Adultery சாது மிரண்டால் வீடும் கொள்ளாது! - Completed
#51
பாகம் - 26


அன்று காலை, ஊரிலிருந்து மைதிலியின் அப்பா வந்திருந்தார். இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

திடீரென்று, ப்ரேமைப் பார்க்க, அவன் வீட்டுக்கு, மூன்று பேர் வந்திருந்தனர்.
வணக்கம், என் பேரு கணேஷ். நான் ஹை கோர்ட்டுல லாயரா இருக்கேன். குடும்ப நல வழக்குகள்ல ஸ்பெஷலிஸ்ட் நான். இவிங்க ரெண்டு பேரும் எனக்குத் தெரிஞ்சவிங்க. இவிங்க பேர் அவ்வளவா முக்கியமில்லை. ஆனா இவிங்க ரெண்டு பேரும் டிடக்டிவ் ஏஜன்சி நடத்துறாங்க.

இதெல்லாம் என்கிட்ட ஏன் சொல்றீங்க!

சொல்றேன்! முதல்ல இதைக் கொஞ்சம் பாருங்களேன் என்று ஒரு ஃபைலை அவர்கள் நீட்டினார்கள். பார்த்தவனின் முகம் மாறியது.

அது ப்ரேமைப் பற்றிய டிடக்டிவ் ஏஜன்சி ரிப்போர்ட். அதில், ப்ரேம், ப்ரியாவின் நெருக்கமான பல புகைப்படங்கள், இருவரும் எப்போதெல்லாம் சந்தித்துக் கொண்டனர், என்ன பேசினர், ஃபோன் பில்கள், அவர்களுக்காக எவ்வளவு செலவு செய்தார்கள், சில சிடிக்கள் என்று பலவும் இருந்தது. அப்பிடியே இதையும் பார்த்து விடுங்க என்று ஒரு மொபைலில், ஹெட் ஃபோனுடன், ஒரு வீடியோவைப் பார்க்கச் சொன்னார்கள். அது ப்ரேமின் வீட்டில் அவன் நடத்திய லீலைகளை அவனுக்கே காட்டியது!

ப்ரேமுக்கு, பேச்சே வரவில்லை.

திடிரென்று ஞாபகம் வந்தாற் போல், அவர்களிடம் சொன்னான், ப்ளீஸ் நாம தனியா பேசிக்கலாம். இங்க வீட்ல வெச்சு வேணாம், நாம வெளில வெச்சு பேசிக்கலாம் வாங்க என்றான்.

ஏன் இங்க என்ன?

இல்ல சார், இங்க ஃபாமிலியோட இருக்கேன். அதான்… ப்ளீஸ் வாங்க!

அவசரப்படுறீங்களே, நீங்க இன்னொரு கேள்வியை இல்லை கேட்டிருக்கனும்! அதைக் கேக்கவேயில்லை?

என்ன கேட்டிருக்கனும்?

இந்த வீடியோ எப்டி எங்களுக்கு வந்துச்சு? நாங்க எதுக்கு இங்க வந்திருக்கோம்? எங்களை யாரு இங்க அனுப்புனா? இதையில்ல நீங்க கேட்டிருக்கனும்?

அதான? என் வீட்டுல நடந்தது எப்பிடி இவிங்களுக்கு கிடைச்சுது? பயந்தவன், தயங்கியே கேட்டான்.

உங்களை யார் அனுப்புனா???

உங்க மனைவி மைதிலிதான்!

வாட்! மிகப் பெரும் அதிர்ச்சிக்கு ஆனவன், சட்டென்று திரும்பிப் பார்த்தான். அங்கு, இவ்வளவு நேரம் நடந்த செயல்களைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தனர் மைதிலியும், அவள் அப்பாவும்! அவர்கள் முகத்தில் எந்த உணர்வும் இல்லை.

மைதிலிக்கு தெரியுமா? அவர்கள் சொல்லித்தான் இவர்கள் வந்திருக்கிறார்களா? என்னச் சொல்லுகிறார்கள் இவர்கள். மண்டையே வெடித்து விடும் போல் இருந்தது அவனுக்கு!

நீங்க இப்ப எதுக்கு இங்க வந்துருக்கீங்க? திரும்பி வக்கீலைப் பார்த்து கேட்டான்.

