Misc. Erotica காதல் நோய்!!! - Author: Walter White - Incomplete
#5
அத்தியாயம் 5:

இடம்:
(கோயம்புத்தூரில் உள்ள கிராமம்(அத்தப்பகவுண்டன் புதூர்)

(சரவணன் பேசுவது போல)

மழை வருவதற்குள் எப்படியோ வீடு வந்து சேர்ந்துவிட்டேன், என் முகம் முழுக்க சந்தோஷத்தால் நிரம்பி இருந்திருந்து, ஒரு வயசு பய்யன் காதலில் விழுந்தால் எப்படி இருப்பானோ அப்படி இருந்தது எனக்கு. எனக்கு ஏற்பட்டிருந்த மாற்றத்தை என் குடும்பத்தினர் எல்லோரும் அறிந்திருந்தினர், ஆனால் கேட்பதற்கு யாருக்கும் தைரியம் இல்லை.


மத்தியானம் சாப்பிடதே எனக்கு வயிறு நிரம்பி இருந்தது, அது மட்டும் இல்லாது அவனிடம் பார்த்து பேசியதிலேயே திருப்தியாக இருந்தது. எனக்கு பசிக்கவில்லை என்று சொல்லிவிட்டு சீக்கிரமாகவே படுக்கைக்கு வந்துவிட்டேன்.


மல்லாக்க படுத்து விட்டத்தை பார்த்தபடி ப்ரியேஷை பத்தி யோசித்துக் கொண்டிருந்தேன், அவ்வளவு பெரிய கோடீஸ்வரன் ஆயினும் என்னுடன் அவன் பழகிய விதம் மிகுந்த ஆச்சரியம் அளித்தது. அப்படியே சந்தோஷத்திலேயே உறங்கிவிட்டேன்.


காலையில் ஒரு 8 மணிக்கு தான் எழுந்தேன், வழக்கம் போல bathroom க்கு போக, என்னங் மாப்ள இன்னிக்கு வேலை இல்லிங்களா? என்று பக்கத்து வீட்டு கார கருப்பசாமி கேக்க, இல்ல மாம்சு, இன்னிக்கு leave போட்டுட்டேன் என்றேன்.


செரி மாப்ள சாயங்காலம் பாக்றேன் என்று சொல்லி கிளம்பினான்.
அவனை பார்க்க சிரிப்பாக இருந்தது, எனக்கு நினைவு தெருஞ்ச நாளில் இருந்து காலங்காத்தால இந்த கேள்வியை என்னிடம் கேட்டுக்கொண்டிருக்கிறான், எதை மறந்தாலும் இவன் இதை மறப்பதில்லை.

வேலையை முடுச்சிட்டு 8:30 மணிக்கு ப்ரியேஷை பார்க்க புறப்பட ஆயத்தம் ஆனேன். அம்மா இன்னிக்கு என்ன காலைல என்று கேட்க, இட்லி தான்பா சரவணா, என்று சொன்னார். அஹ் இன்னிக்கும் இட்லியா என்று வெறுப்பாக இருந்தது.

சரிம்மா எடுத்து வெய் நான் சாப்படறேன் என்று சொன்னேன். மல்லிகா தண்ணீர் எடுத்துக் கொண்டிருந்தாள். அதற்குள் ஒரு phone வந்தது,


பார்த்தால் ப்ரியேஷிடம் இருந்து, ஹலோ சொல்லு ப்ரியேஷ் என்று சொல்ல, என்னையா கெளம்பிட்டியா, என்று கேட்க, இதோ சாப்பிட போறேன், இன்னும் கால் மணிநேரத்தில் அங்க வந்திருவேன் என்றேன்,


யோவ் யோவ்... சாப்பிடாத இங்க வந்திரு ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம் என்று சொன்னான்.
அப்பா எப்படியோ இட்லியில் இருந்து விடுதலை என்று நினைத்து, செரி இரு வந்துட்டேன் என்று சொல்லி வைத்தேன்.


அம்மா, இட்லி வேணாமா, நான் வெளில சாப்பிட்டுகிறேன் என்று சொல்லிவிட்டு என் அப்பனின் பழைய கிளாசிக் bulletஐ எடுத்து கிளம்பினேன். 5ஏ நிமிடத்தில் ஹோட்டலை சென்றடைந்தேன்,


இடம்:
கோயம்புத்தூர்
Le Meridian Hotel

வண்டியை park செய்துவிட்டு நேராக ரூம்க்கு போனேன். Room திறந்தே இருந்தது, உள்ளே போனால் dress மாத்திட்டு இருந்தான் ப்ரியேஷ். வாயா தம்பி வந்துட்டியா என்றான். ரெண்டே நிமிஷம் வெயிட் என்றான்.


