Misc. Erotica பணம் பதவி பத்தினி - Author: Mohini_7 - Incomplete
#48
வீட்டிற்கு செல்லும் வரை பஸ்ஸில் மெளனமாக அழுது கொண்டிருந்தேன். வீட்டிற்குள் நுழைந்தவுடன் அம்மா என்னை பார்த்துவிட்டு சமையல் அறைக்கு இழுத்து சென்று என்னிடம் ஜாஸ்மின் உனக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி மனசை அலட்டிக்கறே என்று ரொம்ப கவலையுடன் கேட்க நான் அவள் தோளில் சாய்ந்து கொண்டு அழுதேனே தவிர காரணத்தை சொல்லவில்லை சொல்லவும் முடியாது. அம்மா என் தலையை ஆதரவாக தடவிக்கொடுத்து ஜாஸ்மின் இந்த வயசுலே இப்படி மனசு அலைப்பாயறது ரொம்ப சகஜம் நீ தான் உன் மனதை கட்டுப்பாடுடன் வைத்துக்கொள்ள முயற்சிக்கணும். இத்தனை நாள் உன்னால் அவனை பார்க்காமல் இருக்க முடிந்தது அல்லவா பிறகு இப்போ எதுக்காக அவனை பார்க்க போனே அவனுக்கும் பரிச்சை நேரம் என்றதும் நான் அம்மாவை இறுக்கமாக கட்டிப்பிடித்துக்கொண்டேன். இப்படி ஒரு அம்மா கிடைக்க நான் குடுத்து வைத்திருக்க வேண்டும் இனி அவங்க கிட்டே எதையும் மறைக்காமல் பகிர்ந்து கொள்ளணும் என்று முடிவு எடுத்தேன்.


இரவு நான் எதிர்ப்பார்க்காத வகையில் நன்றாக நிம்மதியாக தூங்கினேன். என் பக்கத்தில் என் அக்கா குழந்தையை படுக்க வைத்துக்கொண்டேன். அவனின் பிஞ்சு கைகளை லேசாக வருடிக்கொண்டே தூங்கிவிட்டேன். அடுத்த ஒரு வாரம் வெளியே எங்கும் போகாமல் வீட்டில் என் கவனம் முழுவதையும் அக்கா குழந்தையுடன் இருப்பதிலேயே கழித்தேன். அந்த மாற்றம் எனக்கு நல்ல மன அமைதியை கொடுத்தது. மேலும் தேவையில்லாத குரங்கு எண்ணங்களுக்கும் வழி செய்யவில்லை. அன்று ஞாயிறு அக்கா வீட்டுக்காரர் காலையிலேயே வந்துவிட்டார். அக்கா இன்னமும் முழுமையாக உடல் தேறாததால் அம்மா மாமாவை கவனிக்குமாறு சொல்ல நான் மாமாவிற்கு காபி டிபன் எடுத்து போய் குடுக்க அக்கா என்னை பார்த்து என்றும் இல்லாத வகையில் மாமா எதிரிலேயே ஹே ஜாஸ்மின் நீ எதுக்கு இதையெல்லாம் செய்யறே அம்மா எங்கே போனாங்க என்று கத்த எனக்கு புரியவில்லை இவ எதுக்கு கத்தறா நான் எடுத்து வந்ததற்க்கா அல்லது அம்மா எடுத்து வரவில்லை என்பதற்கா என்று ஆனால் உடனே அறையை விட்டு வெளியேறினேன். அம்மா அறைக்கு போனால் அப்பா அங்கே ஓய்வு எடுத்து கொண்டிருந்தார்கள் அதனால் அங்கே என்னால் டிவி பார்க்க முடியாது ஹாலுக்கு போகலாம் என்றால் அக்கா மாமா குழந்தையுடன் அங்கே இருந்தார்கள் திடீரென்று எனக்கு என் வீட்டிலேயே இடம் இல்லாதது போல கருதினேன்.


வேறு வழின்றி குளித்து வெளியே கிளம்பினேன். அம்மா எங்கே போறே என்று கேட்க நான் என் தோழி வீட்டிற்கு என்று சொல்லி கிளம்பினேன். பஸ் நிறுத்தத்தில் அவளுக்கு கால் பண்ணி வரட்டுமா என்று கேட்க அவ என்னடி இவ்வளவு காலையில் என்ன வீட்டில் ஏதாவது சண்டை போட்டியா வீட்டிலே அப்பா அவங்க உறவினர்கள் வந்து இருக்காங்க என்று சொல்ல எனக்கு சுருக்கென்று இருந்தது. இவளும் என்னை ஒதுக்குகிறாலா அப்படிப்பட்ட பாவப்பட்ட செயலை நான் செய்து இருக்கேனா என்று குழம்பினேன்.
Reply


Messages In This Thread
RE: பணம் பதவி பத்தினி - Author: Mohini_7 - by kadhalan kadhali - 14-07-2019, 09:11 AM



Users browsing this thread: 5 Guest(s)