வயது ஒரு தடையல்ல! - Completed
#14
5.
அவளது அன்றைய பேச்சு, எனக்கு மட்டுமல்ல, என் தாத்தாவிற்கும் அவள் மேல் ஒரு சின்ன அபிப்ராயத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னும் நாங்கள் பேசிக் கொள்வதில்லை. ஆனால், தாத்தா, அவளுடனும் பாசம் காட்ட ஆரம்பித்தார். நாங்கள் கவனித்த வரை, அவளும் பாசத்துக்காக ஏங்குவதும், அவளது பெற்றோர்களின் மேல் வெறுப்பாய் இருப்பதும், சுயமாக படிப்பு, இன்ன பிற விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதும், மிக முக்கியமாக, முடிந்தவரை அந்த வீட்டின் பணத்தையும், வசதிகளையும் அனுபவிக்காமல் இருப்பதும் புரிந்தது.
 
இவை யாவும், அவள் மேலுள்ள என் நல்ல அபிப்ராயத்தை அதிகப்படுத்தியது என்றால், தாத்தாவிற்கு அவள் மேல் மிகுந்த பாசத்தை ஏற்படுத்தியது. ஒரு வகையில், தாத்தாவும் பாசத்திற்கு ஏங்குபவரே. மனைவியும் சரியில்லை, பெற்ற பெண்ணும் சரியில்லாமல் தற்கொலை செய்து கொண்டாள். நானோ, உணர்ச்சிகளைக் காட்டுவதில்லை. இந்த நிலையில், இவள் காட்டிய அன்பு, என் தாத்தாவிற்க்கும் மிகுந்த தேவையாய் இருந்தது.
 
அவள் எவ்வளவு பாசம் தாத்தாவிடம் காட்டினாலும், தாத்தாவிடம் இருந்து கூட, எந்த பணத்தையும், நகையையும், வசதியையும் பெற மறுத்து விட்டாள். வற்புறுத்திய தாத்தாவையும், இதை வாங்கினால், எனக்கும், என் பெற்றோர்களுக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது என்று சொல்லி வாயை அடைத்து விட்டாள்.
 
போகப் போக, அவளிடம் நான் பேசா விட்டாலும், அவள் உண்மையானவள், மிக நல்லவள் என்பது இயல்பாகி விட்டது. பல சமயம், அவள் தாத்தாவிடம் கலகலப்பாக பேசிக் கொண்டிருக்கும் போது, நான் அமைதியாக உட்கார்ந்து இருப்பேன். அவள் என்னைக் கூடச் சீண்டுவாள். ஆனாலும் நான் அமைதியாக இருந்தாலும், அதை ரசிப்பேன். நாங்கள் இருவருமே பேசிக் கொள்ளாமலே, ஒருவர் மேல் ஒருவர் அன்பும், அக்கறையும், புரிதலும் கொண்டிருந்தோம்.
 
எப்போதாவது ஏதாவது எனக்கு ஆலோசனை சொல்ல வேண்டியிருப்பின், அவள் தாத்தாவுடன் இருக்கும் போது ஜாடையாக சொல்லிவிடுவாள்.
 
தாத்தா, ஹாஃப் இயர்லி எக்சாம்ல மார்க் குறைஞ்சிருக்கு, என்னான்னு கேக்க மாட்டீங்களா?


[Image: actress-asin-stills-02_720_southdreamz.jpg]

+2 பாடத்தையும் இப்பியே படிக்கச் சொல்லுங்க! சார், இஞ்சினியர் ஆகனும்னா, நல்ல மார்க் வேணும். சாதா காலேஜ்லல்லாம் படிக்கக் கூடாது. இஞ்சினியரிங்னா ஐ ஐ டி லதான் படிக்கனும். அவ்ளோ மார்க் வாங்கனும். சொல்லுங்க தாத்தா!
 
ஐஐடி க்கு இங்க கோர்ஸ் நடக்குது. பெஸ்ட் இன்ஸ்டியூட், போய் சேரச் சொல்லுங்க.
 
