12-07-2019, 09:47 AM
நிர்ணயிக்கப்பட்ட கல்வி தகுதியைவிட கூடுதல் தகுதியுடையவர் பணி உரிமை கோர முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
நிர்ணயிக்கப்பட்ட கல்வி தகுதியைவிட கூடுதல் தகுதியுடையவர் தமக்கு பணிவழங்கும்படி உரிமை கோர முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ரயில் ஓட்டுனர் பணிக்கு விண்ணப்பித்து தேர்வான லட்சுமி பிரபா என்பவர், நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை விட அதிக தகுதியாக பி.இ. படிப்பை முடித்திருந்ததால் தேர்வு நடைமுறையிலிருந்து விலக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை எதிர்த்து லட்சுமி பிரபா தொடர்ந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் கல்வித்தகுதி உடையவர் பணி நியமிக்கப்பட்டாலும் நீக்கப்படுவார் என தேர்வு அறிவிப்பிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்டு மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதை மறுப்பதற்கில்லை என்றாலும், கூடுதல் தகுதியுடையவர் பணி நியமனம் கோர உரிமையில்லை என்று உத்தரவிட்டார்.

first 5 lakhs viewed thread tamil