காவியாவின் அடுத்த பயணம்(completed)
காவியாவிற்கு தருண் தந்த பதில் அவ்வளவு திருப்தி அளிக்கவில்லை என்றாலும் அதற்கு மேல் இந்த விஷயத்தில் அவளால் வேறு ஒன்றும் செய்ய முடியாது என்று புரிந்து அவள் இடத்திற்கு வந்தாள். கல்பனா காவியாவை ரொம்பவும் எதிர்ப்பார்ப்புடன் பார்ப்பது காவியாவிற்கு தெரிந்தும் கண்டுக்கொள்ளாமல் இருந்தாள். அந்த வாரத்தின் இறுதியில் புதிய ப்ராஜக்ட் பற்றி காஸ்டமர்களுடன் ஒரு மீடிங்கிற்கு காவியா ஏற்பாடு செய்து அதை கவனிக்க சொல்லி கல்பனாவை அறிவுறுத்த கல்பனா காவியா தனக்கு குடுத்த வாக்கை காப்பற்றிதான் இதை செய்வதாக நினைத்து சந்தோஷப்பட்டாள். காவியா மாலை கிரண் மொபைலை அழைத்து கல்பனாவிற்கு தான் குடுத்துள்ள பொறுப்பை பற்றி சொல்ல கிரண் அவளை ரொம்பவும் சந்தோஷம் என்று சொல்லி இதற்காகவே நான் உனக்கு ஒரு டின்னெர் தரனும் என்றதும் காவியா நான் ரெடி என்னைக்கு என்று கேட்க கிரண் நானே உன்னை அழைத்து சொல்லுகிறேன் என்று கட் செய்தான்.


வியாழன் அன்று மதியம் கல்பனாவை அழைத்து நாளைய கூட்டத்திற்கு ஏற்பாடுகள் பற்றி விசாரித்து அவளுக்கு மேலும் சில விவரங்களை சொல்லி அதையும் கவனிக்க சொல்லி தருணை சந்தித்து கூட்டத்தை பற்றி விவாதிக்க சென்றாள். தருண் காவியாவின் ஏற்பாடுகளை கேட்டு குட் என்று ஒரே வார்த்தையில் முடித்து கீப் மி அப்தேடேட் என்று சொல்லி அவளை அனுப்பினான். காவியா வெள்ளிகிழமை கொஞ்சம் பரபரப்பாகவே இருந்தாள் கல்பனாதான் மேடம் நீங்க கவலையே படவேண்டாம் நான் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்ல காவியா ஓகே என்று தலை அசைத்தாள்


வெள்ளிகிழமை எங்கள் நிறுவனத்தின் கான்பரென்ஸ் ஹாலில் தான் கூட்டம் நடக்க ஏற்ப்பாடு செய்யபட்டிருந்தது. காலை பதினோரு மணிக்கு எங்கள் கஸ்டமர் என்னை அழைத்து காவியா மேடம் ஒரு சின்ன மாற்றம் செய்ய முடியுமா என்று கேட்க நானும் சொல்லுங்க என்றேன். கூட்டத்தை எங்கள் இடத்திற்கு மாற்ற விரும்புகிறோம் காரணங்கள் கொஞ்சம் கான்பிடென்ஷியல் என்று சொல்ல நான் கொஞ்சம் தாமதித்து சார் இது பற்றி நான் கலந்து ஆலோசித்து உங்களை இன்னும் அரைமணி நேரத்தில் அழைக்கிறேன் என்று சொல்லி முடித்தேன். நான் நேராக தருண் காபினுக்கு சென்று அவரை சந்திக்க அவருடைய காரியதரசியிடம் கேட்க அவள் சார் ஒரு முக்கிய மீட்டிங் இல் இருக்கார் என்று தயங்க நான் பரவாயில்லை என்று சொல்லி அவளையும் மீறி தருண் காபின் கதவை தட்டி உள்ளே சென்றேன். தருண் நான் இப்படி பெர்மிஷன் இல்லாமல் உள்ளே வந்ததும் கொஞ்சம் அதிர்ச்சியுடன் என்ன காவியா ஏதாவது முக்கிய விஷயமா என்று கேட்க அங்கே இருந்தவர்கள் யாருமே எங்கள் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்பதால் நான் சொல்ல தயங்கினேன். தருண் புரிந்து கொண்டு கம் இன் என்று என்னை அவரது ப்ரைவேட் அறைக்குள் அழைத்து சென்றார். சொல்லு காவியா நீ ரொம்ப அப்செட் ஆகி இருப்பது தெரிகிறது என்றதும் நான் நடந்ததை சொன்னேன். தருண் அமைதியாய் கேட்டு எதிர்பார்த்தேன் என்றார். நான் என்ன சார் என்றதும் இல்லை அந்த ஆள் விளையாட ஆரம்பித்து இருக்கிறான் சரி நான் இந்த விஷயத்தை பார்த்து கொள்கிறேன் ஆனால் உனக்காக சொல்லுகிறேன் தி மீட்டிங் இஸ் கான்செல் டு என்றார். நீ மீண்டும் என்னை ஒரு ஒரு மணிநேரம் பொறுத்து மீட் பண்ணு என்று அனுப்பினார். நான் தருண் காண்பித்த தீவரத்தை தெரிந்து கல்பனாவிடம் கூட ஒன்றும் பகிர்ந்து கொள்ளவில்லை.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: காவியாவின் அடுத்த பயணம் - by johnypowas - 12-07-2019, 09:57 AM



Users browsing this thread: 6 Guest(s)