Misc. Erotica காதல் செய்வீர்
#5
மறு நாள் காலையில் சீக்கிரமே எழுந்து ஊருக்கு செல்வதற்கு கிளம்பினோம். காலையில் 10 மணி வண்டிக்கு ஊருக்கு சென்றோம், அந்த பாதை முன்னொரு முறை எம்.ஜி.ஆர் வரும்போது ரோடு போட்டதாம்.அது ரோடுதான் என்பதற்கு ஆங்காங்கே தெரிந்த தார் பகுதிகளே சாட்சி. ஒரு மணி நேரத்தில் அங்கு சென்று சேர்ந்தோம்.

ஊருக்கு சென்றதும் அப்பத்தா (மாமாவுக்கு மாமியார்), சின்ன அத்தை(அத்தையின் தங்கை), சித்தப்பா(அத்தையின் தம்பி) எல்லோரும் அன்புடன் வரவேற்றார்கள். அவர்கள் எல்லோருக்கும் பிரியாவை ரொம்ப பிடிக்கும். நானே வருங்கால மாப்பிள்ளை என்பதால் என் மீது பாசம் அதிகம்.


ஊருக்கு போனதும் ஒரே கொண்டாட்டம். அங்கு எங்களுடைய பொழுது போக்கு ஆல மரத்தில் ஊஞ்சல் ஆடுவதும், ஆனால் என்னால் முன்பு போல் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. பிரியா சொன்னது மனதில் உறுத்தியது... அவளுக்கு வேற ஐடியா இருக்குமோ?

வேற வழியே இல்லை.... கோபியிடம் தான் கேட்க வேணும்...

நான் அவனிடம் கேட்க, அவன் அதுக்கு இப்ப நமக்கு என்ன வயசாகுது? பொறுடா அவள... வேற யாருக்கு கட்டி கொடுக்க போறோம்? என்று சமாதானப்படுத்தினான்.

அதன் பிறகு கொஞ்சம் நிம்மதி கிடைத்தது. நாங்கள் வீட்டில் உள்ளபோது பொழுது போவதற்காக சீட்டு விளையாடுவோம். நான் வெற்றி பெற்றால் மட்டுமே விளையாடுவேன். ஒரு சில தோல்விக்கெல்லாம் சீட்டை தூக்கி எறிந்து போங்கடா நீங்களும் உங்க சீட்டும் என கத்தி கோவித்து கொள்வேன்.

நான் வீட்டின் ஒரே பிள்ளை என்பதால் என் வீட்டில் கொடுத்த செல்லம் எல்லா இடத்திலும் எதிரொலித்தது. ஒரு சிறு சீண்டளுக்கு கோவித்து கொள்ளும் என்னை சமாதானபடுத்தும் வேலை பிரியாவுக்குதான்.

“இங்க பாரு உதட்ட கடிச்சு வச்சுருக்க...” என்று அவள் சொன்ன வார்த்தைகளை கவனிக்காது, நானெல்லாம் எங்க படிச்சு மேனேஜர் நடக்கற கதையா இது என நினைத்துகொண்டேன்.


நான் அமைதியாய் இருக்க வா போகலாம் என்று அவள் சொன்னவுடன் அவள் பின்னாடியே சென்றேன்.


அத்தை “என்ன மருமகனே... பிரியா சொன்னாதான் கோவம் குறையுமோ?” என்று என் மனம் அறியாது கிண்டல் செய்தால்.


அந்த வயதில் என்னை விட இளையவளான ப்ரியவிற்கு இருந்த அறிவு எனக்கு இல்லை. சில விசயங்களை ஆராய்ந்து பார்க்கும் பொறுமையும் இல்லை.


அந்த ஆண்டு பத்தாவது முடிந்ததும் நூல் பிடித்த மாதிரி அறுபது பெர்சென்ட் மார்க் வாங்கினேன். பிளஸ் ஒன் மதுரை தல்லாகுளத்தில் உள்ள ஏ.சி. ஸ்கூலில் சேர்ந்தேன். அதுவரை நானும் கோபியும் ஒரே பள்ளியில் படித்து வந்தோம். என்னைவிட ஒரு வயது இளையவன் என்பதால் அவன் அப்போது ஒன்பதாம் வகுப்பே படித்து கொண்டிருந்தான்.


புதிய பள்ளி புதிய நண்பர்கள் இவர்களால் என் வாழ்க்கை மாற போகிறது என்பதை நான் அறியவில்லை. என் காதலில் எவ்வளவு பெரிய சிக்கலை உருவாக்க போகிறேன் என்பதை நான் அப்போது தெரிந்திருக்கவில்லை.

நாம் எப்போதுமே ஒரு பொருளின் மதிப்பை இருக்கும்போது உணராமல் இழந்த பின்பே உணருவோம். இதில் நான் மட்டும் விதிவிலக்கா என்ன?
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: காதல் செய்வீர் - by johnypowas - 13-07-2019, 05:06 PM



Users browsing this thread: 1 Guest(s)