பராவாயில்லியே, இப்ப கொஞ்சம் புத்திசாலி மாதிரி நடந்துக்குறீங்க. வீடியோவும், ரிப்போர்ட்டும் பாத்தீங்கள்ல? பயங்கர ஸ்ட்ராங்கான எவிடென்ஸ். கேஸ் போட்டா, சீட்டிங் பண்ணது, கள்ள உறவு வெச்சுகிட்டது, மனைவியை துன்புறுத்தியது அது இதுன்னு சொல்லி வருஷக்கணக்குல உள்ள வெக்க முடியும். உங்க மனைவி உங்க மேல விவாகரத்துக்கு வழக்கு போட்டு, அதுக்கும், மானநஷ்டத்துக்கும் சேத்து எக்கச்சக்கமா காசு கேப்பாங்க. சும்மாவே, சட்டம் பொண்ணுங்களுக்கு சப்போர்ட்டா இருக்கு. உங்க விஷயத்துல நீங்களே எல்லா ஆதாரமும் தந்துருக்கீங்க. என்ன தண்டனை கிடைக்கும்னு நினைச்சுப் பாருங்க! என்றார் வக்கீல்.

அது மட்டுமில்லை மிஸ்டர் ப்ரேம், இந்த விஷயம், இன்னமும் ராஜாவுக்கு தெரியாது. தெரிஞ்சா அவர் சும்மா விடுவாரா? அவர் தனியா கேஸ் போடுறாரோ, ஆள் வெச்சு அடிக்கிறாரோ, இல்லை உன்னைக் கொலையே பண்றாரோ, யார் கண்டா. எல்லாத்துக்கும் மேல, இதெல்லாம் தெரிஞ்சா ஊர்ல, உன் மரியாதை என்னாவும் யோசிச்சிக்க! இதைச் சொன்னது வேறு யாருமில்லை மைதிலியேதான். மைதிலியும், அவள் அப்பாவும், இப்போது அவனருகே வந்திருந்தனர்.

அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவர்கள் சொன்னது எல்லாமே நடக்கும் எனத் தெரியும். தான் இனி எந்தப் பக்கமும் தப்ப முடியாது என்று மட்டும் அவனுக்கு புரிந்தது. இருந்தும் கேட்டான்.

ஏன் மைதிலி இப்டி பண்ணிட்ட?

அறைஞ்சிடுவேன், பண்றதெல்லாம் நீ பண்ணிட்டு, என்னைக் கேக்குறியா?

தப்பு பண்ணாச் சொல்லியிருக்கலாம்ல. இப்பிடியா பழிவாங்குவ?

ஆமா இவரு குழந்தை, ஒண்ணும் தெரியாது. நாங்க இவரைத் திருத்துறோம். நீ பண்ணதுக்கு, உன்கிட்ட நின்னு பேசுறதே பெரிய விஷயம்.

அவசரப்படாத மைதிலி, நாம ஒரு சமரசத்துக்கு வரலாம்! இதெல்லாம் வெளிய வந்தா உனக்குந்தானே கஷ்டம், அசிங்கம் எல்லாம்…

என்னா, வாழ்க்கை பிச்சை போடுறியா? நீ தப்பு பண்ணதுல எனக்கு என்னடா அசிங்கம்? இன்னும் உன் புத்தி போலீல்ல. இனி, உன் கூட பேச்சில்ல. நான் கோர்ட்லதான் பேச்சிக்கிறேன். போலீசோட வரேன். அப்பதான் உனக்கும் புத்தி வரும். யாருக்கு அசிங்கம்னும் தெரியும்.

அவனுக்கு பயம் வந்துவிட்டது. முன்பிருந்த மைதிலி இல்லை இவள் என்று தெளிவாகத் தெரிந்தது! இல்லை மைதிலி… நான் அப்டி பேசலை, இப்ப நான் என்ன செய்யனும், சொல்லு.

இப்போது லாயர் பேசினார். நீங்க மியுச்சுவல் கன்சென்ட்ல விவாகரத்து கொடுக்கனும்!

அவ்ளோதானே, கண்டிப்பா கொடுத்திடுறேன். என்னை விட்டுடுங்க ப்ளீஸ்!

அவசரப்படாதீங்க. இந்த விடுதலைப் பத்திரத்தை படிச்சுப் பாத்துட்டு, ஓகேவான்னு சொல்லுங்க.

அவனும் படித்தான். அதில் இருந்த காரணம் அவன் முகத்தில் அறைந்தது.
அது, திருமணத்திற்கு முன்பிருந்தே அவனுக்கு ஆண்மைக் குறைபாடு இருந்ததாகவும், அதை மறைத்து மைதிலியைக் கல்யாணம் செய்ததாகவும், இப்போது மனம் வருந்தி, அவளுக்கு விடுதலை அளிக்கச் சம்மதம் தெரிவிப்பதாகவும் இருந்தது!

என்ன சார் இப்பிடி ஒரு காரணம் சொல்லியிருக்கீங்க?

ஓ, அப்ப உண்மையை எல்லாம் சொல்லி விவாகரத்து கேட்கலாமா?

அய்யய்யோ வேணாம்! ஆனா, இந்தக் காரணம் சொல்லாம… என்று இழுத்தான்.

