11-07-2019, 06:26 PM
மீண்டும் விலைபோனது காப்பான் கேரள உரிமை
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால் என இரண்டு மொழி முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ள படம் காப்பான். இவர்களுடன் ஆர்யா, சமுத்திரகனி, சாயிஷா சைகல் என மினி நட்சத்திர பட்டாளமும் இந்த படத்தில் நடித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி இந்தப்படம் ரிலீசாக இருக்கிறது. மோகன்லால் படம் என்பதாலும் சூர்யாவுக்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் இருப்பதாலும் இந்த படத்திற்கு கேரளாவிலும் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த மாதம் இந்த படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை புலி முருகன் படத்தை தயாரித்த முலக்குப்பாடம் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியது. ஆனால் அதன்பின் வெளியான சூர்யாவின் என்ஜிகே படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய தோல்வியை தழுவியது. தொடர்ந்து சூர்யாவின் கடந்த சில படங்கள் வசூல் ரீதியாக பின்னடைவை சந்தித்து வருவதால் காப்பான் பட கேரள வெளியீட்டு உரிமையை திருப்பிக் கொடுத்து வெளியேறியது முலக்குப்பாடம் பிலிம்ஸ். இந்த நிலையில் இந்த படத்தை காயத்ரி பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்கிற நிறுவனம் கேரளாவில் வெளியிடும் உரிமையை வாங்கியிருக்கிறது
![[Image: NTLRG_20190711105549745393.jpg]](https://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_20190711105549745393.jpg)
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால் என இரண்டு மொழி முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ள படம் காப்பான். இவர்களுடன் ஆர்யா, சமுத்திரகனி, சாயிஷா சைகல் என மினி நட்சத்திர பட்டாளமும் இந்த படத்தில் நடித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி இந்தப்படம் ரிலீசாக இருக்கிறது. மோகன்லால் படம் என்பதாலும் சூர்யாவுக்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் இருப்பதாலும் இந்த படத்திற்கு கேரளாவிலும் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த மாதம் இந்த படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை புலி முருகன் படத்தை தயாரித்த முலக்குப்பாடம் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியது. ஆனால் அதன்பின் வெளியான சூர்யாவின் என்ஜிகே படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய தோல்வியை தழுவியது. தொடர்ந்து சூர்யாவின் கடந்த சில படங்கள் வசூல் ரீதியாக பின்னடைவை சந்தித்து வருவதால் காப்பான் பட கேரள வெளியீட்டு உரிமையை திருப்பிக் கொடுத்து வெளியேறியது முலக்குப்பாடம் பிலிம்ஸ். இந்த நிலையில் இந்த படத்தை காயத்ரி பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்கிற நிறுவனம் கேரளாவில் வெளியிடும் உரிமையை வாங்கியிருக்கிறது
first 5 lakhs viewed thread tamil