Adultery சாது மிரண்டால் வீடும் கொள்ளாது! - Completed
#68
பாகம் 30.
 
அறையில், ஜன்னலோரத்தில் நின்று அமைதியாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் மைதிலி! மெல்ல அவள் பின் சென்று நின்றேன்.
 
மைதிலி என்று அழைத்தவனை அவள் திரும்பி பார்த்தாள். அவள் முகத்தில் எந்த உணர்வும் இல்லை.
 
அவன் போயிட்டானா?
 
ம் என்று சொன்னவுடன், திரும்ப ஜன்னலில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
 
கோபமா மைதிலி! அவள் அமைதியாகவே இருந்தாள். உன்னை ஹர்ட் பண்ணியிருந்தா சாரி மைதிலி!
 
நான் சாரி சொல்வதற்குள் அவளது கைகள் என் வாயை மூடியிருந்தது! அவள் என் மார்பினில் சாய்ந்திருந்தாள். மெல்ல விசும்பிக் கொண்டிருந்தாள்!
 

ஏண்டா இப்பிடி பண்ண?

[b]எனக்கோ ஒன்றும் புரியவில்லை. அவள் கோபத்தில் பேசுவாள் என்று நினைத்தால், அவள் என்னிடமே என்னைப் பற்றி முறையிடுகிறாள்![/b]
 
மைதிலி!
 
அன்னிக்கு நீ கேட்டத்துக்கு, நான் இன்னும் ஓகே சொல்லலீல்ல? அதுக்குள்ள நீ ஏன் இப்பிடி பண்ண?
 
---------
 
நம்முடைய முதல் முத்தம், இப்பிடி அடுத்தவன் முன்னாடி, அவனைப் பழிவாங்கறதுக்காகத்தான் இருக்கனுமா? இது எனக்கு எவ்ளோ ஸ்பெஷல்னு உனக்கு தெரியுமா? ஏன் இப்பிடி பண்ண?
 
அவள் உணர்வுகள் புரிந்தது அவனுக்கு! சத்தியமா இதை நான் பழி வாங்குறதுக்குன்னு பார்க்கலை மைதிலி! அந்த டைம்ல என்னோட அன்பின் வெளிப்பாடு அவ்ளோதான். நீ நினைப்பது போல், உன் துரோகம் என்னையும், என் மைதிலியையும் சாய்த்து விடப்போவதில்லைன்னு அவனுக்கு காட்ட நினைத்தேன்! அவ்ளோதான். இது, எனக்கு மட்டும் ஸ்பெஷல் இல்லையா என்ன?
 
அவள் உணர்வுகள் கொஞ்சம் அடங்கியிருந்தது!
 
அதுக்காக, இப்படியா? அதுவும் அவன் முன்னாடி, நான் சொன்னா கேட்க மாட்டியான்னு கேள்வி வேற! முன்ன ஒரு தடவை, அப்பிடித்தான், என் மேல நம்பிக்கை இல்லையான்னு கேட்ட! இன்னிக்கு இப்பிடி! உன் மேல நம்பிக்கையில்லாமியா, என்னையே உன்கிட்ட கொடுத்துட்டு கம்முனு இருக்கேன்? ஏண்டா என்னைப் புரிஞ்சிக்க மாட்டேங்குற?
 
அவளை நினைத்து எனக்கு சிரிப்பு வந்தது! வாயைத் திறந்து சம்மதம் சொல்லவில்லை! ஆனால், உள்ளுக்குள் குடித்தனமே நடத்துகிறாள். அவளது அந்த அன்பு, மறைமுகமாக அவள் காதலை ஒத்துக் கொண்டது எல்லாம் எனக்கு நிம்மதியையும் சந்தோஷத்தையும் தந்தது. மெல்ல அவளைச் சீண்டினேன்!
 
ஹப்பா… நீ எனக்கு கொடுக்கிற மரியாதையை நினைச்சா எனக்கு புல்லரிக்குது மைதிலி.
 
நீ பண்ணக் காரியத்துக்கு… கோபித்து சிணுங்கியவள் கேட்டாள்! என்கிட்ட ப்ளான் பத்தி சொன்னப்ப, ஏன் இதைப் பத்தி சொல்லவேயில்லை?
 
எனக்கு சிரிப்புதான் வந்தது.  அவளை மெல்ல அணைத்தவன், அவள் காதில் கேட்டேன், இப்ப நான் பண்ணதுக்கு கோபமா? இல்ல, சொல்லாம பண்ணிட்டேன்னு கோபமா?
 
------

பதில் சொல்லு.
 
ம்ம்… ரெண்டுக்குந்தான்!
 
