Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
'இந்தியக் குடியுரிமையை தோனி விட்டுவிட்டு வருவாரா?, செய்தால் நாங்கள் தயார்': வில்லியம்ஸன் பதில்

[Image: 1kohlijpg]கோலியை கட்டித்தழுவிய வில்லியம்ஸன்: படம்ஐசிசி

இந்தியக் குடியுரிமையை வி்ட்டுவிட்டு வந்தால் தோனிக்கு வாய்ப்பளிக்க நாங்கள் தயார் என்று நியூஸிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்ஸன் சுவாரஸ்யமாக பதில் அளித்தார்.
மான்செஸ்டரில் நேற்று நடந்த உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது நியூஸிலாந்து அணி. தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து 24 ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியநிலையி்ல் தோனியும், ரவிந்திர ஜடேஜாவும் ஆடிய இன்னிங்ஸ் சிறப்புக்குறியது. தோனி 72 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தும், ஜடேஜா 59 பந்துகளில் 77 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். நியூஸிலாந்து அணி 2-வது முறையாக  இறுதிப்போட்டிக்குள் நுழைந்த
இந்த வெற்றி குறித்து நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸன் கூறியதாவது:
இந்த போட்டி அனைத்து வகையிலும் சிறப்பாகச் சென்றது என்பது நமக்குத் தெரியும். ஆனால் ஆட்டத்தின் திருப்புமுனையாக தோனியின் ரன்அவுட்தான் அமைந்தது. இதுபோன்ற தருணங்களில் ஆட்டத்தை பலமுறை சிறப்பாக தோனி முடித்துக்கொடுத்து இருப்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம். தோனி களத்தில் இருக்கும்போது பதற்றம் இருந்தது.
ஆனால், கப்திலின் டைரக்ட் ஹிட் ரன்அவுட்தான் அனைத்தையும் மாற்றிவிட்டது. நிச்சயம் இந்த ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு கடினமாகத்தான் இருந்தது. இந்த ஆடுகளத்திலும் தோனி நிலைத்து விளையாடுவதால், அவரின் விக்கெட்டை வீழ்த்தத்தான் அதிகமான முக்கியத்துவம் அளித்தோம்.
[Image: dhonijpg]படம் உதவி ஐசிசி
 
அடுத்தாற்போல் ஜடேஜாவின் விக்கெட்டும் மிக முக்கியமானது. இந்திய அணியில் உள்ள மற்ற அனைத்து வீரர்களைக் காட்டிலும் ஜடேஜாவின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. அவர் கையாண்ட ஷாட்கள், கையாண்டவிதம், இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுக்கும் வகையில் இருந்தது.
தோனி மிக அனுபவமான வீரர். இதுபோன்ற தருணங்களில் அவரின் அனுபவம் மிகவும் முக்கியமானது, அவரின் பங்களிப்பு இந்த போட்டியில் மட்டுமல்ல இதற்கு முந்தைய பல போட்டிகளிலும் அவர் பங்களிப்பை சிறப்பாகச்செய்துள்ளார் " எனத் தெரிவித்தார்.
அப்போது வில்லியம்ஸனிடம் நிருபர்கள், நியூஸிலாந்து அணிக்கு தோனியைத் தேர்வு செய்வீர்களா எனக் கேட்டனர். இந்த கேள்வியைக் கேட்டதும் சற்று வியப்புடன் பார்த்த வில்லியம்ஸன் சிரித்துக்கொண்டே பேசுகையில், " நியூஸிலாந்து அணிக்கு சட்டரீதியாக தோனியால் இப்போது விளையாட முடியாது. ஒருவேளை தோனி, இந்தியாவின் குடியுரிமையை விட்டுவிட்டு, நியூஸிலாந்து குடிமகனாக மாறத் தயாராக இருக்கிறாரா. அவ்வாறு தோனி மாறினால், நாங்கள் தோனியை நிச்சயம் அணிக்குள் எடுப்போம்" எனத் தெரிவித்தார்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 12-07-2019, 09:45 AM



Users browsing this thread: 62 Guest(s)