Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
ஆஸ்திரேலியாவை பந்தாடியது இங்கிலாந்து - எப்படிச் சாத்தியமானது?

[Image: _107841356_gettyimages-1155046809.jpg]படத்தின் காப்புரிமைPAUL ELLIS
உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் விளையாட இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன.
இன்று நடைபெற்ற இரண்டாவது அரை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை எளிதாக வென்றது இங்கிலாந்து.
1975லிருந்து உலகக்கோப்பை அரை இறுதிப் போட்டியில் தோல்வியே அடையாத அணி எனும் பெருமையோடு வளைய வந்த ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து தோற்கடித்துள்ளது.
1975-ல் நடந்த முதல் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவிடம் இங்கிலாந்து தோற்றது. அதற்கு பிறகு 44 ஆண்டுகளுக்கு பிறகு இவ்விரு அணிகளும் அரை இறுதியில் மோதின. இம்முறை ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து வெளியேற்றியது.
பேட்டிங்,பௌலிங், ஃபீல்டிங் என அனைத்துத் துறையிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தினர் இங்கிலாந்து வீரர்கள்.
2வது அரை இறுதியில் என்ன நடந்தது?
ரவுண்ட்ராபின் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் இரண்டாமிடம் பிடித்த ஆஸ்திரேலியாவும் மூன்றாமிடம் பிடித்த இங்கிலாந்தும் இப்போட்டியில் மோதின.
224 ரன்கள் எடுத்தால் கேன் வில்லியம்சன் அணியுடன் லார்ட்ஸ் மைதானத்தில் உலகக்கோப்பைக்காக மல்லுக்கட்டலாம் என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது.
அரை இறுதியில் நியூசிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகளும் பேட்டிங் பவர்பிளேவில் தடுமாறியிருந்தன.
அடுத்தடுத்த நாள்களில் மூன்று அணிகள் பவர்பிளேவில் சரிவை சந்தித்தாலும் இங்கிலாந்து முதல் பத்து ஓவர்களை திறம்பட எதிர்கொண்டது.
ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஸ்டார்க்கை அநாயாசமாக கையாண்டது இங்கிலாந்து.
[Image: _107839912_gettyimages-1161387863.jpg]படத்தின் காப்புரிமைSTU FORSTER-IDI
தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் - ஜானி பேர்ஸ்டோ இணை பதற்றமடையாமல் ஒவ்வொரு பந்தையும் எதிர்கொண்டது. முதல் பத்து ஓவர்களில் 50 ரன்கள் குவித்தது இந்த இணை. அதன் பின்னர் ரன் ரேட்டை உயர்த்தும் பணியில் ஈடுபட்டது.
இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியை போலவே இரண்டாவது பத்து ஓவர்களில் இங்கிலாந்து அதிரடி ஆட்டம் ஆடியது.
குறிப்பாக ஜேசன் ராய் மிகச்சிறப்பாக விளையாடினார். ஸ்மித் வீசிய ஒரு ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசினார். அந்த ஓவரில் மட்டும் 21 ரன்களை குவித்தது இங்கிலாந்து
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 13-07-2019, 10:14 AM



Users browsing this thread: 102 Guest(s)