பல்மொழி பலான பட விமர்சனங்கள் - Author: Vino2525
#42
The King 2005 (English)


அண்ணன் தங்கை இன்செஸ்ட் உறவின் விளைவால் ஏற்படும் க்ரைம் த்ரில்லர் கதை கொண்டது இந்த ஆங்கில மொழி திரைப்படம். இது செக்ஸ் திரைப்படம் அல்ல.

ராணுவத்தில் பணிபுரியும் இளம் ஹீரோ தன் சொந்த ஊருக்கு வருகிறான். சின்ன வயதில் இறந்து போன தன் அம்மா சொன்ன அட்ரஸ்க்கு வந்து தன் தந்தையை பார்க்கிறான். கிறிஸ்தவ மத போதகரான தந்தையோ இரண்டாவது திருமணம் செய்து கொண்டு ஒரு பொண்ணு, பையன், மனைவி என்று சந்தோஷமாக வாழ்வதால் அவருக்கு இடைஞ்சல் தராமல் தனியாக தங்கி கொள்கிறான்.

தன் தங்கை ஹீரோயினோடு நட்புடன் பழக ஆரம்பிக்க, பின் அது தகாத உறவாக மாறி போகிறது. வீட்டுக்கே வந்து ஹீரோயினோடு செக்ஸ் செய்துவிட்டு போவதை ஹீரோயின் தம்பி பார்த்துவிட்டு ஹீரோவை கண்டிக்க அவனை போட்டு தள்ளுகிறான் ஹீரோ. ஹீரோயினிடம் விபத்து என்று பொய் சொல்லி மன்னிப்பு கேட்க ஹீரோயினும் மன்னித்துவிட்டு யாரிடமும் சொல்லாமல் மறைத்து விடுகிறாள்.

மகனை இழந்து வாடும் தந்தை ஹீரோவை தன் மகனாக ஏற்று கொண்டு வீட்டுக்கு அழைத்து செல்கிறார். ஆரம்பத்தில் மகனாக ஏற்க மறுக்கும் சித்தி பின்பு மனம் திறந்து ஹீரோவை தன் மகனிடத்தில் பார்க்கிறாள். ஹீரோவிற்கு எல்லாமே கிடைக்கிறது. ராஜபோகமாக இருக்கிறான். எல்லாம் முடிந்த பிறகு தான் ஹீரோவின் திட்டங்கள் எல்லாம் ஹீரோயினுக்கு புரிய ஆரம்பிக்கிறது. சொத்தை அபகரிக்க ஹீரோ போட்ட திட்டங்கள் தான் எல்லாமே என்று புரிந்ததும் தன் தாயிடம் ஹீரோவை பற்றி போட்டு கொடுக்கிறாள். தன்னை காட்டி கொடுத்த ஹீரோயினை ஹீரோ என்ன செய்தான், அதிர்ச்சிகரமான முடிவு என்ன என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

தகாத உறவினால் உண்டாகும் தீமைகளை திகிலோடு சொல்லியிருக்கிறார்கள். நேர்த்தியான திரைக்கதை தொய்வு இல்லாமல் படத்தை கொண்டு செல்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்று மனம் பதைபதைக்க செய்கிறது. ஒரு சிறந்த க்ரைம் த்ரில்லர் கதையை வேகம் குறையாமல் எடுத்து சென்று முடித்து இருக்கிறார்கள்.

ஹீரோவாக வருபவர் நல்லவரா கெட்டவரா என்று க்ளைமேக்ஸ் முன்பு வரை குழப்பமாகவே எடுத்து சென்று இறுதியில் தான் நமக்கு புரிய வைக்கிறார் இயக்குநர். தன் தம்பியையே ஹீரோ கொன்று இருந்தாலும் அதற்கு ஹீரோ தரும் விளக்கத்தினை ஏற்று அவனை மன்னிக்கும் ஹீரோயின் அபலை பெண்ணாக இருக்கிறாள்.

தன் தங்கை மேல் கொண்ட காதலால் தான் தம்பியை ஹீரோ கொலை செய்தான் என்று படம் பார்ப்பவர்களை நம்ப செய்து கடைசி நேரத்தில் தான் ஹீரோவின் தந்திர செயல்களை ஹீரோயின் உணர்வது போல் நாமும் உணர்கிறோம். அதுவரை நல்லவன் போலவே ஒவ்வொரு செயலையும் செய்கிறான். தங்கை மேல் சட்டென்று காதல் கொள்கிறான்.

தங்கை சுத்த பாப்பாவாக இருக்கிறாள். அண்ணன் கூப்பிட்டதும் மறுபேச்சு பேசாமல் முதல் சந்திப்பிலேயே அவனோடு ஊர் சுத்த கிளம்பிவிடுகிறாள். அதன்பிறகு ஸ்கூலில் வந்து கூப்பிட்டு தனியாக கூட்டி சென்று கைகளை பிடிக்கும்போதும் ஒண்ணும் சொல்லாமல் இருக்கிறாள். பிறகு அண்ணனை பார்க்க கிளம்பும்போது லிப்ஸ்டிக் எல்லாம் போட்டு கொண்டு போகும் போதே அவள் மனதிலும் இன்செஸ்ட் ஆசை துளிர்விட்டுள்ளதை நமக்கு உணர்த்துகிறாள்.

செக்ஸ் காட்சிகள் இருந்தாலும் ஆபாசமான காட்சிகள் எதுவுமில்லை. நேர்த்தியான செக்ஸ் காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் இருக்கின்றன. ஒளிப்பதிவு மனதுக்கு இதமாக இருந்தது. கண்ணுக்கு உறுத்தாத லைட்டிங், சிறப்பான ஒளிப்பதிவு. க்ரைம் த்ரில்லர் படங்களுக்கே உரித்தான சுருக் எடிட்டிங் படத்துற்கு ப்ளஸ்.

மொத்தத்தில் ஒரு நல்ல தரமான படம். இன்செஸ்ட் பாதிப்பால் உண்டாகும் க்ரைம் த்ரில்லர் கதையை நிறுத்தி நிதானமாக பொறுமையாக பார்த்து ரசித்தால் ஒரு உலக தரமான படத்தை பார்த்த திருப்தி கிடைக்கும். மதிப்பெண் – 32/100.
Reply


Messages In This Thread
RE: பல்மொழி பலான பட விமர்சனங்கள் - Author: Vino2525 - by kadhalan kadhali - 13-07-2019, 09:33 AM



Users browsing this thread: 5 Guest(s)