இப்போது மைதிலியின் அப்பா பேசினார். டேய், நீ பண்ணக் காரியத்துக்கு உன்னை வெட்டி போட்டிருப்பேன். என் பொண்ணுக்காக பொறுத்துகிட்டேன். இதுக்கு மேலனாச்சும், நான் என் பொண்ணுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சுத் தரனும்! அதுக்கு இந்தக் காரணம் இருந்தாதான் ஓரளவு நல்ல வாழ்க்கை அமையும். நீ பண்ண தப்புக்கு, என் பொண்ணு வாழ்க்கை எதுக்குடா வீணாப் போகனும்?

ஒழுங்கு மரியாதையா சொல்ற இடத்துல கையெழுத்துப் போட்டுட்டு சீக்கிரம் முடிச்சுக் கொடுத்தா, எல்லாருக்கும் நல்லது. இல்லாட்டி, கோர்ட்டு தண்டனை கொடுக்குதோ இல்லியோ, என் கையால ஒரு வெட்டு இருக்கு. அந்தப் பொம்பளையோட புருஷன் கையால ஒரு வெட்டு இருக்கு. எப்புடி வசதி?

யோசித்தவனை பார்த்து மேலும் சொன்னார், இப்பியும் ஒன்னும் கெட்டுப் போகலை. ஏதோ புதுசா வேலைக்குப் போறன்னு மைதிலி சொல்லுச்சு. போயி, புதுசா உன் வாழ்க்கையை ஆரம்பிச்சிக்க. மன்னிச்சு விட்டர்றேன். என்ன சொல்ற? ஓகேயா இல்லியா?

ப்ரேமுக்கு அழுகை வந்திருந்தது. என்ன சொல்வது என்று புரியவில்லை.

இப்போது லாயர் பேசினார், ரொம்ப யோசிக்காதீங்க. நீங்க பார்கெயின் பண்ற இடத்துல இல்லை. கோர்ட்டு இப்பல்லாம், மியுச்சுவல் கேசுக்கே பெரிய அமவுண்ட் ஜீவனாம்சமா தரச் சொல்லுது. உங்களுது சீட்டிங் வேற. கோர்ட்டும் பெருசா ஃபைன் போடும். தப்புக்கு ஜெயிலும் கிடைக்கும். வேலைக்கும் போக முடியாது. உங்க வாழ்க்கையும் முடிஞ்சிரும்! இவிங்க, எதுவுமே கேக்கலை. சம்மதம் மட்டுந்தான்! அதுக்கே நீங்க அவிங்க காலைத் தொட்டு கும்பிடனும்! ஒழுங்கா ஃபார்மாலிட்டி முடிக்க கோ ஆபரேட் பண்ணுங்க.

ப்ரேம் வேறு வழியில்லாமல் தலையாட்டினான். அவர்கள் நீட்டிய இடங்களில் கையெழுத்து போட்டான்.

எல்லா ஃபார்மாலிட்டியும் முடிய ஒண்ணு ரெண்டு மாசமாகிடும். ஏதாவது தேவைன்னா, நாங்க காண்டேக்ட் பண்றோம்.

அவர்கள் உடனே, மைதிலியும், அவள் அப்பாவும் கிளம்பினர்.

கிளம்பும் போது மைதிலி சொன்னாள், ப்ரியாவுக்கு விஷயம் சொல்றதுன்னா சொல்லிக்கோ! சொன்னா உனக்குதான் அசிங்கம்! ஆனா, நீ அவளுக்குச் சொன்ன அடுத்த நிமிஷம், ராஜாவுக்கும் இந்த ரிப்போர்ட் போயிடும்! எங்களுக்கு எப்பிடித் தெரியும்னு நினைக்காத. உனக்குத் தெரியாம இவ்ளோ செஞ்ச எங்களுக்கு அது தெரியாதா? ஆங், அப்புறம் சூசைட் கீசைட் பண்ணிக்கிறதா இருந்தாச் சொல்லிடு. எங்களுக்கும் அது ஓகேதான். ஆனா, அதுக்கெல்லாம் கொஞ்சம் சுய மரியாதை வேணும்! உனக்கு எங்க இருக்கு அது?

ப்ரேம், பிரமை பிடித்துப் போய் உட்கார்ந்திருந்தான். தொடர்ந்து விழுந்த அடிகள், அவனை அப்படியே புரட்டிப் போட்டிருந்தது.


அவனுக்குத் தெரியாது, அவனுக்கு இன்னும் கொஞ்சம் அடி பாக்கியிருக்கிறது என்று!
[+] 1 user Likes whiteburst's post
Like Reply


Messages In This Thread
RE: சாது மிரண்டால் வீடும் கொள்ளாது!!! - by whiteburst - 11-07-2019, 10:11 AM



Users browsing this thread: 6 Guest(s)