இன்பத்தின் உச்சகட்டம் - Author: wocdakumar - Incomplete
#9
தடம் என் 2.2
சூர்யா அந்த சிகரேட்டை முழுமையாக ஊதி முடித்திருந்தான்.

சற்று தொலைவில் அவனை நோக்கி வால்டர் வந்துக்கொண்டிருந்தான்.

“சார் அந்த பெட்ரோல் பங்க்ல விசாரிச்சுட்டேன் சுரேஸ் எப்பவும் பில் போட சொல்லி கேட்க மாட்டாராம், சோ பில் ஏதும் பெட்ரோல் டீசலுக்கு சுரேஸ்க்கு இது வரை போட்டதில்லைன்னு சொல்லிட்டாங்க”, உற்சாகம் சற்று குறைந்தபடி வால்டர் சொல்ல…

“இட்ஸ் ஓகே கார் நம்பர் தெரிஞ்சா அதை கண்டுபிடிக்க முடியும் ஆனா பக்கத்து வீட்டு காரருக்கே நம்பர் தெரியல என்ன பன்னலாம் ம்ம்ம் க்ளு கிடைச்சது போல கிடைச்சு இன்னொரு கேள்வியை கூடுதலா உருவாக்கிவிட்டதே”. வால்டர் ஏதும் பேசாமல் சூர்யாவின் முகத்தையே பார்த்தான்.

“சார் சுரேஸ் அன்ட் மிஸஸ் சுரேஸ் பேமிலிகிட்ட விசாரிப்போமா?”

“பாடிய எடுத்துட்டு போக அவங்க வந்தப்பவே விசாரிச்சுட்டேன் வால்டர், சுரேஸ் அன்ட் ஜெயந்தி ரெண்டு பேரும் லவ் பன்னி வீட்ட விட்டு ஓடிவந்து இங்க கல்யாணம் பன்னவங்க அன்ட் பேமிலி அதுக்கப்பறம் அவங்கள ஏத்துக்கல, இப்போ அவங்க செத்தப்பறம்தான் அவங்க திரும்ப அவங்கள பார்த்ததா சொல்லிட்டாங்க சோ அவங்கள விசாரிச்சாலும் புரியோஜனம் இல்ல”

வால்டர் பைக்கை ஸ்டார்ட் செய்ய பின்னால் யோசனையுடன் சூர்யா அமர்ந்துக்கொண்டான். பைக் சாலையினை தொட்டதும் சாலையில் சீறிகொண்டு பாய்ந்தது.

காவல்துறை ஆணையாளர் அலுவலகம். மப்டியிலேயே சூர்யாவும், வால்டரும் கமிஷ்னரின் அறைக்குள் நுழைந்தனர். விரைப்பாக அவர்கள் வைத்த சல்யூட்களை ஏற்று தலையாட்டிய கமிஸ்னர் அவர்களை உட்கார சொன்னதும் எதிரில் அமர்ந்தனர்.

“சொல்லுங்க சூர்யா அந்த பெசன்ட் நகர் கேஸ் என்னாச்சு?”

“காணாம போன சுரேஷோட கார் பற்றி மட்டும் தான் தெரிய வந்திருக்கு சார், அந்த கார் எங்க போச்சு என்ன ஆச்சுன்னு ஒரு க்ளுவும் கிடைக்கல, விசாரணை போயிட்ருக்கு...”

“ஐ.சி. எந்த கேஸையும் நீ ரெண்டு நாளைக்கு மேல வச்சிட்டு இருக்க மாட்டன்னுதான் உன்கிட்ட இத பார்க்க சொன்னேன்”.

“எஸ் சார் பட் இது மற்ற கேஸ் மாதிரி இல்லாம நிறைய குழப்பங்கள் அப்புறம் புரியாத தடயங்கள் அதிகமில்லாத கேஸ்”

“தடயம் என்னன்ன கிடைச்சது?”

“தடயம்ன்னு எதும் கிடைக்கல சார் கார் காணோம்ங்கரத தவிர”

“ஓகே ஐ நோ யூ வெரி இன்டலிஜென்ட் பெர்சன், நீ இத சால்வ் பன்னுவன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு, பட் அதுக்குள்ள இன்னொரு இஷ்யூ வேற யாராலும் இத பாக்க முடியாது சோ கூடுதலா இந்த கேஸையும் நீ எடுக்கனும் இட்ஸ் மை பர்சனல் ஆப்ளிகேசன்”. தனது விழிகளை முழுமையாக விழித்து வால்டர் கமிஷ்னரை பார்க்க, சூர்யா தனது எதிரில் நீட்டப்பட்ட அந்த பைலை வாங்கினான்.

