14-07-2019, 09:10 AM
நான் நினைத்தபடியே கொஞ்ச நேரம் கழித்து ஹரி வெளியே வந்தான் இருவரும் காரிடாரில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொஞ்ச நேரம் பேசாமல் இருக்க நான் மௌனத்தை கலைத்து ஹரி எதுக்குடா அம்மாவையெல்லாம் நம்ப ப்றேச்சனையில் சேர்க்கிறே அவங்க சொன்னா நான் கேட்பேனா இந்த மாதிரி எல்லாம் என்னை கட்டாய படுத்தாதே. உனக்குத்தான் தெரியுமே எனக்கு இப்போ வேறு பையனுடன் தொடர்பு இருக்குனு அப்புறம் எதுக்கு என் பின்னாடி வரே என்று என் நிலையை காட்டிக்கொள்ளாமல் அவனிடம் நடிக்க அவன் என்னிடம் பரிதாபமாக ஜாஸ்மின் இப்படியெல்லாம் பேசாதே என்னாலே எக்ஸாம்முக்கு படிக்கவே முடியலே ப்ளீஸ் என்று கெஞ்சினான். நான் அதற்கு உடனே மசிந்து விடுவது போல காட்டிகொள்ளாமல் முறைத்துக்கொண்டே இருக்க இறுதியில் அவனுக்கு ஆறுதல் அளிப்பது போல சரி நீ போய் படி எக்ஸாம் முடிஞ்ச பிறகு பேசிக்கலாம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அம்மா வெளியே வந்து எங்க அருகே வந்து ஹரியிடம் தம்பி நீ முதலில் எக்ஸாம் எழுது நல்லபடியா பாஸ் செய்து வேலையில் சேரு இவ நான் சொல்லறத கண்டிப்பா கேட்பா என்று சொல்லி என்னிடம் ஜாஸ்மின் அம்மா மேலே சத்தியம் செய் நான் சொல்லறத கேட்கிறேன்னு என்று என்னிடம் கேட்க உள்ளுக்குள் அம்மா எனக்கு எந்த அளவு உதவி செய்கிறார்கள் என்று சந்தோஷப்பட்டுக்கொண்டு வெளியில் அதை காட்டிக்கொள்ளாமல் சரி சரி என்று சொல்ல அம்மா ஹரியிடம் சரி தம்பி நீ கிளம்பு என்றதும் நான் அம்மாவிடம் அம்மா நான் அவனுடன் பஸ் ஸ்டாப் வரை போய் வருகிறேன் அப்பா இல்ல அக்கா கேட்டா சமாளி என்று சொல்லி ஹரியுடன் வெளியே நடந்தேன்.
வாசலில் ஹரியிடம் ஹரி அம்மா சொன்ன ஒரே வார்த்தைக்கு தான் நான் இப்போ உன் கூட பேசறேன் ஆனா நான் சொன்னதெல்லாம் உண்மை எனக்கு வேறு ஒரு நண்பன் இருக்கான் உன் கிட்டே மறைக்க விரும்பவில்லை என்றதும் ஹரியின் முகம் கொஞ்சம் சிறுத்தாலும் அவனுக்கு நான் மீண்டும் அவனுடன் தனியாக வந்து பேசினது நிம்மதியை கொடுத்தது. பஸ் ஏறும் போது நான் அவனிடம் அக்கா நாளை மறுநாள் வீட்டிற்கு வந்துவிடுவாள் நம்ப நாளைமறுநாள் மாலை சந்திப்போம் என்றதும் அவன் பயங்கர மகிழ்ச்சியுடன் கையாட்டி பசில் ஏறினான்.
அக்கா வீட்டிற்கு வந்ததும் எல்லா கவனமும் அப்பா அக்கா அவ குழந்தை மேல் இருக்க நான் மாலையில் ஹரிக்கு ரொம்பவும் பிடித்த சூடியை போட்டு அவனை பார்க்க கிளம்பினேன். நான் சொன்ன நேரம் தாண்டி அரைமணி நேரம் ஆகி இருந்தாலும் அவன் அந்த இடத்தில காத்திருந்தான். நான் அணிந்திருந்த உடையை பார்த்ததும் அவனுக்கு ரெட்டிப்பு மகிழ்ச்சி. நான் அவனிடம் நடந்து கொண்டே பேசலாம் என்று சொல்ல இருவரும் நடக்க ஆரம்பித்தோம். நான் ஏற்கனவே அவனிடம் என்ன பேசணும் என்று முடிவு செய்து வைத்திருந்தேன். ஆனால் உடனே அந்த விஷயத்தை பேசாமல் அவன் எப்படி எக்ஸாம் ப்ரிபேர் செய்கிறான் என்னைக்கு எக்ஸாம் ஆரம்பம் போன்ற விஷயங்களை பேசி அவன் தங்கை எப்படி இருக்கிறாள் என்று தொடர்ந்து அவன் வீட்டு நாய்க்குட்டி எப்படி இருக்கு என்பது வரை பேசி பிறகு அவனிடம் நான் பேச நினைத்ததை பேச ஆரம்பித்தேன்.