இன்பத்தின் உச்சகட்டம் - Author: wocdakumar - Incomplete
#7
“சோ இது ப்ரீ ப்ளான்டு மர்டர் ரைட் சார்”

“மே பி இருக்கலாம், ஆர் எமோஷனல்ஸ் பாசிபில் இருக்கு”

“யாரு மேலயாவது டவுட் வந்திருக்கா சார் உங்க பாயிண்ட் ஆஃப் வியூல?”

“இல்ல வால்டர் டவுட் உண்டாகர அளவுக்கு நாம இன்னும் யாரையும் நெருங்கல எனக்கென்னவோ இந்த கேஸ் சீக்கிரம் முடியும்னு தோனல”

சிகரட்டை அணைத்தபடி மறுபடியும் யோசனையில் ஆழ்ந்த சூர்யாவின் முகத்தை பார்த்தபடி வால்டர் நின்றிருக்க, சூர்யாவின் மனதில் பல குழப்பங்கள் ஓடிக்கொண்டிப்பது அவனது முகத்தில் நன்கு தெரிந்தது.

மீண்டும் மாயப்பிள்ளையார் கோவில் தெரு பெசன்ட் நகர். மாலை நேரம்

சூர்யாவும், வால்டரும் பைக்கில் வந்திருந்தனர். யூனிபார்ம் இல்லாமல் மப்டியில்.

தெருவில் ஒரு இரட்டை கொலை நடந்த நிகழ்வினால் அந்த தெருவே சற்று கப்சிப் என்றிருந்தது.

பைக்கை ஸ்டான்ட் போட்டுவிட்டு இருவரும் சத்யத்தின் வீட்டு காலிங்பெல்லை அடித்தனர்.

“வாங்க சார்” என்றபடி சத்யம் உள்ளே அழைத்தார் அவர்களை.

“தொந்தரவுக்கு மன்னிக்கனும் மிஸ்டர் சத்யம்”

“பரவால்ல சார் சொல்லுங்க”

“நீங்க கடைசியா எப்போ அவங்க ரெண்டு பேரையும் ஐ மீன் சுரேஸ் அன்ட் ஜெயந்திய மீண்டும் பார்த்தீங்கன்னு சொல்ல முடியுமா?”

சூர்யா கேள்வியை ஆரம்பிக்கும் போதே வால்டர் அவர்களது டேப்பை எடுத்து ரெக்கார்டை ஆன் செய்தான். 


“ம்ம்ம் ப்ரைடே ஆப்டர்னூன்னு நெனைக்குறேன் சுரேஸ் கார் பக்கத்துல வீட்டு வாசல் முன்ன நின்னுட்டு இருந்தான், நான் கூட என்ன சுரேஸ் பிக்னிக்கான்னு விசாரிச்சேன், ஆமாம் டு டேய்ஸ் ன்னுட்டு சிரிச்சான் நான் என்ஜாய்ன்னு சொல்லிட்டு கௌம்பிட்டேன் அதான் கடைசியா நான் பார்த்தது அப்புறம் ஜெயந்திய அப்ப நான் பாக்கல”

“ம்ம்ம் சுரேஸ்கிட்ட சொந்தமா கார் இருக்கா?” சற்று ஆச்சர்யத்தோடு சூர்யா கேட்க

“எஸ் சுரேஸ் ஹோன்டா ப்ரையோ சொந்தமான வச்சிருந்தான்”.

வால்டரும், சூர்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்து கண்களாலேயே பேசிக்கொண்டனர்.

சூர்யாவிற்கு ஒரு க்ளு கிடைத்த சந்தோசம் முகத்தில் தெரிந்தது.

“இப்ப அந்த கார் எங்க இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா? ஏன்னா நாங்க சுரேஸ் வீட்டை சுத்தி அலசிட்டோம் எங்களுக்கு எந்த காரும் கிடைக்கல..!”

“மிராக்கள் எப்பவும் அந்த கார் சுரேஸ் வீட்டு சைட் வராண்டாவுல நிக்கும் சார். நானும் மறந்துட்டேன் அந்த கார நான் வெள்ளிக்கிழமைக்கு அப்புறம் சுரேஸ் வீட்டு முன்னால பாக்கல அதனாலதான் அவங்க வெளியூர் போயிருப்பாங்கன்னு நெனைச்சேன்”


“அந்த கார் நெம்பர், கலர் உங்களுக்கு தெரியுமா?”

“கலர் ரெட் சுரேஸ்க்கு ரொம்ப பிடிக்கும்னு சொல்லுவான், நெம்பர் சாரி நியாபகம் இல்ல”

கைக்கு கிடைத்த வடை வாய்க்கு கிடைக்காமல் போன உணர்ச்சியை சூர்யாவின் முகத்தில் உணரமுடிந்தது.
Reply


Messages In This Thread
RE: இன்பத்தின் உச்சகட்டம் - Author: wocdakumar - Incomplete - by kadhalan kadhali - 13-07-2019, 09:09 AM



Users browsing this thread: 3 Guest(s)