ஓ, அப்ப, உன்கிட்ட சொல்லியிருந்தா, நீ ஓகே சொல்லியிருந்திருப்ப? நாந்தான் அதைப் புரிஞ்சிக்காம இப்பிடி பண்ணிட்டேன்! அப்பிடித்தானே?
 
இப்பொழுது பதில் சொல்லாமல் அவள் தலையை நிமிர்த்தி அவனை முறைத்தாள்!
 
சிரித்தவன் சொன்னான். ஆக்சுவலி, இது என் ப்ளான்லியே இல்லை மைதிலி! அவன் பேச ஆரம்பிச்சதும் எனக்கு ரொம்பவே கோவம் வந்துருச்சு! பத்தாதுக்கு நீயும் வேற என்னை அடிக்கடி ப்ளாண் பண்ணியே கவுத்துடுறன்னு ஏற்கனவே திட்டியிருக்கியா, சரி சும்மா ஏன் திட்டு வாங்கனும்னு இப்பிடி பண்ணிட்டேன்!
 
இப்போது அவனைச் செல்லமாக அடிக்க ஆரம்பித்தாள். அது திட்டுனதா? அதுக்காக இப்பிடித்தான் பண்ணுவியா? ம்ம்?
 
ஏய், அடிக்காத வலிக்குது!
 
ம் அதுக்குதானே அடிக்கிறது! நல்லா வலிக்கட்டும்!
 
ஏன் பேச மாட்டே? எந்த ஹெல்ப்புக்கும் தாங்க்ஸ் சொல்றது கிடையாது. ட்ரீட் கேட்டாலும் கொடுக்குறது கிடையாது! நான் என் மனசுல இருக்குறதைச் சொல்லி மாசக் கணக்குல ஆனாலும், அதுக்கு, பதில் கிடையாது!
 
ஆனா, கண்ணுலியே தூண்டில் போடுவாளாம், ஆசையாப் பாப்பாளாம், ஏதாவது வேணும்னா, அதைச் செய்னு உத்தரவு மட்டும் போடுவாளாம்! அப்பிடியே தள்ளி நின்னு உசுப்பேத்துவாளாம்! ஆனா மனசுக்குள்ளியே குடித்தனம் நடத்துவாளாம்! நாங்களும் எவ்ளோ நாள்தான் பொறுத்துக்குறது?
 
அவள் பதில் பேசாமல், அவன் மார்புக்குள் புதைத்துக் கொண்டாள்!

[Image: silambattam_055.jpg]

முகத்தை பாவமாய் வைத்துக் கொண்டு ஏதோ யோசனையாய் இருந்தவன் கேட்டான், ஏன் மைதிலி, நாந்தான் அறியாப் பையன், தெரியாமப் பண்ணிட்டேன்! நீ என்னைத் திருத்தியிருக்கலாம்ல? பதிலுக்கு நீயும் ஏன் கொடுத்த? நானாச்சும் தெரியாம கொடுத்தேன், நீ தெரிஞ்சே கொடுத்தியே? நீ ஏன் மைதிலி அப்பிடி பண்ண?

 
அவன் கேள்வியைக் கேட்டு முடிக்கிறதற்குள், அவள் அவனை அடிக்க ஆரம்பித்திருந்தாள். அப்பக் கொடுத்ததை வாங்கிகிட்டீங்கள்ல, அப்ப இதையும் வாங்கிக்கோங்க! என்று மீண்டும் அடித்தாள்!
 
ஏய், இப்பியே இப்பிடி அடிக்கிற! இன்னும் போகப் போக எப்பிடியெல்லாம் அடிப்பியோ! அவன் சீண்டச் சீண்ட அவள் இன்னும் முகம் சிவந்து அடித்தாள்.
 
உங்களை…
 
செல்லமாய் அடித்துக் கொண்டிருந்தவளின் இரு கைகளையும் ஒரு கையால் இறுகப் பற்றியவன், இன்னமும் அருகே இழுத்து, அவள் முகமெங்கும் வேகமாக முத்தமிட ஆரம்பித்தான்.
 
அவனுடைய சீண்டல்களில் மலர்ந்திருந்தவள், அவனது முத்தங்களில் இன்னும் சிவந்து, முகத்தை அவனிடம் ஒப்புவித்து, கண்களை மூடியிருந்தாள்!
 
அவள் அவனை முத்தமிட்ட போது, மெதுவாய் ஆரம்பித்து பின் ஆவேசமாய் முத்தமிட ஆரம்பித்தாளென்றால், இவனோ, ஆவேசமாய் முத்தமிட பின் மெதுவாய் முகமெங்கும் முத்தமிட்டுக் கொண்டிருந்தான்!
 
