14-07-2019, 08:58 AM
அக்கா சொன்ன மாதிரி திங்கட்கிழமை நர்சிங் ஹோமில் அட்மிட் ஆனாள். அம்மா அவளிடம் செல்ல அப்பாவின் வீட்டிற்கு வரும் தேதி ஒரு வாரம் தாமதம் செய்யப்பட்டது. அப்பாவுடன் நான் இருக்க போகிறேன். ஆனால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் அந்த நர்சிங் ஹோமில் இருந்த நர்ஸ் ஒருவரை இரவு பார்த்துக்க சொல்லி நான் வீட்டிற்கு சென்று அப்பாவின் துணி தோய்ப்பது போன்ற வேலைகளை செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. அண்ணன் வீட்டில் சமையல் கிடையாது என்பதால் அந்த வாரம் அவன் நண்பனுடன் அவனது அறையில் தாங்கிக்கொள்ள முடிவு செய்தான். முதல் ரெண்டு நாட்கள் மாலையில் மகேந்திரன் ட்யூட்டி ரௌண்ட்ஸ் வந்தார் அப்பாவை செக் செய்தார் என்னிடம் பொதுவாக பேசிவிட்டு சென்றுவிடுவார். இந்த பழக்கம் எனக்கு எரிச்சலை ஏற்ப்படுத்தியது அடுத்த நாள் அப்பா மதியம் தூங்கின பிறகு நான் மகேந்திரனை அழைத்தேன். அவர் சொல்லுடா செல்லம் என்னை இன்னும் நியாபகம் இருக்கா என்று கேட்க நான் கோபத்துடன் கத்த ஆரம்பித்தேன். நான் முடிக்கும் வரை அமைதியாய் இருந்தவர் சரி இப்போ நீ இவ்வளவு திட்டினாயே பத்து நாட்களா ஒரு முறையாவது நீ எனக்கு போன் பண்ணினியா அட்லீஸ்ட் மெசாஜ் எதுவும் இல்லை இப்போ எதுக்கு கத்தறே என்று கேட்க நான் அதே கேள்விகளை அவரிடம் கேட்க அவர் முதலில் உன் மொபைலில் என் மெசஜ் எத்தனை வந்து இருக்கு என்று பாரு என்ற பிறகு தான் எனக்கு உரைத்தது. இத்தனை நாளா நான் என் போனில் மெசஜ் செக் செய்யவில்லை காரணம் என் மனநிலை தான் மேலும் ஒரு வாரமாக நான் மகேந்திரனை பார்க்கவும் இல்லை அதனால் கோபத்தில் மெசஜ் வந்திருக்கா என்று கூட கவனிக்க வில்லை. என் தவறை உணர்ந்து சாரி என்றேன். மகேந்திரன் சரி பொழச்சு போ சின்ன பொண்ணு என்றதும் எனக்கு ரோஷம் வந்தது யார் சின்ன பொண்ணு என்று கேட்டு சரி நான் இன்னைக்கு மாலை வீட்டிற்கு போகும் போது உங்களை பார்க்கணும் எந்த சாக்கும் சொல்ல கூடாது இரவு அப்பாவுடன் ஒரு நர்ஸ் இருப்பாங்க என்றதும் மகேந்திரன் உத்தரவு அரசி என்று முடித்தார்.