அவளுடைய ஆலோசனைகள் பெரும்பாலும், நன்மைக்காகவும், என் முன்னேற்றத்திற்க்காகவும்தான் இருக்கும். அவளது அக்கறை தாத்தாவிற்கும் நிம்மதியைத் தந்தது. நானும், அதில் பெரும்பாலானவற்றை ஏற்றுக் கொண்டேன்.
 
+2விலும், மிக அதிக மதிப்பெண்கள் வங்கினேன். இந்த முறை அவள் கொடுத்த கிஃப்ட்டை தாங்க்ஸ் என்று சொல்லி அமைதியாக வாங்கிக் கொண்டேன். என் மார்க்கிற்கு அண்ணா யுனிவர்சிட்டியில் பொறியியல் கிடைத்தாலும், நான், அவள் படித்த கல்லூரியிலேயே பொறியியல் தேர்ந்தெடுத்தேன். அதற்கும் அவள் பயங்கரக் கோபமானாள். என்னை, என் தாத்தாவின் மூலமாக பயங்கரமாக திட்டினாள்.
 
எல்லாம் நீங்க கொடுக்குற இடம். கேக்க யாரும் இல்லைல்ல, அதான்!
 
ஊருல அவனவன், அண்ணா யுனிவர்சிட்டில சீட் கிடைக்காதான்னு தவிக்கிறான், இவரு அங்கப் போக மாட்டாராம். இந்தக் காசெல்லாம் கடைசி வரைக்கும் வராது. சொந்த அறிவுதான், எப்பியுமே நம்மளை காப்பத்தும்… என்று ரொம்ப நேரம் திட்டினாள். தாத்தாவிற்கும், அவள் காட்டிய அக்கறையால் மகிழ்ச்சியும், நான் எடுத்த முடிவால் வருத்தமும் ஏற்பட்டது.
 
ஏன் ராசா இப்பிடி பண்ற என்று கேட்டார்.
 
ரொம்ப நேரம் அவள் திட்டிய போது ஏதும் சொல்லாவன், மெதுவாய் சொன்னேன்.
 
அவ, சொல்றது எல்லாம் சரிதான். ஆனா, என் எய்ம், இஞ்சினியரிங் மட்டுமில்லை. MBA வும்தான். அதுவும் ஐஐஎம் மாதிரியான காலேஜ்ல நான் MBA படிக்கனும். அதுக்கு என்னை நான் ப்ரிப்பேர் பண்ணனும்னா, இஞ்சினியரிங்ல எனக்கு பயங்கர சவால் இருக்கக் கூடாது. நான் இஞ்சினியரிங் நல்லா படிக்கனும், ஆனா நான் இஞ்சினியர் ஆக மாட்டேன், ஐ யம் கோயிங் டூ பி அ பிசினஸ் மேன்!
 
அது மட்டுமில்லை, அடுத்த வாரத்துல இருந்து நான், நம்ம கம்பெனிக்கு வரப் போறேன். பிசினஸ் கத்துக்கப் போறேன். இப்பல்லாம், நீங்க ரொம்ப டயர்டா தெரியறீங்க. நான் அண்ணா யுனிவர்சிட்டில படிச்சா, இதெல்லாம் செய்ய முடியாது. இதுக்கெல்லாம், ஒரு நல்ல காலேஜா இருந்தா மட்டும் போதும். இப்பியும் ஏதோ ஒரு காலேஜ்ல சேரலியே? அதான், அவ படிக்கிற காலேஜ்லியே சேர்றேன்னு சொன்னேன்.
 
நான் சொல்லி முடித்ததும் அங்கு பலத்த அமைதி. என் தாத்தாவிற்க்கோ, இந்த வயதில் எனக்கு இருந்த தீர்க்கமான அறிவையும், தன்னம்பிக்கையையும் கண்டு பெருத்த ஆனந்தம்.
 
அவ்வளவு நேரம் என்னைத் திட்டிய, என் அக்காவோ, என் முடியை கோதி கொடுத்து, ஆல் தி பெஸ்ட் டா, நீ நல்லா வருவடா என்றூ மனமாரச் சொன்னாள்.
அவள் என்னிடம் எவ்வளவு பாசம் காட்டினாலும், நான் அவளிடம் என்றுமே பாசம் காட்டியதில்லை. அதற்காக அவளும் தன்னை மாற்றிக் கொண்டதில்லை.
 