நான் பெட்டில் உட்கார்ந்து கொண்டேன். அப்படியே அங்கு உள்ள பொருட்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தேன்.அவன் சூப்பராக dress பண்ணி இருந்தான், வாயா சப்படலாம் என்று சொல்லி tavernக்கு கூட்டி போனான்.

அங்கே போய் கூச்சமே படாமல் விதவிதமாக Chow Quey Teaw, Empress Platter, Red Snapper Flambe என்று கேட்டு வாங்கி சாப்பிட்டேன். அவனும் ஹ்ம்ம் சாப்பிடு சாப்பிடு என்றான். என் வாழ்நாளிலேயே இது போல dish சாப்பிட்டதே இல்லை, சாப்பிடறது என்ன, கேள்வி பட்டதே இல்லை. நல்லா சாப்பிட்டு முடித்தேன்.

மீண்டும் ரூமுக்கு போனோம், கொஞ்சம் நேரம் பேசிட்டு இருந்தோம், ஒரு கட்டத்தில் பேசுவனவற்றை எல்லாம் பேசிவிட்டதால் ஒரு அமைதி நிலவ, வாப்பா எங்கயாச்சும் வெளிய ஊர் சுத்திட்டு வரலாம், என்று நான் சொல்ல, அவனும் super ஐடியா, இரு எனக்கு தெருஞ்ச ஒரு driver இருக்காரு, அவரை கூப்படறேன் என்றான்.

ச்ச ச்ச அதெல்லாம் வேணாம், நாம மட்டும் போலாம், வா நான் bikeலதான் வந்திருக்கேன் என்றேன். சூப்பர் யா, bike ஓட்டி எத்தனை நாள் ஆச்சு தெரியுமா என்று துள்ளி குதித்தான். செரி எங்க போலாம் என்றான், bike தான எதாச்சு ஓரளவு long trip போலாம் என்றான்.


செரி உனக்கு தான தெரியும் எந்த இடம்னு சொல்லு என்றான். அப்போ topslip தான் best என்றேன். அதென்னயா பேரு என்று அவன் கேக்க, famous mountainயா சூப்பரா இருக்கும், 60kms தான், 1:30மன்னேறத்துல போயிடலாம் என்றேன். சூப்பர்யா வா, ஒடனே கிளம்பலாம் என்று அவன் சொல்ல, ரூமை பூட்டி விட்டு வெளியே வந்தோம்,


அவன் கிளாசிக் புல்லடை பார்த்ததும் புடித்துவிட்டது, வண்டிய நானே ஓட்டுறேன் என்று சிறு பிள்ளை போல அடம் பிடித்தான், எனக்கு அவனை பார்க்க சிரிப்பாக இருந்தது, செரிபா நீயே ஓட்டு என்று சொல்லி பின் சீட்டில் உட்கார்ந்து கொண்டேன். எங்கள் ரெண்டு பேரு bodyக்கு வண்டி perfectஆக இருந்தது.


மணி 10:30இருக்கும், வண்டியை ரொம்ப வேகமாக ஓட்டினான், போகின்ற வழியில் இரண்டு helmet வாங்கி கொண்டோம். ரொம்ப ஜாலியாக இருந்தது, அப்டியே பாட்டு பாடிக் கொண்டும், சிரித்து கொண்டும், போய் கொண்டிருந்தோம், பொள்ளாச்சி வந்த உடனேயே, alert ஆனேன், ஏனென்றால் அதற்க்கு மேல், நல்ல கிடைகள் இல்லை.

நீ beer குடிப்பியா என்று கேட்டதற்கு ச்ச ச்ச எனக்கு அந்த பழக்கமே கிடையாது என்றான், நான் சிரித்துக்கொண்டேன், நீ வேணா வாங்கிக்கயா என்றான், coolingஆக ஒரு carton 6pack beerஐ வாங்கி கொண்டேன்.கொஞ்ச தூரத்திலேயே பொள்ளாச்சியிலேயே famous ஆன ஆமிர் பிரியாணி கடையில் நிறுத்தி, 4 பொட்டலங்களை parcel செய்து கொண்டோம்.


Topslip நோக்கி வண்டி பறக்க ஆரம்பித்தது, அப்படியே வெயில் வானிலை சட்டென்று மாறியது, உயர்ந்த மரங்கள் சூரியனேயே மறைத்தது, hill ரோட்டில் போக ஆரம்பித்தோம், topslipஐ செரியாக 1:40 மணிநேரத்தில் வந்தடைந்தோம்.



