Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
[color=var(--content-color)]அதற்காகவே சிறப்புச் சட்டத்தை இயற்றியுள்ளது. மோட்டார் வாகனச் சட்டத்தில் இதற்காக எந்தத் திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை. நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் அனைத்தும் இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில்தான் இயங்குகின்றன. ஒரு சாலையை அமைப்பதற்கு அல்லது விரிவாக்கம் செய்வதற்கான திட்ட மதிப்பீடு, அதற்கான முதலீடு, வட்டி, லாபம் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அதன் அடிப்படையில்தான் ஒவ்வொரு சுங்கச்சாவடிக்கும் எத்தனை ஆண்டுகள் சுங்கம் வசூலிக்கலாம் என்பதை அனுமதித்து ஒப்பந்தம் போடப்படுகிறது.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-07%2Fca24d147-cae2-42f1-8...2Ccompress]
சுங்கச்சாவடி
[/color]
[color=var(--content-color)]குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டணத்தை உயர்த்திக்கொள்ளவும், இந்த ஒப்பந்தங்கள் வழிவகை செய்துள்ளன. இதனால்தான் சுங்கச்சாவடிகளுக்கு எதிராகப் போடப்பட்ட எந்தப் பொதுநல மனுவும் நீதிமன்றங்களால் ஏற்கப்படுவதில்லை அல்லது ஏதாவது ஒரு காரணத்தால் தோல்வியைச் சந்திக்கின்றன.

[color=var(--content-color)]அடிப்படையில், 'ஏற்கெனவே இருக்கும் சாலைகளை விட்டுவிட்டு, புதிதாகச் சாலைகளை அமைத்து அவற்றைப் பயன்படுத்துவோருக்குச் சுங்கக்கட்டணம் வாங்கலாம்' என்பதுதான் முதலில் எடுக்கப்பட்ட முடிவாகும். மேலைநாடுகள் பலவற்றிலும் இதுபோன்றே இரண்டு விதமான சாலைப் போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-07%2Fbb54274a-7626-4247-b...2Ccompress]
சுங்கச்சாவடி
[/color]
[color=var(--content-color)]வேகமாகச் செல்ல வேண்டுமென்று நினைப்பவர்கள், சுங்கக்கட்டணம் செலுத்தி அந்தச் சாலையில் போய்க்கொள்ளலாம். மற்றவர்கள் வழக்கமான சாலையைப் பயன்படுத்தலாம். ஆனால், நம் நாட்டில் ஏற்கெனவே இருக்கிற சாலைகளை விரிவாக்கம் செய்து, சுங்கக்கட்டணம் செலுத்தாமல் போவதற்கு ‘வேறு வழியே இல்லை’ என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறது மத்திய அரசு.[/color]
[color=var(--content-color)]இருப்பினும் ஒரு சில நகரங்களில் புறவழிச் சாலைகள் மட்டுமே சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டிய சாலைகளாக நிர்வகிக்கப்படுகின்றன. அதைச் செலுத்த விரும்பாதவர்கள் நகருக்குள் செல்லும் சாலைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். உதாரணமாக, கோவை மாநகருக்கு வெளியே 27 கி.மீ. தூரத்துக்கு ‘எல் அண்ட் டி’ நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் புறவழிச்சாலை இருக்கிறது. அதில் சென்றால் சுங்கக்கட்டணம் செலுத்தவேண்டும். அதைச் செலுத்தாமல் நகருக்குள்ளும் போகலாம். ஆனால் போக்குவரத்து நெரிசல் காரணமாக நேரவிரயம், எரிபொருள் விரயம் ஏற்படும்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-07%2F398b43a9-da09-4c8f-9...2Ccompress]
சுங்கச்சாவடி
[/color]
[color=var(--content-color)]சுங்கச்சாவடி விவகாரத்தில் மத்திய அரசு இன்னும் தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்..!

[/color]
[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 13-07-2019, 10:10 AM



Users browsing this thread: 86 Guest(s)