இன்பத்தின் உச்சகட்டம் - Author: wocdakumar - Incomplete
#12
தடம் எண் 2.3
அரசு மருத்துவமனை, இராயப்பேபட்டை..

ஜீப் அந்த வளாகத்திற்குள் நுழையும் போதே ஆங்காங்கே என பல வெள்ளை வேட்டிகளும் கதர் சட்டைகளுமாக கும்பல்கள் காட்சி அளித்தன.

“போச்சுடா இதுல அரசியல் வாதிங்க வேறையா விளங்கிடும்” வால்டர் சொல்லிக்கொண்டே ஜிப்பிலிருந்து இறங்க மற்றொருபுரம் சூர்யா சிகரெட்டை அணைத்தபடி இறங்கினான்.

போலீஸ் வாகனத்தை கண்டவுன் ஆங்காங்ககே தனித்தனியாக பேசிக்கொண்டிருந்த கதர் சட்டைகள் தங்களது வேட்டிகளை மடித்துக்கட்டியபடி ஒன்றுகூடி இவர்களை நோக்கி வந்தன.

“வாங்க போலிஸ்…. எல்லாம் முடிஞ்சப்பறம் நிதானமா வந்து சவ அடக்கம் பன்ன வந்தீங்களா?”, ஒரு கதர்வேட்டி மீசையை முறுக்கியபடி கேட்க.

“இவனுங்களுக்கு இதே தான் மாமு வேலை… சொல்ல முடியாது ஆள செட் பன்னி இவங்களே கூட போட்ருப்பாங்க மாமு தலைவரு சொன்னதுக்காகதான் சைலன்டா இருக்கோம். கொன்னது மட்டும் யாருன்னு தெரியட்டும் மவனே நெஞ்சுல இல்ல …. கு…. ல இருக்குற மஞ்சா சோத்தையும் தனியா எடுத்துறோம்”

இன்னோருவன் முழு போதையில் இருந்தான் என்பது அவனது ஆட்டத்தையும், கால்கள் இரண்டும் ஒரு இடத்தில் நிற்காமல் பேசியதில் இருந்தே சூர்யாவிற்கு புரிந்தது.

“சார் நெஞ்சில ஓகே அங்கயுமா மஞ்சா சோறு இருக்கும்…..”, சந்தேகம் கேட்க வால்ட்ரை முறைத்த சூர்யா அவர்களது பேச்சை காதில் விழாததது போல் காட்டிக்கொண்டு உள்ளே பிணவறையை நோக்கி நடக்க வால்டரும் மூக்கில் கர்சீப்பை கட்டியபடி அவனை பின்தொடரந்தான்.

“யார் சார் செத்தது பைல் படிச்சுட்டீங்களா”

“பிரபல இராயப்பேட்டை ரவுடி பாபு”, சூர்யாவின் பதிலுக்கு சற்று கண்களை அகல விரித்தான் வால்டர்.

“அப்புறம் கமிஷ்னரும் நம்ம டிபார்ட்மென்டல, நம்ம ஸ்டேஜ்லயிருந்து சர்வீஸ் பன்னவர், தேவையில்லாம இந்த கேஸ நம்மிக்கிட்ட தர்ர அளவுக்கு அவர் முட்டாள் இல்லன்னு புரிஞ்சிக்க வால்டர்”.

வால்டர் புரியாமல் சூர்யாவின் முகத்தை பார்க்கும் போதே இருவரும் பிணவரையின் வாசலில் இருந்தனர்.

“வணக்கம் சார்”, காவலாளி, பிணத்தை தூக்குபவன், என பல பட்டங்களை சுமந்துக்கொண்டிருந்த அவன் வாயில் அடிக்கும் மட்டமமான சரக்கு வாடையோடு வணக்கத்தை வைக்க அதை ஆமோதித்தபடி இருவரும் உள்ளே நுழைந்தனர்.

“எங்க இருக்க பாடி” சூர்யாவின் கேள்விக்கு அவன் மேடையின் மீது கிடத்தப்பட்டு வெள்ளைதுணியால் முகத்தை மட்டும் விட்டுவிட்டு மற்ற பாகங்களை முழுமையாக கட்டப்பட்டிருந்த அந்த உடலை காட்டினான். இருவரும் சற்று நேரம் அந்த முகத்தையும் அதில் டாக்டர்கள் போடப்பட்டிருந்த தையல்களையும் பார்த்துவிட்டு வெளியே வந்தனர்.

லோக்கல் எஸ்.ஐ இவர்களுக்காக காத்திருந்தார்.

சூர்யாவிற்கு அவர் வைத்த சல்யூட்டை ஆமோதித்தவன்.

“பாடிய எந்த இடத்துல பாத்தீங்க”

“ரோட்டோரத்துல ஒரு மரத்துக்கு பின்னாடி புதர்ல இருந்துச்சு சார், முதல்ல முகம் அடையாளம் தெரியல அப்புறம் தான் தண்ணிய அடிச்சு முகத்துல இருக்குற இரத்தத்தை அகற்றினதும் அடையாளம் தெரிஞ்சது”.

“செத்தவனோட வீட்டு ஆளுங்களுக்கு சொல்லியாச்சா”

“அவனுக்குன்னு குடும்பம் குட்டில்லாம் கிடையாது சார், பேர் போன ரவடி, தினம் ஒருத்தின்னு கூத்தடிப்பான், கொலை, கொள்ளை, கடத்தல், ஆள்மாறட்டம்ன்னு அத்தனை கேசும் அவன் மேல இருக்கு பல நாள் தலைமறைவிலேயே இருப்பான் இப்ப சமீபத்துலதான் மினிஸ்டர் சப்போர்ட்ல கவுன்சிலர் ஆனான், இது கூட அரசியல் ரீதியான கொலையோன்னு டவுட் இருக்கு”

அவருடைய வார்த்தைகளை சூர்யாவின் மைன்டில் பதிவாகிக்கொண்டிருந்த அதே நேரம் வால்டரின் டேப்பிலும் பதிவாகிகொண்டிருந்தது.

“ஐ.சி, பாப்போம் கண்டுபிடிச்சா தெரிஞ்சுரும் அரசியலா ரவுடி கோஷ்டி மோதலான்னு, ஆமா யாரு இந்த கதர் கோஷ்டிங்க”

“மினிஸ்டர் ஆளுங்க சார் இப்போ இத அரசியலாக்க பாக்கராங்க”

“ஓஹோ, பாடிய யார்கிட்ட ஒப்படைக்க போறீங்க?”

“செத்தவன் கிட்ட அரசியல் பணம் நிறை இருக்கு அதனால திடீர்‘ன்னு நான்தான் தம்பி, நான்தான் அவன் கூத்தியான்னுட்டு ரெண்டு மூனு கோஷ்டி கும்பலோட வந்திருக்கு எங்களுக்கும் குழப்பம் தான்”, சொல்லிவிட்டு அவர் பெருமூச்சு விட வால்டர் உள்ளுக்குள் சிரிப்பதை சூர்யாவின் மூளை உணர்ந்தது.

“ஓகே டாக்டர் பிஎம் ரிப்போட்ஸ் வந்தாச்சா?”

“வந்தாச்சு சார் அத கொடுக்கதான் காத்திட்டுருக்கிறேன்”, என்றபடி ஒரு கவரோடு ரிப்போர்டை நீட்டினார் அந்த எஸ்ஐ.
Reply


Messages In This Thread
RE: இன்பத்தின் உச்சகட்டம் - Author: wocdakumar - Incomplete - by kadhalan kadhali - 13-07-2019, 09:13 AM



Users browsing this thread: 2 Guest(s)