இடம்:
Topslip(பொள்ளாச்சி)
(கடல் மட்டத்திலிருந்து 800அடிக்கு மேலே)



செமஜாலியாக இருந்தது, நல்ல குளிர், கூட்டமும் குறைவாக இருந்தது, முதலில் அங்க இருக்கும் இடம்களுக்கு ஒரு visit அடித்தோம், என் தோளில் ஒரு நண்பனை போல கை போட்டுக் கொண்டான். எனக்கு அது ரொம்ப பெருமையாக இருந்தது.

1:00மணி பக்கம் ஆக, சாப்பிட்ரலாம்பா என்று சொன்னேன், செரியா வா என்றான். அங்கே இருக்கும் இடம் எல்லாமே காற்றோட்டமாகவும், குழுமையாகவும் இருந்தது, ஒரு 200 அடி தொலைவில் ஒரு சிறு அருவி இருந்தது, அங்கே அதில் தண்ணீர் வரவில்லை, லேசாக தண்ணீர் சொட்டிக்கொண்டிருந்தது, மத்த இடத்தை விட இந்த இடம் நன்றாக இருந்தது, ஆதலால் இங்கேயே உட்கார்ந்து சாப்பிடலாம் என்று முடிவெடுத்தோம், அங்கே ஒரு நல்ல பாறையாக பார்த்து settle ஆனோம்,


6பேக் உள்ள cartonஐ பார்த்து, ஏன்யா நீ ஒருத்தனே இவ்வளவையும் குடுச்சிருவியா என்று கேட்டான். ஹாஹா என்று நான் சிரித்தபடியே, உனக்கும் சேத்தி தான்பா வாங்குனேன் என்றேன். அட போயா ஆளவிடு, எனக்கு பழக்கம் இல்ல என்றான். செரி அவனை கட்டாயப்படுத்த வேண்டாமென்று நானே குடிக்க ஆயத்தமானேன், என்னயா சாப்பிட்டு குடிக்க மாட்டியா என்று கேட்டான், இல்லப்பா அடுச்சுட்டு தான் சாப்பிடுவேன் இல்லனா அவளோ தான் வாந்தி வந்திரும் என்றேன்.

அதுமட்டுமில்லாம அடுச்சுட்டு சாப்டா, அப்டியே gradualஆ மப்பு ஏறும், அது சூப்பரா இருக்கும் என்றேன். நான் ஒரு tinஐ open பண்ணி அடிச்சு முடுச்சேன், அவன் நான் குடிப்பதை பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு அசனுக்கும் ஆசை வந்தது போல அவனும் ஓரு tin open பண்ணி குடிக்க ஆரம்பித்தான்.


என்னப்பா வேணாம்னு சொன்ன, என்றேன், இதென்ன beer தான அப்புறம் என்ன, அதில்லாம நான் ஸ்கூல் படிக்கும் போதே குடுச்சிருக்கேன் என்றான். ஒரே மூச்சாக மூணு tinஐ காலி செய்தான். 4ஆவது tin ஓபன் செய்யும் போது என்னை பார்த்தான், உனக்கு வேண்டுமா என்பது போல, நான் பரவால்ல நீயே குடி என்று சொல்ல, அதையும் முடித்தான், நானும் கடைசி tinஐ குடித்து முடித்தேன்.


செரி சாப்பிடலாமா என்று சொல்ல, சீக்கிரம் யா, வயிறுலாம் எறியது என்றான், பிரியாணி சாப்பிட ஆரம்பித்தோம், நல்ல பசி என்பதால் ரெண்டு பாக்கட்டையும் சாப்பிட்டோம் எனக்கு lightஆக மப்பு இருந்தது, அவன் இரண்டு பாக்கட்டையும் சாப்பிட்டு முடித்து கொஞ்சம் உளற ஆரம்பித்தான். அப்டியே கை கழுவி விட்டு அந்த பாறையிலேயே ஒரு சாய்த்து படுத்துக் கொண்டான். நான் உட்கார்ந்து இருந்தேன்.


அப்படியே உளறல் பேச்சில் பேச ஆரம்பித்தான், முதலில் அவன் அப்பாவை பத்தி பேச ஆரம்பித்தான், அப்டியே ஒரு குடிகாரன் எப்படி உளருவானோ அது போல இருந்தது அவன் பேச்சு, அவன் அப்பாவை எவ்ளோ miss செய்கிறான் என்பதை சொல்லி தீர்த்தான். எனக்கே வருத்தமாக இருந்தது அதை கேட்டு.


அதேபோல அவன் தாயை எவ்வளவு வெறுக்கிறேன் என்பதையும் சொன்னான். என் அப்பாவை இழந்து நான் தவிக்கயில் எனக்கு ஆறுதல் கூட சொல்லவில்லை என்று சொன்னது எனக்கு கஷ்டமாக இருந்தது. அவன் மாமனார், மனைவியை பற்றி பேச ஆரம்பித்தான், தன் அம்மாமேல் எவ்வளவு வெறுப்பு உருக்குமோ அதுபோல முக்கால் அளவு அவன் மனைவி மீது இருப்பதாக சொன்னான்.


