வயது ஒரு தடையல்ல! - Completed
#17
6.

 
அவள் இன்னும் என்னைத் திட்டிக் கொண்டு இருந்தாள். அவளைப் பார்க்க பார்க்க, என் மனதுள் குற்ற உணர்ச்சி பெருகியது. ஆரம்பத்திலிருந்து, அவள் என்னிடம் அன்பாகத்தான் இருக்கிறாள். நான் திருப்பி எந்த விதமான உணர்வையும் காட்டாவிட்டாலும், என் மேல் அவளுக்கிருந்த பாசம் அப்படியே இருந்திருக்கிறது. இத்தனைக்கும் கூடப் பிறந்தவள் கூட இல்லை!
 
இவளுக்கென்ன தலையெழுத்து? தாத்தாவே இவள் பங்கிற்கு கொஞ்சம் சொத்து எழுதி வைக்கிறேன் என்று சொன்னதற்கு வலுக்கட்டாயமாய் மறுத்தவள், இன்று தனக்கு யாரும் இல்லை என்று தற்கொலை வரை போயிருக்கிறாள். அப்படி, இவளிடம் கூட அன்பைக் காட்டாமல், என்ன ஒரு வாழ்க்கை வாழ்கிறேன் நான்???
 
எந்த சம்பந்தமும் இல்லாமல், என் மேல் உருகி உருகி அன்பினைக் கொட்டும், இவளிடம் கூடத் திருப்பி அன்பினைக் காமிக்காமல், என் அம்மாவையும், அப்பாவையும் குறை சொல்ல என்னத் தகுதி இருக்கிறது?
 
எதற்க்கு அப்படி வாழனும்? அப்படி வாழ்ந்து என்ன சாதித்து விடப்போகிறேன். நான், என்னை மாற்றிக் கொண்டேயாக வேண்டும் என்கிற எண்ணம், என் மனதில் வலுப் பெற்றது.
 
மெல்ல வாய் விட்டுச் சொன்னேன். சாரி!
 
திட்டிக் கொண்டிருந்தவள் நிமிர்ந்து பார்த்தாள். அதான் ஏற்கனவே சொல்லிட்டியே, இப்ப எதுக்கு சொல்ற?
 
அப்ப சொன்னது, நான் உன்கிட்ட பேசுன முறைக்கு. இப்ப சொல்றது, நீ எவ்ளோ என் மேல பாசமா நடந்துகிட்டாலும், உன்னை புரிஞ்சிக்காம இருந்ததுக்கு.
 
எனக்கு, அம்மா போனதுக்கப்புறம், யார் மேலயும் நம்பிக்கையே வரலை. ஒரு மாதிரி, மனசு கல்லா மாறிடுச்சி. அப்படியே, என்னைச் சுத்தி, நானே ஒரு வேலி போட்டுகிட்டேன்.
 
தாத்தாவோட இறப்புல நீ ஃபீல் பண்ணது, என்கிட்ட பேசுனது எல்லாமே, நீயும் பாசத்துக்காக எவ்ளோ ஏங்குற, எனக்காக எவ்ளோ யோசிக்கிற எல்லாமே தெரியும். ஆனா, அப்ப உனக்கு ஆறுதலா இருந்திருந்தா, நீ கல்யாணத்துக்கு ஓகே சொல்லியிருப்பியா, சொல்லியிருந்தாலும், அங்க போயும் என்னைப் பத்தி, நான் தனியா இருக்கேனேன்னு யோசிச்சிட்டு இருந்திருப்பன்னு எனக்கு தோணுச்சு, அதான், அப்பவும் சரி, கல்யாணத்துலியும் சரி, உன்னை விட்டு தள்ளியே நின்னேன். குறைந்த பட்சம், நீ உனக்கு கிடைச்சிருக்கிர புது குடும்பத்தோட சந்தோஷமா இருப்பேன்னு நினைச்சேன். ஆனா, அது உனக்கு இப்படி ஒரு சிக்கலை கொண்டு வரும்னு நினைக்கலை.
இப்படியே தள்ளி நின்னதாலத்தான் உன்கிட்டயோ, உன் ஃபிரண்டு லாவண்யாகிட்டயோ  கூட பெருசா உணர்ச்சியை காமிச்சுகிட்டதில்லை.ப்ச்…
 
பேசிக் கொண்டிருந்தவன், திடீரென்று உணர்ச்சி வசப்பட்டேன். இனி உனக்குன்னு யாரும் இல்லைன்னு சொல்லாத. யாரிருந்தாலும், இல்லாட்டியும் நான் இருப்பேன் உனக்கு!
 
