14-07-2019, 08:56 AM
வேறொரு ட்யூட்டி டாக்டர் வந்து அப்பாவின் ரத்த கொதிப்பு இதய துடிப்பு ஆகிய ரெகுலர் செக் அப் செய்ய நான் அவரிடம் மெதுவாக டாக்டர் மகேந்திரன் எப்போ ட்யூட்டிக்கு வருவார் என்று விசாரிக்க அவர் வந்து தான் என்னை மாற்ற வேண்டும் என்று அந்த டாக்டர் சொல்ல நான் வேறு எதுவும் பேசவில்லை. அம்மா வந்து அப்பாவிற்கு உணவு குடுத்து அவரும் சாப்பிட என்னை அருகே அழைத்து ஜாஸ்மின் அப்பா வீட்டிற்கு வந்தாலும் அவருக்கு எந்த விதத்திலும் தொந்தரவு இருக்க கூடாது என்று சொல்ல நான் கோபமாக அதை ஏன் என்னிடம் சொல்லறே நான் என்ன தொந்தரவு செய்ய போறேன் என்று கேட்க அம்மா பொதுவாக சொன்னதாக சொன்னாலும் அவர் சொன்னதில் காரணம் இருக்கு என்று எனக்கு பட்டது. அந்த நேரம் பார்த்து நர்ஸ் வந்து மேடம் டாக்டர் மகேந்திரன் வந்துவிட்டார் என்று சொல்ல எனக்கு தூக்கி வாரி போட்டது இப்போ இந்த விஷயம் ரொம்ப அவசியமா அம்மா இப்போ தான் பொடி வச்சு பேசினாங்க இப்போ என் கிட்டே எதுக்கு மகேந்திரன் பத்தி நர்ஸ் சொல்லனும்னு சந்தேக படமாட்டான்களா என்று கவலை பட அம்மா யாருடி அது மகேந்திரன் என்று கேட்க நான் அடுத்த பொய்யை உடனே உருவாக்கினேன். இல்லமா நேத்து மாலை வீட்டிற்கு போகும் போது என் கிளாஸ் மேட் ஒருத்தி பஸ்சில் இருந்தாள் அவ கிட்டே நான் அப்பாவை பற்றி சொல்லும் போது அவ சொன்னா அவ கசின் டாக்டர் மகேந்திரன் இந்த நர்சிங் ஹோமில் தான் இருப்பதாகவும் ரொம்ப நல்ல டாக்டர் என்றும் சொல்லி இருந்தா அது நர்ஸ் கிட்டே வந்து இருக்கறா என்று கேட்டேன் என்றதும் பாவம் அம்மா அதையும் நம்பி விட்டார்கள்.