அதே சமயம், அவளை எனக்கு பிடிக்கும் என்பது, அவளுக்கும் தெரியும். தாத்தா கூட சில சமயம் மனமுருகிச் சொல்லியிருக்கிறார், எனக்கப்புறம், இவனுக்குன்னு யாரிருப்பாங்கன்னு ஃபீல் பண்ணியிருக்கேன், நீ வந்ததுக்கப்புறம் எனக்கு நிம்மதியா இருக்கு, இனி நான் செத்தாலும் கவலையில்லை என்று.
 
அவளோ தாத்தாவின் கையை பிடித்துக் கொண்டு, சும்மா கண்டதையும் போட்டு கொழப்பிக்காதீங்க. அதெல்லாம், சார் நல்ல படியா இருப்பாரு. அவருதான், என்னை மட்டுமில்லாம, இன்னும் எத்தனை பேர் இருந்தாலும் பாத்துக்குவாரு என்று நம்பிக்கையூட்டினாள்.
 
இப்படியே எங்களுடைய உறவு தொடர்ந்தது. இடையே நான் பிஈ முடித்து, சொன்ன படியே ஐஐஎம் மில் MBA முடித்தேன். எங்கள் பிசினசையும் முழுக்க என் கையில் கொண்டு வந்தேன். அது இப்போது பன்மடங்கு விரிந்து நின்றது. என் தந்தையின் அதிகாரம் முழுக்க பிடுங்கப் பட்டது. அவர் ஒரு பொம்மை எம் டி யாக மட்டுமே இருந்தார். அவரையோ, அவரது முதல் மனைவியையோ நான் கண்டு கொள்வது கிடையாது.
 
பணத்திற்க்காக, என் தந்தை என் மேல் காட்ட முயன்ற போலி பாசத்தை, என் பார்வையிலேயே கிள்ளி எறிந்தேன்.
 
இடையே அவளும் இஞ்சினியரிங் முடித்து, ஒரு ஐடி கம்பெனியில் வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள். தாத்தா எவ்வளவு வற்புறுத்தியும், எங்கள் நிறுவனத்தில் ஒரு பொறூப்பை எடுத்துக் கொள்ள அவள் சம்மதிக்கவில்லை. அதில் அவள் மிகப் பிடிவாதமாக இருந்தாள். இது எனக்கு அவள் மேலிருந்த மரியாதையை அதிகப்படுத்தியது.
 
அவளுக்கு கல்யாண வயது வருகையில், தாத்தாதான் அவளுக்கு வரன் பார்க்க ஆரம்பித்தார். என் தாத்தாவிற்கும், அவளுக்கும் இருந்த பாசத்தை உணர்ந்த அவள் பெற்றோர்களும், தாத்தாவே செய்தாலே மிகச் சிறப்பாகச் செய்வார் என்று அவர் போக்கில் விட்டனர்.
 
ஆனால் அவளோ, தன்னைப் போன்றே, ஏதாவது ஒரு வேலையில் இருக்கும், நல்ல குண நலன்கள் கொண்ட, ஓரளவு மத்திய வர்க்கத்தைச் சேர்ந்த வரனைப் பார்த்தால் மட்டுமே ஓகே சொல்லுவேன் என்று கடும் பிடிவாதம் பிடித்தாள். நானே கடுப்பில், இன்னும் கொஞ்சம் பெட்டரா பாத்தா என்ன என்று கேட்டதற்கு, என் கூட சகஜமாக பேசுறீயா என்று கேட்டு என் வாயை அடைத்தாள்.