அதான் சொல்றேன், சாரி! என்று தலை குனிந்தேன்
 
அவள் உணர்ச்சிவயப்பட்டிருந்தாள் என்பதை கலங்கிய கண்களே சொல்லியது. வேகமாக என்னை இழுத்து அவள் மார்போடு அணைத்துக் கொண்டாள். என் முடியை கோதிக் கொடுத்தாள்.
 
[Image: Asin-4.jpg]

இப்பொழுதும் என்னைத்தான் அவள் ஆறுதல் படுத்துகிறாள்!

 

அப்படியே கொஞ்ச நேரம் இருந்தோம். மனதுக்கு நெருக்கமான சில பெண்களிடம் இருந்து மட்டுமே வரும் ஒரு பிரத்யோக வாசனை, அவள் உடலில் இருந்து வந்தது. இது நாள் வரை இதனை நான் கவனித்திருக்க வில்லை அல்லது அறிந்திருக்கவில்லை. இது கண்டிப்பாக காமத்தின் வாசனை இல்லை. அன்பின் வாசனை. அதில் கொஞ்சம் தாய்மையின் வாசமும் இருந்தது.

 

காதலியின் உடலில் இருந்து வரும் வாசத்திற்கும், அன்னையின் உடலில் இருந்து வரும் வாசத்திற்கும் இடையிலிருக்கும் வித்தியாசத்தை உணர்ந்தவர்கள், இதை உணர்வார்கள்! நான் மெல்ல அவளை விட்டு பிரிந்தேன்.

 

அது மட்டுமில்லை, உன்னை இவ்ளோ கஷ்டப்படுத்துன, அந்த ரெண்டு பேரையும் நான் சும்மா விடப் போறதில்லை.

 

அப்பொழுதுதான் அவளுக்கு அவர்களைப் பற்றிய ஞாபகம் வந்தது. நான் இருக்கிறேன் என்ற தைரியம், அவளுக்கும் தெம்பினைத் தந்தது.

 

என்னடா பண்ணப் போற? நீ தனியா என்ன பண்ணுவ?

 

அவள் இன்னும் என்னை அதே சின்ன பையன் என்று நினைத்துக் கொண்டிருந்தாள் போலும்.

 

ஹா ஹா, நான் தனியாவாவா? நீ என்ன நினைச்சிட்டிருக்க என்னப் பத்தி? நான் சொசைட்டில எவ்ளோ பெரிய ஆள் தெரியுமா??? பிசினஸ்ல, என்னைப் பாத்து அவனவன் பயப்படுவான். உன் மாமானார்லாம் எனக்கு சுண்டைக்கா! அவனை அழிக்கறதுக்கு எனக்கு அரை மணி நேரம் போதும். ஆனா, அவனையெல்லாம் அவ்ளோ சுலபமா அடிக்கக் கூடாது. கொஞ்சம் கொஞ்சமா அடிக்கனும். அவன் உன் கால்ல விழுந்து கெஞ்சனும். அப்படி ஒரு அடியா இருக்கனும்.

 

அப்படி என்னடா பண்ணப் போற?

 

தெரியலை, இனிமேதான் யோசிக்கனும். அது என்னான்னு யோசிச்சிட்டு சொல்றேன்.

 

இப்ப நீ எதைப் பத்தியும் போட்டு குழப்பிக்காம நல்லா ரெஸ்ட் எடு! முடிஞ்சா, அவங்களை என்னா பண்றதுன்னு யோசி. ஓகே?

 

அடுத்த நாள் காலை!

 

சாப்பிடும் போது கேட்டாள், ஏதாவது யோசிச்சியா?

 

இன்னும் இல்லை. நேத்து நைட்டுதானே பேசுனோம். அதுக்குள்ள என்ன அவசரம்?

 

இல்ல, நான் ரெண்டு நாள்ல வரேன்னு சொல்லிட்டு வந்தேன். திரும்பி வரவா போறோம்னு நினைச்சு, ஆனா, இப்ப அவிங்க என்னை எதிர்பாப்பாங்க இல்ல? ஹரீஸ் இன்னிக்கு ஃபோன் பண்ணுவாரு! அவள் குரலில் கொஞ்சம் பயம் தென்பட்டது!