நீண்ட நாட்களுக்குப் பின், மிகுந்த மகிழ்ச்சியுடன், எந்தக் கவலையுமின்றி, மலர்ந்த முகத்துடன், தன்னை அவனிடம் தந்துவிட்டு, கண் மூடி லயித்துக் கிடந்தவளின் காதில் மெதுவாய் சொன்னான்… உன்னை மாதிரி கஞ்சனில்லைடி நானு! முத்தம் கேட்டா அடிக்கிற ஆளில்லை, நீ என்னை அடிச்சாக் கூட, திருப்பி முத்தம் கொடுக்கிற ஆளு!
 
விழித்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்களில் காதல் பொங்கியது. அவளது விழிகளில், இன்னமும் குழப்பத்தின் சாயையும் இருந்தது. அவளை ஏதோ வாட்டுவது புரிந்த ராஜாவும், அவளை மார்பில் சாய்த்து, கன்னங்களை வருடியவாறே கேட்டான்!
 
என்னடி உன் பிரச்சினை? என்ன உன் மண்டைக்குள்ள குடையுது? மனசுக்குள்ள இவ்வளவையும் வெச்சுகிட்டு ஏன் தடுமாறிகிட்டு இருக்க?
 
கொஞ்சம் கில்ட்டியா இருக்குப்பா? அப்புறம், நமக்கும், அவங்களுக்கும் என்ன வித்தியாசம்? அவிங்க ஒண்ணு சேந்தாங்க, நாமளும் ஒண்ணு சேர்றோம்! இதுல இவிங்க என்ன யோக்கியம்னு வெளிய இருந்து பாக்கிறவங்க பேச மாட்டாங்களா?
 
அவள் எதைக் கண்டு பயப்படுகிறாள், எதனால் குழம்பிக் கொள்கிறாள் எனப் புரிந்தது!
 
இங்கப் பாரு, பெரிய வித்தியாசம் இருக்கு!
 
நாம யாரையும் ஏமாத்தலை! எந்தத் துரோகமும் பண்ணலை. எனக்கும், உனக்கும் ரெண்டு வருஷமா பழக்கம் இருக்கு! நம்ம ரெண்டு பேருக்குமே, ஒருத்தரை ஒருத்தர் புடிச்சிருக்குன்னு தெரியும். ஆனா, எந்தத் தப்பும் பண்ணலியே? ஆம்பளைக்கு, கொஞ்சம் அழகா இருந்தா, எந்த பொண்ணையும் புடிக்கும்! ஏன், பொண்ணுங்க கூட, இப்பல்லாம் வெளிப்படையா ஆண்களை ரசிக்கிறாங்க! எல்லாரும் எல்லார் கூடவுமா வாழ்ந்துடுறாங்க?
 
இதுக்குப் பேருதான் சுய ஒழுக்கம். ரெண்டு பேருக்கும் இன்னொருத்தரைப் புடிச்சிருந்தாலும், மாரல் சப்போர்ட்டா மட்டுந்தானே இருந்தோம். தப்பா ஒரு செயல் இல்லை ஒரு பார்வை பார்த்திருப்போமா? எல்லாத்துக்கும் மேல, இப்பியும், நமக்குள்ள இந்த காதலே வராமா இருந்திருந்தா, தள்ளி நின்னிருந்தாலும், நமக்கு ஒரு வகையில் மாரல் சப்போர்ட்டா இருந்திருப்போமே ஒழிய வேற தப்பு ஏதாவது பன்ணியிருந்திருப்போமா? நமக்கு புடிச்சிருக்கு, யாருக்கும் துரோகம் பண்ணலைங்கிறப்ப, எதுக்கு நாம மாத்தவங்களைப் பத்தி கவலைப் படனும்?
 
இதையும் அவிங்க பண்ணதையும் எப்டி கம்பேர் பண்ற? வெளிய இருக்குறவன், ஆயிரம் பேசுவான். நீ கஷ்டப் பட்டப்ப என்ன ஹெல்ப் பண்ணாங்க? நாளைக்கு நீ சந்தோஷமா இருக்கிறப்ப என்ன பண்ணப் போறாங்க? சும்மா கண்டதையும் போட்டு குழம்பிகிட்டு…
 
இப்போது அவள் முகம் தெளிந்திருந்தாலும், கேட்டாள், வெளிய இருக்கிறவிங்க என்னமோ சொல்லிக்கட்டும். ஆனா, நம்ம வீட்ல என்ன நினைப்பாங்க? அதான்…
 
ம்க்கும், ஒரே ஆளு, ஓவர் புத்திசாலியாவும், அடி முட்டாளாவும் இருக்கிறதை உன்கிட்டதாண்டி பாக்குறேன்.
 _____
 
முறைக்காத! நீ என்னை மாமான்னு கூப்பிடுறியோ இல்லியோ, உங்கப்பாவை, நான் மாமான்னு, கூப்பிட ஆரம்பிச்சு நாளாச்சு! உங்கப்பாவும், எங்கப்பாவும் சம்மந்தி மாதிரிதான் பேசிகிட்டு இருக்காங்க! இன்னும் நீ தான் இல்லாத மூளையைப் போட்டு உருட்டிகிட்டு இருக்க!
 