அருகில் வால்டர் ஓரக்கண்ணால் தன்னை முறைப்பதை அறிந்தும் அறியாதவன் போல் சூர்யா எழுந்து நிற்க… வால்டரும் எழுந்தான். இருவரும் சல்யூட்களை வைத்து விட்டு வெளியேறினர்.

“என்ன சார் இது ஏற்கனவே ஒரு மர்டர் கேஸ் குழப்பத்துல இருக்கு இப்ப இன்னொரு கேஸா அப்பப்பா டிபார்ட்மென்ட்ல வேற யாருமே மூளையோட இல்லையா என்ன…?” வால்டர் வெளியே வந்ததும் புலம்ப ஆரம்பித்தான்.

“காம் டவுன் வால்டர் இது ஒன்னும் ப்ராஜெக்ட் கிடையாது என்னால முடியாது அடுத்தவனை பார்க்க சொல்லுங்கன்னு சொல்ல, இட்ஸ் அவர் ட்யூட்டி அன்ட் நம்மள நம்புறாங்கன்னா நம்ம மேல முழு நம்பிக்கையும் வச்சுருக்காங்க போலிஸ்காரன் எப்பவும் எதுக்கும் தயாரா இருக்கனும் மேன்”.

“ம்ம்ம்ம் இதோட ஆயிரம் முறை இதை சொல்லிட்டீங்க ஓகே யாருக்காக இல்லனாலும் உங்களுக்கு என்னோட உதவி எப்பவும் இருக்கும் சார்” சொல்லிவிட்டு தனது புலம்பலை வால்டர் நிறுத்தினான். இருவரும் தற்போது யூனிபார்மில் ஜொலித்தார்கள். ஜீப் அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் முன்னால் நின்றது. மேலே கொட்டை எழுத்துக்களில்ஜே.ஆர் டிரேடிங் கம்பெனி என்று எழுதப்பட்டிருந்தது.

இருவருடைய உடைகளை பார்த்ததுமே வாசலில் இருந்த காவலாளி வேகமாக வந்தான்.

“சார் யாரை பார்க்கனும்”

“உங்க எம்.டி இல்ல சீனியர் அதிகாரிய பார்க்கனும்”

“என்ன விசயமான்னு……” அவன் சற்று பயத்துடன் கேட்டான்.

“மிஸ்டர் சுரேஸ் அதாவது சமீபத்துல கொலை செய்யப்பட்ட சுரேஸ் இங்கதான ஒர்க் பன்னாரு…?”

“ஆஆ ஆமாம் சார் ரொம்ப நல்ல மனுசன் சார் அவர போய்.. அந்ததாம்மாவும் ரொம்ப நல்லவங்க நான் உள்ள போய் கேட்டுட்டு வந்துரேன் அப்படி உட்காருங்க சார்”. சொல்லிவிட்டு அந்த காவலாளி வேகமாக கம்பெனியின் முன்கேட்டை திறந்து உள்ளே சென்றான்.

வால்டர் தனது ஆராய்ச்சி கண்களை சுற்றி அந்த கட்டிடத்தை நோக்கினான்.

விசாரனையில் சுரேஸ் அந்த கம்பெனியில் வெலை பார்த்தவன் என்பதும், அந்த கம்பெனி வெளி நாடுகளுக்கு பட்டு முதல் அனைத்து வைக துணிகளையும் ஏற்றுமதி செய்யும் நிறவனம் என்பதும் தெரிய வந்தது.

வாசலில் ஏற்கனவே உள்ளே ஓடிய காவலாளயை தவிர மேலும் மூவர் காவலுக்கு இருந்தனர். தனியார் நிறுவன செக்யூரிட்டிகள் என்பது அவர்களது உடைகளை பார்த்ததும் தெரிந்தது.

சூர்யா சிகரெட்டை உதட்டில் பொருத்த தயாரான நேரத்தில் உள்ளேயிருந்து அந்த செக்யூரிட்டி வெளியே வந்தான்.
Reply


Messages In This Thread
RE: இன்பத்தின் உச்சகட்டம் - Author: wocdakumar - Incomplete - by kadhalan kadhali - 13-07-2019, 09:11 AM



Users browsing this thread: 1 Guest(s)