14-07-2019, 09:11 AM
இறுதியாக ஹரிக்கு கால் செய்தேன் அவனிடம் நான் அவனை பார்க்கவேண்டும் என்று சொல்லும் போதே மனதில் கடவுளே இவனும் என்னை வெறுத்து ஒதுக்கி விட கூடாது என்று வேண்டிக்கொண்டேன். ஹரி என்னாச்சுபா ஜாஸ்மின் இப்போ எங்கே இருக்கே என்று கேட்டு சரி நீ ஒண்ணு பண்ணு நீ உன் சர்ச்சுக்கு போய் சண்டே மாசில் கலந்துக்கோ நான் இன்னும் ஒரு மணி நேரத்தில் அங்கே வருகிறேன் என்றான். அவன் சொன்னதும் தான் நான் உணர்ந்தேன் நான் எப்படி சண்டே அதுவுமா கடவுளை மறந்து எங்கே போவது என்று குழம்பி கொண்டிருந்தேன் உடனே சர்ச் போகும் பஸ்ஸை எடுத்து சர்சிற்கு போனேன். அங்கே தமிழ் மாஸ் நடந்து கொண்டிருந்தது. நான் பொதுவாக ஆங்கில மாஸ் தான் கலந்து கொள்ளுவேன் என்பதால் சர்ச் ப்ரேயர் ஹால் தாண்டி உள்ளே இருந்த பாவ மன்னிப்பு கேட்கும் இடத்திற்கு சென்றேன். எனக்கு முன்னே சிலர் காத்திருந்தார்கள் என் சான்ஸ் வந்ததும் நான் பாதர் முன் மண்டியிட்டு என் சமீபத்திய எல்லா தவறான செயல்களையும் சொல்லி மன்னிப்பு கோரினேன். பாதர் கேட்டுவிட்டு எனக்கு ஏசுநாதர் மன்னிப்பு அருள்வாராக என்று சொல்லி பாவ மன்னிப்பு கேட்ட பிறகு அதே தவறை செய்வது மிக பெரிய பாவம் மகளே என்று சொல்ல நான் கண்ணீர் மல்க தெரியும் பாதர் நிச்சயம் நான் இனி எந்த பாவ செயல்களும் செய்ய மாட்டேன் என்று சொல்லி அவர் என் தலையில் கை வைத்து ஆசிர்வதிக்க எழுந்து மீண்டும் பிராத்தனை ஹாலுக்கு சென்றேன். வாசல் ஓரமாக ஒரு இருக்கையில் அமர்ந்து கண் மூடி ஜபிக்க துவங்கினேன்.
என் தோளை யாரோ தட்டுவது போல தோன்ற கண்ணை திறந்து பார்த்தேன் ஹரி நின்று கொண்டிருந்தான். என்னிடம் போகலாமா இல்லை இன்னும் பிராத்தனை முடியவில்லையா என்று கேட்க நான் அவனிடம் இல்லை இன்னும் ஆங்கில மாஸ் ஆரம்பம் ஆகவில்லை என்றதும் ஹரி சரி நான் எதிரே இருக்கிற ப்ரூட்ஷாப்பில் இருக்கிறேன் என்று சொல்லி சென்றான். அவன் போவதையே பார்த்துக்கொண்டு இருந்த நான் ச்சே எவ்வளவு நல்லவன் என்னிடம் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறான் இவனை போய் நாம் ஒதுக்கி இருந்தோமே என்று வருந்தினேன். அதற்குள் மாஸ் ஆரம்பம் ஆக நான் அந்த மாசில் என் முழு கவனமும் செலுத்தி பிராத்தனை முடித்து வெளியே வந்தேன். எதிரே இருந்த ப்ரூட் ஷாப்பில் ஹரி காத்திருக்க நான் அவனுடன் சென்று அமர்ந்தேன்.