என் பொண்டாட்டி ரொம்ப ரொம்ப அழகா இருப்பா, அதுனால தான் அவளுக்கு திமிரே, என்னைய அவ பின்னாடி அலைய விடனும்னு அவளுக்கு ஆசை என்று புலம்பி தீர்தான். ஆனா நான் வேணும்னே அவள கண்டுக்க மாட்டேன், அவளுக்கே அவ்ளோ இருந்துச்சுன்னா நமக்கு எவ்ளோ இருக்கணும் என்றான். அவன் வருத்தப்படுவதர்க்கெல்லாம் நான் ஆறுதல் கூறிக் கொண்டு இருந்தேன்.


கடைசியாக என்னை பற்றி பேச ஆரம்பித்தான், எனக்கு என் அப்பாவை எவ்வளவு புடிக்குமோ அந்த அளவு உன்னை பிடிக்கும் என்று சொன்னான். நீ அப்டியே என்ன மாதிரியிருக்க நாள நான் சொல்லல, நீ ரொம்ப நல்லவன் என்று சொன்னான். நீ தான் எனக்கு எல்லாமே, என் அப்பா போனப்பரம் நான் அனாதைன்னு நெனச்சு தினம் தினம் உள்ளுக்குள்ள அழுதுட்டு இருந்தேன், உன்ன பாதப்பறோம், உன்கிட்ட பழகுன அப்புறம், நான் அனாதை இல்ல எனக்கு நீ இருக்க அப்டின்னு சொல்லு அழுக ஆரம்பித்து விட்டான்.

எனக்கு இத்தனை நேரம் அவன் சொல்வது கேட்டு கொஞ்சம் வருத்தமாக தான் இருந்தது, ஆனால் இப்பொழுது அவன் அழுவதை கண்டதும் என்னை அறியாமல் என் கண்களிலும் கண்ணீர், நானும் அழுக ஆரம்பித்துவிட்டேன். இங்கே வா என்று என்னை கூப்பிட அவன் பக்கம் போனேன், என்னை அப்டியே இருக கட்டி பிடித்துக்கொண்டான், I love youடா என்று திரும்ப திரும்ப சொல்லி, என் கன்னத்தில் முத்தமிட்டான்.

எனக்கு அழுகையோடு சேர்ந்து ஆனந்தத்தில் சிரிப்பும் வந்தது, அவனை முதுகில் தட்டி குடுத்த படி இருந்தேன்.
கொஞ்சம் ஆசுவாசம் அடைந்ததும், இங்க பாரு சரவணா, நான் ஒன்னு சொல்றேன் கேக்றியா என்றான், ஹ்ம்ம் சொல்லு பா என்றேன். நீ இந்த ஊரு பிடிக்கலன்னு சொன்னேளே என்றான், ஆமாம் என்றேன், இங்க இருக்கிற யாரையும் உனக்கு பிடிக்கலைல? என்றான் ஆமாம் என்றேன்.

அப்போ ஒன்னு பண்ணு, கொஞ்ச நாள் என்னோட வாழ்க்கையை நீ வாழு என்றான். எனக்கு பயங்கர shockஆக இருந்தது, அட போப்பா உளராத என்றேன். நான் உண்மையா தான்யா சொல்றேன். இப்படி பிடிக்காத வாழ்க்கையை வாழ்ந்து ஏன்யா கஷ்டப்படுற, உனக்கு பிடிச்ச என்னோட சிட்டி வாழ்க்கையை நீயாச்சும் வாழ்ந்து சந்தோஷப்பட்டு என்றான்.


நான் அமைதியாக இருந்தேன், செரி மப்பில் ஏதோ உளருகிறான் நாம் பிறகு பேசிக்கொள்ளலாம் என்று முடிவெடுத்து, செரி பா கோயம்புத்தூர் போயி பேசிக்கலாம் வா கிளம்பலாம் என்று சொல்லி அவனை வண்டியில் ஏற்றினேன், என்னை இறுக்கமாய் கட்டி பிடித்துக் கொண்டான்,நான் வண்டியை ஓட்ட ஆரம்பித்தேன்!!...
Reply


Messages In This Thread
காதல் நோய்!!! - Author: Walter White - Incomplete - by kadhalan kadhali - 12-07-2019, 09:29 PM
RE: காதல் நோய்!!! - Author: Walter White - Incomplete - by kadhalan kadhali - 12-07-2019, 09:31 PM



Users browsing this thread: