13-07-2019, 02:26 PM
"நீங்க நல்ல அப்பா மட்டுமில்ல நல்ல ப்ரண்ட் கூட தான்"அப்பா"ம்ம்....... அம்மா பத்தி என்ன நினைக்கிற"நான்அம்மாவும் எனக்கு நல்ல ப்ரண்ட் தான்.அப்பா"நான் என்ன பண்ணினாலும் உனக்கும்,உன் அம்மாவுக்கும் நல்லது தான் பண்ணுவேன்"தெரியும் அப்பா.ஆனா......"என்று இழுத்தேன்.என்ன ?என்றார்.உங்களுக்கும்,அம்மாக்கும் என்ன சண்டை"அப்பா இழுத்து பெரு மூச்சுவிட்டு "அதை பத்தி தான் உன்கிட்ட பேசனும்.இங்க வேண்டாம்.நாம் வெளிய போகும் போது சொல்கிறேன்.ஆமா.நீ என்ன படிக்க ஆசை படுற."நான் அக்ரி படிக்கலாம்னு ஆசை படுறேன்"ஏன் உன் அம்மா மாதிரி நீயும் தோட்டம் போட ஆசை படுகிறாயா?"ஆமாப்பா""சரி அது உன் விருப்பம்."நீ எப்போ ப்ரீனு சொல்லு நாம டூர் மாதிரி ஒரு இடத்திற்கு போகணும்""நான் நாளைக்கே போகலாம் அப்பா.எங்க போறோம்?"அது சஸ்பென்ஸ் .என்றார்.நாம வெள்ளிகிழமை நீ ரெடியா?இரு.ஒரு பத்து நாள் தங்குற மாதிரி வா"என்றார்.பின் பல விசயங்கள் பேசினோம் நான் தூங்க சென்றேன்.வெள்ளிகிழமைக்கு இன்னும் இருநாள் உள்ளது.எனக்கு எந்த இடத்திற்கு போறோம் அறிய ஆசை.நான் அம்மாவிடம் கேட்ட போது தெரியாது என்றார்.எனக்கு மிக ஆவலாக இருநாட்கள் அதே நினைவாக இருந்தது.ஒருவழியாக வெள்ளிகிழமை இரவு நானும்,அப்பாவும் கிளம்பினோம்.அம்மாவரவில்லை என்று பிடிவாதமாக இருந்தார்கள்.காரில் ஏறியவுடன் அப்பா உனக்கு தூக்கம் வந்தால் நீ தூங்கு என்றார்.நான் இல்லை என்று அவருடன் பேச்சு கொடுத்து கொண்டே வந்தேன்.பின் என்னை அறியாமல் தூங்கினேன்.நான் கண் விழித்ததும் காலை ஆகிவிட்டது நான் அப்பாவிடம்" இது எந்த இடம் அப்பா"இப்போ நாம் தென்காசி வந்து இருக்கோம் இன்னும்30நிமிடத்தில் நம் இடத்திற்கு சென்றுவிடலாம் என்றார்.கார் நெடுங்சாலையில் இருந்து ஒரு மண்சாலையில் திரும்பியது15நிமிட பயணத்தில் அந்த தோட்டத்தை வந்தடைந்தோம்.நான்"யார் தோட்டம் அப்பா இது?"அப்பா "நம்முடையதுதான்.போன வாரம் தான் வாங்கினேன்"எனக்கு ஆச்சரியம் இவ்வளவு தூரத்தில் எதற்கு அப்பா இங்கு தோட்டம் வாங்கினார் என்று.எனக்கு தோட்டத்தை பற்றி விளக்கி கொண்டு வந்தார்.மொத்தம்55ஏக்கர்,தென்னை,மா,எலுமிச்சை,மாதுளை,சப்போட்டா மரங்களும் ஆடு,மாடு,வாத்து,கோழி,மீன் என அனைத்தும் இருந்த்து.என்னை அங்கிருந்த பணியாளர்களிடம் அறிமுகபடுத்தினார்.மொத்தம் 10பேர்.இரு குடும்பத்தை சேர்ந்தவர்கள்.அவர்களுக்கு தோட்டத்தின் கடைசியில் வீடு கட்டி கொடுத்திருந்தார்.தோட்டத்தின் நடுவே ஒரு சின்ன வீடு அனைத்து வசதியுடன் இருந்த்து.அப்பா என்னிடம் நான் ஊருக்கு சென்று சாப்பிட ஏதாவது வாங்கிவருகிறேன்.நீ தோட்டத்தை சுற்றிபார்த்து விட்டு வா.என்றுகூறி சென்றார்.நான் தோட்டத்தை சுற்றிபார்த்து கொண்டிருந்தேன்.தோட்ட காவலாளி கந்தசாமி எனக்கு சுற்றிகாட்டினார்.