03-01-2019, 09:49 AM
கேன்சர் எனக்குக் கிடைத்த பரிசு’ - மனிஷா கொய்ராலா உருக்கம்
தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்த கடுமையான நினைவுகள்குறித்து, தன் சுய சரிதைப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார், நடிகை மனிஷா கொய்ராலா.
தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்த கடுமையான நினைவுகள்குறித்து, தன் சுய சரிதைப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார், நடிகை மனிஷா கொய்ராலா.
மனிஷா கொய்ராலா, 1990-களில் தமிழ், இந்தித் திரையுலகைக் கலக்கியவர். வினு வினோத் சோப்ரா இயக்கத்தில் வெளியான `1942 லவ் ஸ்டோரி' இந்திப் படம் அடையாளம் கொடுத்தது. மணிரத்னத்தின் `பம்பாய்’, சங்கரின் `இந்தியன்’ படங்கள் மனிஷாவுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தன. நிறைய இந்திப் படங்களில் நடித்தார். பாலிவுட்டின் முன்னணி கதாநாயகியாக வலம்வந்த மனிஷா, சில வருடங்களுக்கு முன்பு கர்ப்பப்பை புற்று நோயால் பாதிக்கப்பட்டார். அதன் பின், முழு நம்பிக்கையுடன் புற்றுநோயுடன் போராடி மீண்டு வந்துள்ளார்.