 

ஏய், நீ எவ்ளோ தைரியமான ஆளு? இதுக்கு ஏன் இப்புடி அப்செட் ஆகுற?

 

அவன் ரொம்ப வக்கிரம் புடிச்சவண்டா! அவன் வயசு என்ன, என் வயசு என்ன? என்ன உறவு? எப்புடி இப்புடில்லாம் பேச முடியுது?! அவன்கிட்ட என்னத்தை சண்டை போட முடியும்? தவிர, இதுக்கு என்ன பண்ணனுனும்னு தெரியாம, அங்க போகனும்னு நினைச்சாலே நடுங்குதுடா!

 

அவள் குரலே, அவன் எந்தளவு அவளை சித்ரவதை பண்ணியிருக்கான் என்று தெரிந்தது. அது என்னுள் இன்னும் கோபத்தை ஏற்படுத்தியது!

 

அவள் கையைப் பிடித்தேன். ஏதாவது காரணம் சொல்லி எப்புடியாவுது ஒரு வாரம் இருக்கப் பாரு! அதுக்குள்ள நான் வழி சொல்றேன். அவனை அடிக்கனும்னா, நிமிஷம் போதும், ஆனா, அவன் உனக்கு பண்ணதுக்கு, அவன் பொண்டாட்டி பண்ணதுக்கு ரெண்டு பேரும் அனுபவிக்கனும்! அப்படி ஒரு திட்டத்தோட வர்றேன்! ஓகே???

 

ம்ம்ம், ஓகே டா! இப்பதான் கொஞ்சம் ரிலீஃபா இருக்கு!

 

எல்லாம் சரி, இப்புடியே எத்தனை நாள் இருக்கப் போற? எங்க போச்சு உன் கான்ஃபிடண்ட்லாம், வேலைக்குப் போறப்ப எப்புடி இருப்ப?

 

பேசிக்கலாவே, நீ இண்டலிஜெண்ட் ஆச்சே? ஏன் அங்கப் போனதுக்கப்புறம், வேலைக்குப் போறதில்லை? ஹரீஸ் கூட உன்னை, அவர் கம்பெனிக்கே வரச் சொன்னாருன்னு சொன்ன? ஏன் இப்பல்லாம் போறதில்லை?

 

ஹரீஸுக்கும், நான் படிச்சிச்சு வீட்டுல இருக்குறது புடிக்கலைதான்! ஆனா, ஆஃபிஸ்லியும் அந்தாளு இருக்கான்ல? அவன் அங்கேயும் அசிங்கமா பேசுனான், அதான் போறதில்லை!

 

நான் கேட்குறேன்னு தப்பா நினைக்காத? ஹரீஸ் பத்தி நீ என்ன நினைக்குற? இவ்ளோ நடந்ததுக்கப்புறமும் நீ அவர் கூட… அதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியாமல் நிறுத்தினேன்.

 

அவள் மெதுவாகச் சொன்னாள்.

 

அவர் ரொம்ப நல்லவருடா! தாத்தா ஏன் அவரை கல்யாணம் பண்னனும்னு சொன்னாருன்னு, அவரோட கேரக்டரைப் பாத்தா புரியுது! எவ்ளோ காசு இருந்தும், கெட்ட பழக்கம் எதுவும் கிடையாது.

 

கண்மூடித்தனமான நம்பிக்கை, அதுவும் தகுதியில்லாதவிங்க மேல வெச்சிருக்காருங்கிறதைத் தாண்டி வேறெந்த பிரச்சினையும் இல்லை. அவிங்க சித்தப்பா பேச்சைக் கேட்டுத் திட்டுனா கூட, என்கிட்ட தனியா சாரி சொல்லுவாரு. சொன்னாலும், ‘நீ எப்பிடி இப்படியெல்லாம் நடந்துக்குற’ன்னு என்கிட்டயே வருத்தப்படுவாரு!

 

நான் அவரு கம்பெனிக்கு வரலைன்னு சொன்னப்ப கூட, இதுக்கு எதுக்கு இஞ்சினியரிங் படிச்ச, என்னைக் கல்யாணம் பண்ணிகிட்டதுனால, உன் திறமை அதிகமானா, இன்னும் வெளிய வந்தாதான் எனக்கு பெருமையே ஒழிய, இப்படி வீட்டோட இருக்கிறது எனக்கு அசிங்கம்னு ரொம்ப பேசுனாரு!

