14-07-2019, 08:51 AM
மீண்டும் கல்லூரி திறந்ததும் முதல் நாள் ஜாஸ்மினின் ஆள் பஸ்ஸில் வரவில்லை அவளுக்கு பெருத்த ஏமாற்றம் கல்லூரிக்கு செல்லும் வழியிலேயே அவளின் நெருங்கிய தோழிகள் இருவரை தடுத்து நிறுத்தி அவள் அவர்களை தன்னுடன் வருமாறு அழைக்க அவர்கள் ஏன் எதற்கு போன்ற கேள்விகள் கேட்டு இறுதியில் ஒத்துக்கொண்டு அந்த பையன் படிக்கும் கல்லூரி அருகே சென்றனர். ஆனால் எல்லோருக்கும் இருந்த ஒரே சந்தேகம் அவன் கல்லூரி வரை போனால் கூட அவன் வகுப்பில் இருக்கிறானா அல்லது இன்று கல்லூரிக்கே வரவில்லையா என்று ஆனால் ஜாஸ்மின் உறுதியாக இருந்தால் இன்று அவனை எப்படியாவது பார்த்து பேசிவிட வேண்டும் என்று. அவளுக்கு அவள் வேண்டிய கடவுள்கள் கைவிடவில்லை மூவரும் அந்த கல்லூரி பஸ் நிறுத்தத்தில் இறங்கும் போதே அந்த பையனும் வேறு சில நண்பர்களும் கல்லூரி மதில் சுவற்றின் மேல் அமர்ந்து இருந்தனர். ஜாஸ்மினை பார்த்ததும் அந்த பையனின் முகத்தில் ஆயிரம் வாட் பல்பு போன்ற பிரகாசம் தெரிந்தது. இதற்கு மேல் அவனை அவள் பின்னாடி வர செய்வது சுலபம் என்று தெரிந்து கொண்ட ஜாஸ்மின் அவன் கல்லூரிக்கு எதிரே இருந்த பூங்காவிற்குள் தனது தோழிகளுடன் சென்றாள். அவள் நினைத்தது போலவே அவர்களை பின்தொடர்ந்து அந்த பையனும் பூங்காவிற்குள் தனது நண்பன் ஒருவனுடன் வந்தான். அவனுக்கு விளையாட்டு காட்டும் வகையில் ஜாஸ்மின் அங்கும் இங்கும் பூங்காவிற்குள் செல்ல அவனும் அவர்களை தொடர்ந்தான். ஆனால் அன்று பூங்காவில் அதிகமான கூட்டம் இருந்ததால் ஜாஸ்மின் ஒரு வேளை இவ்வளவு தூரம் வந்தும் அவனுடன் பேச முடியாமல் போய் விடமோ என்ற அச்சத்தில் அவளுடைய தோழிகளை கேட்க ஒரு தோழி அருகே பெசன்ட் நகர் பீச் இருக்கு இந்த நேரத்தில் கூட்டம் இருக்காது என்று யோசனை சொல்ல தோழிகள் பூங்காவை விட்டு வெளியே வந்தனர். அடுத்து வந்த பஸ்ஸில் ஏறி பெசன்ட் நகர் பீச்சிக்கு டிக்கெட் எடுத்தாள் அவள் நினைத்தது மாதிரியே அவன் மற்றுமொரு நண்பனுடன் அடித்துபிடித்து அந்த பஸ்ஸில் ஏறி கண்டக்டரிடம் ஏதோ பேச இவர்களுக்கு புரிந்தது அவர்கள் என்ன கேட்டிருப்பார்கள் என்று.
தோழி சொன்னது மாதிரியே பெசன்ட் நகர் பீச் வெறிச்சோடி இருந்தது சில மீனவ நண்பர்கள் மற்றும் இவர்களை போல கடலை போட வந்த ஜோடிகளை தவிர. தோழிகள் மூவரும் கடல் அருகே செல்ல அவர்கள் தங்கள் கைப்பை மற்றும் காலணிகளை மணலில் வைத்து சென்றனர். அந்த பையனும் அவன் நண்பனும் கடல் அருகே வருவார்கள் என்று ஜாஸ்மின் நினைக்க அவர்கள் தூரத்தில் ஒரு நிழலில் நிற்ப்பது பார்த்து அவளுக்கு கொஞ்சம் கோபம் வந்தது சரியான வாத்து மடையனா இருப்பான் போல இருக்கே இவ்வளவு தூரம் நான் வந்தும் அவன் என்னிடம் பேச முயற்சிக்கவில்லையே என்ற கோபம். அவளும் அவள் தோழிகளும் ஒரு அரைமணி நேரம் பார்த்து இதற்கு மேல் அவன் வர மாட்டன் என்ற முடிவில் இவனை காதலிப்பதை விட சும்மா இருப்பதே மேல் என்ற முடிவில் இருந்தால் ஜாஸ்மின்.
தங்கள் உடமைகள் இருக்கும் இடத்திற்கு வந்து பார்த்தால் ஜாஸ்மின் காலணிகள் மட்டும் காணவில்லை உச்சி வெயிலில் அவளுக்கு கால்கள் சுட்டு எரித்தன அவள் திண்டாடுவதை பார்த்த அந்த பையன் அவன் அருகே வா என்று கையால் சைகை செய்ய ஜாஸ்மின் இருந்த கோபத்தில் சரிதான் போடா என்று சத்தமாக கத்தி விட்டாள்