உனக்குத் தெரியுமா? சில சமயம், மனசு சொல்ற மாதிரி கேட்டுட்டு போயிட்டே இருக்கனும்! ரொம்ப யோசிக்கக் கூடாது! ந்னு ஒரு பெரிய மகான் சொல்லியிருக்காரு!
 
இப்போது மொத்தமாக தெளிந்திருந்த மைதிலி, புன் சிரிப்புடன், நிமிர்ந்து அவனைக் காதலுடன் பார்த்தாள். நான் சொன்னது எனக்கேவா, திருடா, இப்பிடியே சத்தமில்லாம ப்ளான் பண்ணி, கண்டதையும் பேசி, ஆளைக் கவுத்துடு!
 
ம்க்கும்… உன்னை கவுக்க ப்ளான் பண்றாங்க! போடி, யாருக்கும் தெரியாம கள்ள உறவு வெச்சுகிட்டவன் கூட ஒழுக்கத்தைப் பத்தி இவ்ளோ ஃபீல் பண்ணதில்லை! இவ என்னான்னா, ஒழுங்கா, சந்தோஷமா வாழலாம்னு வந்து சொல்றவன்கிட்ட, லொல்லு பண்ணிட்டிருக்கா! உன்னைக் கட்டிகிட்டு இன்னும் நான் என்னென்ன பாடுபடப்போறேனோ….
 
உங்களை… என்று செல்லமாய் அவனை அடித்தவள், காதலின் மிகுதியில் அவனை அணைத்துக் கொண்டு, அவன் தோளில் முகம் புதைத்தாள்!
 
ராஜாவும் அவளை இறுக்க அணைத்துக் கொண்டான்! அணைத்திருந்த ஒரு கை, மெல்ல அவள் தலையை வருடியது, பின் அவள் கன்னங்களையும் வருடியது. பின் அவன் விரல்கள் மெல்ல அவளது காது மடல்களை அடைந்த போது, அவள் அணைப்பு இறுகியது. இன்னும் ஆழமாக அவன் தோள் வளைவில் முகம் புதைத்தாள்!
 
மைதிலி…
 
ம்ம்..
 
ஆக இதுக்கும் தாங்க்சோ, ட்ரீட்டோ கிடையாது, அப்பிடித்தானே! அவள் முகம் புதைத்திருந்தாலும், அவள் உதடுகள் புன்னகையில் விரிவது அவனுக்குத் தெரிந்தது. அவள் இல்லை என்று தலையாட்டினாள்.
 
அவன் வாய் பேசிக் கொண்டிருக்கவில்லை. கையும் பேசிக் கொண்டிருந்தது. பேச்சு வாக்கில் அவனது கை, அவளது பின் கழுத்து, முதுகு, தோள்கள், கை என்று அழைந்து மெதுவாக அவளது இடுப்பில் ஊர்ந்துக் கொண்டிருந்தது!
 
அவளது அணைப்பும் கொஞ்சம் கொஞ்சமாக இறுகிக் கொண்டே வந்தது. அவளது மூச்சு கொஞ்சம் அதிகமாகியிருந்தது. மேலும் முன்னேறிய அவனது கைகளை, அவளது கைகள் தடுக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தது! இடுப்பிலிருந்து இன்னும் மலையேற முயன்ற அவனது விரல்களை டக்கென்று பிடித்த அவள்,
 
டேய் பொறுக்கி, என்னடா பண்ற?

[Image: newpg-radhagopalam115.jpg]

ம்ம்… அது, நீ ரொம்ப கஷ்டமா இருக்குன்னு ஃபீல் பண்ணியா, அதான் உனக்கு ஆறுதல் சொல்லிட்டு இருக்கேன்….

 
ஹா ஹா, இருவரும் சிரித்தாலும், அவனது கையை எடுத்து, அவளது கன்னத்தில் வத்தவள், கம்முனு இருக்கனும், பிச்சுபுடுவேன் என்று இன்னும் சலுகையாய் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்!
[+] 1 user Likes whiteburst's post
Like Reply


Messages In This Thread
RE: சாது மிரண்டால் வீடும் கொள்ளாது!!! - by whiteburst - 13-07-2019, 02:10 PM



Users browsing this thread: 7 Guest(s)