 

என்னை ரொம்ப விரும்புறாருடா. என்னைப் பத்தி தெரிஞ்சவுடனே, அவரு சொன்னது, உனக்கு நான் எல்லாவுமா இருப்பேன், இனிமே நீ ரொம்ப சந்தோஷமா இருக்கனும்னு சொன்னாரு. உனக்காக நான் ஃபீல் பண்ணப்ப கூட, உனக்கும் நாம் சொந்தமா இருப்போம்னு உண்மையாச் சொன்னாருடா. என்னைத் திட்டுனா கூட, பாசத்தோட அருமை புரிஞ்ச நானே எப்படி இப்படி நடக்கலாம்னுதான் வருத்தப்படுவாரு! அவர் ரொம்ப நல்லவர். அதுதான் அவரோட மிகப் பெரிய ப்ளஸ். ஆனா அவர் சித்தப்பாவுக்கும் அது ப்ளஸ்ஸா போயிடுச்சி!

 

பேசிக்காவே அவரு பாசத்துக்காக ஏங்குறவருடா! ஒரு விதத்துல அவரும் நம்மளை மாதிரிதாண்டா! நமக்கு பெத்தவிங்க இருந்தும் இல்லாத மாதிரி. அவருக்கோ, உண்மையாவுமே இல்ல. நமக்குனாச்சும் தாத்தா இருந்தாங்க, ஆனா அவருக்கு? இவிங்க சித்தப்பா, சித்தி முதல்ல அவிங்க அப்பா, அம்மாவோட பணத்துக்காக வந்தாங்க. அப்புறம் போலியா நடிச்சு, அப்படியே இருந்துட்டாங்க!

 
அவர் கதையை என்கிட்ட சொல்லியிருக்காரு. ஆரம்பத்துல அதுல எனக்கு பெரிய தப்பு தெரியலை. ஆனா, அவிங்க சித்தப்பா, சித்தி சுயரூபம் தெரிஞ்சதுக்கப்புறம், எனக்கு அது வேற அர்த்தங்களைக் கொடுக்குது. அவங்க சித்தப்பா, அவரை பார்ட்டிக்கு அழைச்சிட்டு போயிருக்காரு, மறைமுகமா எல்லா வித கெட்ட பழக்கங்களுக்கும் பழக்க நினைச்சிருக்கார். ஆனா, இவரு எதுலியும் மாட்டிக்கலை. சுயமா, நல்ல பழக்க வழக்கங்களோட வளந்தாரு. அதையே, அவரு எங்க சித்தப்பா, எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து வளத்தாரு, அவ்ளோ நம்பிக்கை என் மேலன்னு புரிஞ்சு வெஞ்சிருக்கார். மனுஷனுக்கு இவ்ளோ பாசிட்டிவான எண்ணம் இருக்கக்கூடாது.

[Image: wedding-dresses-kerala.jpg]

கல்யாணம் ஆகி இந்தக் காலத்துல, அவரை நான் ரொம்ப லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன்! இப்பியும், இந்த உண்மைல்லாம் தெரிஞ்சுதுன்னா, அவர் தாங்க மாட்டாருடா!

 

கெட்டவனா இருந்தா, செஞ்ச தப்புக்கு ஃபீல் பண்ணத் தேவையில்லை! ஆனா, நல்லவனாச்சே, நம்மளையே நம்பி வந்தவளுக்கு இந்த நிலை வரக் காரணமாயிட்டோமே, அவ சொன்னதை கேக்கலியேங்கிற குற்ற உணர்ச்சிலியே செத்துடுவாரு! எனக்கு அதுதான் பயமா இருக்கு! எனக்கு அவர் கூட சந்தோஷமா வாழனும்டா! அவ்ளோ நல்லவருடா! அவள் கண்கள் கலங்கியிருந்தது.

 
அவள் பேசப் பேச, எனக்கு, அவள் ஹரீஸ் மேல் வைத்திருந்த காதலைப் பார்த்து கொஞ்சம் பொறாமை கூட வந்தது. அதே சமயம், உறுதியும் பூண்டேன், அவள் வாழ்வில், மகிழ்ச்சியை கொண்டு வருவது என்று!


எனது கதைகள்


சாது மிரண்டால் வீடும் கொள்ளாது!!!

வயது ஒரு தடையல்ல!
[+] 1 user Likes whiteburst's post
Like Reply


Messages In This Thread
RE: வயது ஒரு தடையல்ல! - by whiteburst - 13-07-2019, 01:33 PM



Users browsing this thread: 15 Guest(s)