[Image: asin_038.jpg]

அப்படிப் பார்த்த வரன்தான் இந்த ஹரீஸ். ஹரீஸ் என் தாத்தாவின், நெருங்கிய நண்பர் ஒருவருக்கு நன்கு தெரிந்தவர், மிகவும் நல்ல பையன் என்று தெரிய வருகையில், அவருக்கு அப்பா, அம்மா இல்லை, சித்தி, சித்தப்பாதான் என்றூ தெரிந்தும் சரி என்று அதற்கு ஓகே சொன்னார். அதற்கு முக்கிய காரணம், ஹரீஸூம் ஓரளவு பணக்காரர் என்பதும் மிக நல்ல கேரக்டர் என்பதும்தான். முதலில் இவளும், இந்த வரனுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. மிடில் கிளாசில்தானே பார்க்கச் சொன்னேன் என்றூ அடம்பிடித்தாள். ஆனால், தாத்தாவோ, பையன் நல்ல பையன், அவிங்க சைடு அப்பா அம்மா இல்லை, அதுனாலத்தான் அது இது என்று சொல்லி அவளை ஓகே சொல்ல வைத்தாள். 

ஹரீஸூடன் அவளுக்கு திருமணம் என்று முடிவு செய்த இரண்டு நாளில், என் தாத்தா மரணமடைந்தார். தாத்தாவின் இறப்பு என்னை பாதித்தடை விட, அவளை பாதித்ததுதான் மிக அதிகம். இறக்கும் தருவாயிலும், என்னிடமும், அவளிடமும், நீங்க ரெண்டு பேருந்தான் ஒருத்தருக்கொருத்தர் துணையா இருக்கனும் என்று சொல்லி விட்டு இறந்தார். தாத்தாவின் மரணத்தில்தான், அவள் எவ்வளவு தாத்தாவின் மேல் அன்பு வைத்திருந்தாள், எவ்வளவு பாசத்திற்க்காக ஏங்கினாள் என்பது அவள் கதறலில் தெரிந்தது. அப்பொழுதும், அவளிடம் இருந்து தள்ளி நின்றேனே ஒழிய, அவளை சமாதானப் படுத்தக் கூட இல்லை.

 
அந்தச் சமயத்திலும் கூட, தாத்தாவின் இறுதிச் சடங்குகளை தான் செய்வதாகவும், தான் அவருக்கு மகன் போல என்று என் தந்தை நாடகமாடுகையில், அவள்தான் என்னை தனியாக இழுத்து, அவரு டிராமா போட்டுட்டிருக்காரு, நீ வேடிக்கை பாத்துட்டிருக்க? அவரை மட்டும் இதுக்கு அலவ் பண்ண, உன் தாத்தா மட்டுமல்ல, நானும் இந்த ஜென்மத்துல உன்னை மன்னிக்க மாட்டேன். உனக்கு வேணா, உணர்ச்சி இல்லாம இருக்கலாம். ஆனா, மத்தவிங்க உணர்ச்சியை மதிக்கக் கத்துக்கோ என்று திட்டினாள்.

 
அதன் பின் நான் எல்லாவற்றையும் கையில் எடுத்துக் கொண்டேன். கொஞ்சம் கொஞ்சமாக என் தந்தையை ஓரம் கட்டினேன். தாத்தாவின் உயில் படி, அனைத்துச் சொத்துக்களும் எனது பெயருக்கு மாறியது. தாத்தாவின் ஆசைப்படி, அவளுக்கும் ஹரீசுக்கும் கல்யாணம் நடந்தது!
 
ஹரீஸை பார்க்கும் போது மிக நல்லவராய்தான் தோன்றினார். ஏனோ, எனக்கு அவரது சித்தப்பா, சித்தியைதான் பிடிக்கவில்லை. அவர்கள் ஹாரீஸிடம் பேசுவது, என் தந்தை, என் அம்மாவிடம் நடித்ததுதான் ஞாபகத்திற்கு வந்தது. இருந்தும் நான் அமைதியாக இருந்து விட்டேன். ஹரீஸும் நல்ல புத்திசாலியாகத்தான் இருந்தார். ஆகையால், அவர்கள் விஷயம் என்று ஒதுங்கி இருந்து விட்டேன்.

அதுதான் இவ்வளவு பெரிய பிரச்சினையாக மாறி நிற்கிறது!


எனது கதைகள்

சாது மிரண்டால் வீடும் கொள்ளாது!!!

வயது ஒரு தடையல்ல!
[+] 1 user Likes whiteburst's post
Like Reply


Messages In This Thread
RE: வயது ஒரு தடையல்ல! - by whiteburst - 12-07-2019, 12:38 PM



Users browsing this thread: 10 Guest(s)