03-01-2019, 09:40 AM
(This post was last modified: 03-01-2019, 09:41 AM by johnypowas.)
இந்த நிலையில், இப்படத்துடன் இணைந்து தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் வெளியாகவுள்ளது. வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் 4 ஆவது முறையாக இணைந்து தல அஜித் இப்படத்தில் நடித்துள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். யோகி பாபு, ரோபோ ஷங்கர், தம்பி ராமையா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இமான் இப்படத்திற்கு இசையமைள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கொடுத்தது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கடந்தாண்டு அஜித் நடிப்பில் எந்த படமும் வெளியாகாததால், இப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் வெயிட்டிங். ஆனால், விஸ்வாசமும், பேட்ட படமும் ஒரே நேரத்தில் திரைக்கு வருவதால், அதிக திரையரங்கம் கிடைப்பதிலும், பாக்ஸ் ஆபிஸ் வசூல் கொடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
[/url]
[size=undefined][size=undefined][url=https://twitter.com/YouTubeIndia/status/1079663942207565827]
[/size][/size]உதாரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் 21ம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு சீதக்காதி, கனா, மாரி 2, அடங்க மறு, சிலுக்குவார்பட்டி சிங்கம், கேஜிஎஃப் ஆகிய படங்கள் திரைக்கு வந்தது. இதில், எந்தப் படமும் அதிகளவில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் ஸ்ரீதர் கூறியதாவது:-
இரு படங்களும் ஒரே நாள் இடைவெளியில் வந்தால் இரு படங்களுமே பாக்ஸ் ஆபிஸ் வசூல் குவிக்கும். ஆனால், ஒரே நாளில் இரு படங்களும் வெளியாகிறது. இதனால், கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸ் வசூல் பாதிக்கும். மொத்தம் உள்ள 1,090 தியேட்டர்களில் சுமார் 600 தியேட்டர்கள் பேட்ட படத்துக்கும், மீதி விஸ்வாசம் படத்துக்கும் ஒதுக்கப்படலாம். முதல் மூன்று, நான்கு நாட்கள் ரசிகர்கள் மட்டுமே பார்ப்பார்கள். அதன் பிறகு தான் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்து பொதுமக்கள் பார்க்க வருவார்கள்.
ஒரு நேரத்தில் வசூல் கொடுக்கக் கூடிய மாஸ் ஹீரோக்களின் படங்கள் வெளியாவதை தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள் வரவேற்க மாட்டார்கள். ஜிஎஸ்டி வரிக் குறைப்பால் டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.