இன்பத்தின் உச்சகட்டம் - Author: wocdakumar - Incomplete
#10
“சார் மேனேஜர் இருக்காரு உங்களை உள்ளே வரச்சொன்னாரு உள்ளே போனதும் வலது பக்கம் ஒரு மாடி படி இருக்கும் மேல போனால் முன்னாலே ரூம் இருக்கும் சார்” அவன் சொல்லாமலேயே சூர்யாவிற்கு அந்த அறை தெரிந்தது ஏனெனில் அந்த காவலாளி உள்ளே நுழைந்ததும் அந்த படிக்கடில் பாதி ஏறியபின் அவனை வெளியில் இருந்தே பார்க்க முடிந்தது அவன் அந்த அறைக்குள் சென்றதை பார்த்துவிட்டுதான் சூர்யா சிகரெட்டை வெளியே எடுத்தான்.

சிகரெட்டை மறுபடியும் பாக்கெட்டில் போட்டு விட்டு இருவரும் உள்ளே சென்றனர்.

முகத்தில் ஆயிரம் கேள்விகளோடு இவர்களை கைக்கூப்பியபடி வரவேற்ற மேனேஜரை பதிலுக்கு தலையாட்டியபடி உள்ளே நுழைந்த சூர்யா அவருக்கு எதிரே அமர்ந்தபடி அந்த அறையை பார்வையால் அளந்தான். 

அவனுக்கு பினனே டேப்பை ஆன் செய்தபடி உள்ளே வந்த வால்டர் அவனுக்கு அருகே அமர்ந்தான்.

“ஐ ஆம் சூர்யா சிறப்பு குற்றப்புலனாய்வுத்துறை ஆய்வாளர்”, சூர்யாவின் பதவி பெயரை புரியாமல் அந்த மேனேஜர் குழப்பத்தோடு பார்க்க.

“ஸ்பெசல் க்ரைம் ப்ரான்ச் இன்பெக்டர் அன்ட் ஆம் எஸ்.ஐ வால்டர்” என வால்டர் புரிய வைத்தான். மனதிற்குள் தமிழ் வாழ்க என்றான்.

“நான் ராமானுஜம் இந்த கம்பெனி மேனஜர் உங்களுக்கு சுரேஸ் பற்றி என்ன விசயம் தெரியனும்”, அவர் நேரடியாக விசயத்திற்கு வந்ததை உணர்ந்த சூர்யா அவரது முகத்தை பார்த்தான்.

கபடம், சூது பொய் ஏதும் அவரது கண்களில் தெரியவில்லை.

“சுரேஸ் இங்க எத்தனை வருடமாக வேலை பார்த்தார்”

“இப்பதான் ஒரு வருசம் ஆகுது”

“என்ன வேலை”

“சுரேஸ் துணி டிசைன்ஸ் எல்லாம் ககம்யூட்டர்ல டிசைன் பன்னி தருவான் ரொம்ப திறமையானவன்”

“ஓஹோ, கடைசியா சுரேஸ் நீங்க எப்ப பார்த்தீங்க”

“போன சனிக்கிழமை காலைல பார்த்தேன்” சூர்யாவும் வால்டரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

“என்னது சனிக்கிழமையா எத்தன மணிக்குன்னு சொல்ல முடியுமா”, சூர்யா கேட்கும் முன் ஆர்வத்தோடு வால்டர் கேள்வியை கேட்டான்.

“விடியற்காலைல ஒரு மூனு மணி இருக்கும்”

“அந்த நேரத்துக்கு எதுக்கு பார்த்தீங்கன்னு சொல்ல முடியுமா”

“;ம்ம்ம் வெள்ளிக்கிழமை சாயந்திரம் ஏதோ பிக்னிக் போரதாகவும் அன்னிக்கு மதியம் மேல லீவ் வேணும்னு கேட்டு வாங்கிட்டு போனான், பட் அதுக்கப்பறம் ஒரு முக்கியமான புது டிசைன்ஸ் வேணும்னு பாரின் கம்பெனி கேட்டிருந்தாங்க அதுக்காக வந்தே ஆகனும்ன்னு நான் போன்ல கேட்டேன் சரின்னுட்டு அன்னிக்கு சாயந்திரம் போக வேண்டியது சனிக்கிழமை காலைல போறேன்னு சொல்லிட்டு மறுநாள் காலைல அந்த டிசைன்ஸ் என்கிட்ட கொடுக்க வந்திருந்தான் அதான் நான் கடைசியா பார்த்தது”.

“அந்த நேரத்துல சுரேஸ் நடவடிக்கை ஏதாவது வித்தியாசமா, முகத்துல ஏதாவது வித்தியாசம் உங்களுக்கு தெரிஞ்சதா”

“அப்படி எதும் தெரியல சார் நார்மலா எப்படிவும் போலதான் வந்தான் கொடுத்தான் கிளம்பினான்”

“ஐசி சுரேஸ் கூட க்ளோசா பழகிட்டு இருந்தவங்க யாரெல்லாம்னு உங்களுக்கு தெரியமா?”

“ஆபிஸ்ல எல்லாருமே அவனுக்கு க்ளோஸ்தான் சார் எல்லார்கிட்டயும் நல்லா பழகுற ஆள் அவன்”

“ரொம்ப நெருக்கம்னு யாராவது”

“அப்படி எதும் வித்தியாசம் எனக்கு தோனுனது இல்லிங்க”
“சுரேஸ் ஒரு கார் வச்சிருந்ததா கேள்விபட்டோம் அதோட நெம்பர உங்களுக்கு தெரியுமா?”.

“சுரேஸ் கார் வச்சிருந்தானா, எனக்கே இப்ப நீங்க சொல்லிதான் இந்தா விசயம் தெரியும் சார்”

அவரது கண்களே அவர் கூறுவது அனைத்தும் உண்மை என உறுத்தியது.
நன்றி கூறிவிட்டு இருவரும் வெளியேறினர்.

“என்ன சார் இது சுரேஸ் கார் வச்சிருந்தான்னான்னு நம்மலயே கேட்கிறார்”

“யா சுரேஸ் காரை அதிகமாக யூஸ் பன்னுரதில்லன்னு எனக்கு தோனுது”
வெளியே வரும்போது வாசலில் இருந்த காவலாளியை விசாரித்ததில் எப்பவும் சுரேஸ் ஒரு ஸ்கூட்டரில் தான் வருவான் என்றும், அந்த ஸ்கூட்டர் என்னவாகி இருக்கும் என்ற குழப்பத்தோடு இருவரும் கிளம்பினர்.
Reply


Messages In This Thread
RE: இன்பத்தின் உச்சகட்டம் - Author: wocdakumar - Incomplete - by kadhalan kadhali - 13-07-2019, 09:12 AM



Users browsing this thread: 4 Guest(s)