருக்கு வர சொன்னேன். காரணம் ஒரு வேளை ஹரி என்னை வழியில் மடக்கி தடுக்க முயற்சிப்பான் என்ற பயத்தில்.
திங்கட்கிழமை அண்ணா பைக்கில் நான் சென்று அந்த பயிற்சி மையத்தை அடைய வாசல் எதிரே இருந்த கடையில் ஹரி நிற்ப்பதை பார்த்துவிட்டேன் நல்ல வேளை அண்ணாவை வர சொன்னது இல்லையென்றால் கண்டிப்பாக ஹரி என்னை மடக்கி ஒரு பெரிய நாடகம் நடத்தி இருப்பான் என்று நினைத்துக்கொண்டேன். வகுப்பு சென்று அமர ஆண்கள் பெண்கள் இருவரும் சரி சகவீதத்தில் இருந்தனர். வகுப்பு ஒருங்கிணைப்பாளர் வந்து தன்னை அறிமுக படுத்திக்கொண்டு எங்களையும் அறிமுகபடுத்தி கொள்ள சொல்ல முதல் வகுப்பு முடிந்து அடுத்த வகுப்பு பயிற்சியாளர் வந்து பேச ஆரம்பிக்கும் போது வாசலில் ஒரு சிப்பந்தி வந்து என் பெயரை சொல்லி கேட்க நான் எழுந்து நின்றேன். அந்த சிப்பந்தி பின்னால் இருந்து ஹரி வந்து தன்னை என்னுடைய அண்ணன் என்று சொல்லிக்கொண்டு எங்கள் அப்பா ரொம்பவும் சீரியசாக இருப்பதால் அழைத்து போக வந்திருப்பதாக சொல்ல பயிற்சியாளரும் என்னிடம் கிளம்ப சொன்னார். வெளியே வரும் வரை அமைதியாய் இருந்து வெளியே வந்ததும் இருவரும் பயங்கரமாக சண்டை போட்டுக்கொண்டோம்.