13-07-2019, 04:49 PM
ஹிந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தபால்துறை தேர்வு
புதுடில்லி: தபால்துறை தேர்வு வினாத்தாள்கள் இனி ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் நடத்தப்பட்டு வந்த தபால் துறையின் தேர்வுகளில், வினாத்தாள்கள் அந்தந்த மாநில மொழிகளிலும் வழங்கப்பட்டு வந்தன. பல ஆண்டுகளாக இருந்து வந்த இந்த நடைமுறையை தற்போது மத்திய அரசு மாற்றியுள்ளது.
இதுகுறித்து அனைத்து தபால் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தபால்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளின் வினாத்தாள்கள், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே கேட்கப்படும். மாநில மொழிகள் இடம்பெறாது. எனவே ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே இனி தேர்வு எழுத வேண்டும். இது முதல் தாளுக்கு மட்டுமே பொருந்தும்.
அதே சமயம் இரண்டாம் தாளில் கேட்கப்படும் கேள்விகள், ஹிந்தி, ஆங்கிலத்துடன் மாநில மொழிகளிலும் வழங்கப்படும். இரண்டாம் தாளை மாநில மொழிகளில் தேர்வர்கள் பதிலளிக்கலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.